PDA

View Full Version : கண்கள்



ஷாஜஹான்
27-08-2012, 07:00 AM
நான் எங்கேயோ பார்க்கும்போது....
புன்னகையில் கோர்த்த
முத்து மாலையை மூக்கு கோபுரத்தின் கீழ் தொங்கவிட்டுக்கொண்டு
என்னை நோக்கி பறக்கும்,
படபடத்துக்கொண்டே சிறகடிக்கும்,
வண்ணத்துப்பூச்சிகள் உன் கண்கள்.

சட்டென்று நான் திரும்புப்பார்க்க....
என் பார்வை பட்டு தடுக்கி
உன் கருவிழிகள் எதிர்திசையில்
வீழ, தவறி விழுகிறதோ
அவை ஏந்தி வந்த முத்துமாலை
இதழ் குளத்தில்…!?

நான் வந்து முத்துக்குளிக்கவோ
மீட்டு எடுக்க !!!???

aasaiajiith
27-08-2012, 07:18 AM
நல் முயற்சி !!!

ஆதி
27-08-2012, 12:21 PM
//
நான் எங்கேயோ பார்க்கும்போது....
புன்னகையில் கோர்த்த
முத்து மாலையை மூக்கு கோபுரத்தின் கீழ் தொங்கவிட்டுக்கொண்டு
என்னை நோக்கி பறக்கும்,
படபடத்துக்கொண்டே சிறகடிக்கும்,
வண்ணத்துப்பூச்சிகள் உன் கண்கள்.//


நல்ல ரசிகர் நீங்கள்
என்ன ஒரு வர்ணனை
மூக்கு கோப்புரத்தின் கீழ் தொங்கும் முத்துமாலை புன்னகை
அந்த முத்துமாலையை சுமந்து பறக்கும் கண்கள் வண்ணத்து பூச்சிகள்


//சட்டென்று நான் திரும்புப்பார்க்க....
என் பார்வை பட்டு தடுக்கி
உன் கருவிழிகள் எதிர்திசையில்
வீழ, தவறி விழுகிறதோ
அவை ஏந்தி வந்த முத்துமாலை
இதழ் குளத்தில்…!? //


இந்த வரிகள் அப்படியே நிகழ்வை படம் போட்டூ காட்டுகிறது
படக்கென புன்னகையை மறைத்த இதழ்களை, இதழ் குளத்தில் விழுந்த முத்துமாலையென வர்ணித்தவிதம் அற்புதம்


//நான் வந்து முத்துக்குளிக்கவோ
மீட்டு எடுக்க !!!??? //

வந்து முத்துகுளிக்கவா ? மீட்டு எடுக்கவா ?
அழகிய கேள்வி
முத்து குளிக்க போய் மீட்க ஆள் இல்லாமல் தவிப்பவர்கள் பலர், உங்கள் துணிச்சல் பாராடுக்கு உரியது


அடிக்கடி வந்து இது போன்ற அழகிய கவிதைகளை விருந்து அளியுங்கள் நண்பரே

A Thainis
27-08-2012, 12:22 PM
கண்கள் அழகு, வாழ்த்துக்கள் ஷாஜகான்.

அமரன்
27-08-2012, 01:08 PM
காதல் வசப்பட்டவன் கவிதை இப்படி இருக்க வேண்டும். பாராட்டுகள் ஷாஜகான்..

முத்துப் பல்..

புன்னகை நார்..

வண்ணத்துப்பூச்சிக் கண்..

மூக்குக் கோபுரம்..

இதழ்க்குளம்..

ஐந்தடுக்கையும் பார்க்கும் போது தெரிகிறதே.. அதுதான் மன்மதன் அம்போ?
உங்களைப் போல் கவிஞர்கள் இல்லாவிடில் மன்மதனும் அம்போ..

இமைத்தாழ்வாராத்தில்
வெட்கச் சாரலில் நனைந்தபடி
காதல் சொட்டிச் சுழலும்
கருப்புத் தாஜ்மகாலைக் காண..

எத்துணை தவம் இருக்க வேண்டும்.

அந்த வரம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது ஷாஜகான்.

ஆதவா
27-08-2012, 01:26 PM
இதுதான்.... எதிர்பார்த்தது இதுதான்.

ஒரு சிறுநிகழ்வை, பெரிதாக்கிக் காண்பது... கவிஞனின் கண்கள் மைக்ரோஸ்கோப் மாதிரி இருக்கவேண்டும். நுண்ணிய நிகழ்வுகளையெல்லாம் படம்பிடிக்கவேண்டும்... இங்கே பிடிக்கப்பட்டிருப்ப்பதால் நிறையபேருக்கு பிடித்திருக்கிறது.

ஒரு காதல் கவிதையில் காதலியை எப்படி வர்ணிக்கவேண்டும் என்பதை உணர்த்தியவாறு இருக்கிறது கவிதை.

வாழ்த்துக்கள் ஷாஜகான்


ஐந்தடுக்கையும் பார்க்கும் போது தெரிகிறதே.. அதுதான் மன்மதன் அம்போ?
உங்களைப் போல் கவிஞர்கள் இல்லாவிடில் மன்மதனும் அம்போ..

.

எங்கம்மா அப்பயே சொல்ச்சி... இவங்ககூடல்லாம் சேராத சேராதன்னு....

என்னைய சொல்லணும்...

சுகந்தப்ரீதன்
01-09-2012, 06:49 PM
இங்கே பெரியவாக்காள் சொன்னதை பெருமையுடன் வழிமொழிகிறேன்... அழகிய கவி வர்ணனை..!!:icon_b:

மும்தாஜுக்கு வாழ்த்துக்கள் ஷாஜகான்..:)