PDA

View Full Version : இனியவளே...



PUTHUVAI PRABA
27-08-2012, 11:05 PM
ஈயும் எறும்புமாய்
மொய்த்துக்கொண்டிருக்கின்றன
மையினால் எழுதப்பட்ட
உன் பெயரில்

புதுவைப்பிரபா

கீதம்
30-08-2012, 11:47 PM
அவள் பெயரையே ஈயும் எறும்பும் மொய்க்கிறதென்றால்...அவளை? :)

அழகான கற்பனை...

பாராட்டுகள் புதுவைப்பிரபா.

கலைவேந்தன்
31-08-2012, 03:53 AM
பேனாவிலே மையிட்டேளா.. இல்லை மலர்கொண்டு வண்டுகொள்ளும் மதுவிட்டேளா..?

கவிதை கலக்கலா கீது..

நாஞ்சில் த.க.ஜெய்
31-08-2012, 07:37 AM
மை என நினைத்து தேனூற்றி விட்டீரோ ...கவிதை அருமை ..

சுகந்தப்ரீதன்
31-08-2012, 08:49 AM
அவள் பெயர் தேன்மொழி தானே..பிரபா..?!:)

அமரன்
31-08-2012, 10:20 AM
முந்திரிக்கொட்டை...


அவள் பெயர் தேன்மொழி தானே..பிரபா..?!:)

PUTHUVAI PRABA
31-08-2012, 05:08 PM
நான் எழுதியது கவிதையே அல்ல. பின்னூட்டம் இட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்கள்.அத்தனை பேருக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்

பென்ஸ்
20-09-2012, 07:32 PM
ஈயும் எறும்புமாய்
மொய்த்துக்கொண்டிருக்கின்றன
மையினால் எழுதப்பட்ட
உன் பெயரில்

புதுவைப்பிரபா


நல்ல கற்பனை நண்பரே...

பென்ஸ்
20-09-2012, 07:36 PM
அவள் பெயரையே ஈயும் எறும்பும் மொய்க்கிறதென்றால்...அவளை? :)

அழகான கற்பனை...

பாராட்டுகள் புதுவைப்பிரபா.

அதுதான் நாயாய் காதலன் மேய்வனே...

மன்றத்தில் எப்போதோ வசித்த நியாபகம்...

நீ நீயாய்
நான் நாயாய்..