PDA

View Full Version : துரோகமிழைத்த ஒருவனைஆதி
26-08-2012, 03:59 PM
உனக்கு துரோகமிழைத்தவனை
எவ்வண்ணமெல்லாம் நீ தண்டிக்கலாம் ?

அகால இரவொன்றில்
அவன் அறைக்குள் பெற்றோலூற்றி
நெருப்பு வைக்கலாம்

நல்லவிதமாய் உறவாடி
நயவஞ்சக காய்களை நகர்த்தி
வாழ்வின் பெரும்பாதாளத்தில் கவிழ்கலாம்

ஊர்பூராவும் அவனை பற்றி
அவதூறு பரப்பலாம்

பார்க்கிற இடத்திலெல்லாம்
பாளாரென அவனை அறைய சீறிபாயலாம்

விடுதியொன்றில் எதேச்சையாய்
சந்திக்க நேர்கையில்
முகத்தில் உமிழ்ந்து அவமதிக்கலாம்

கூலிப்படை கொண்டு
குரூரமாய் தாக்கி ஊனப்படுத்தலாம்

அவன் குடும்பத்தில்
உட்பூசல் உண்டாக்கி நிலைகுலைக்கலாம்

காலம் முழுக்க அவ்ன் செய்ததை
எண்ணி எண்ணி
சபித்து கொண்டே இருக்கலாம்

ஒவ்வொரு பொழுதும்
அவன் நிம்மதியை அழிக்க*
ஒரு பொல்லாததை செய்தவாறே இருக்கலாம்

என்றாலும்
எவ்வளவு பழிவாங்கினாலும்
உன் மனரணமும் அழுத்தமும் சினமும் பழியும்
குறைய போவதே இல்லை
ஆதலால் நீ
அவனை மன்னித்துவிடலாம்...

ஜானகி
26-08-2012, 04:30 PM
அவனை மன்னித்துவிடலாம்..

இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே..... அப்பப்பா....தலை சுற்றுகிறது.......தமிழ் சீரியல் பார்த்தமாதிரி இருக்கிறது...!

அமரன்
26-08-2012, 05:18 PM
சபாஷ்..

ஒரு சமூகத்தை வழி நடத்தக் கூடிய பண்புடன் கவிதையின் பயணப் பாதை அமைந்திருக்கிறது.

சிறந்த ஒன்றைக் கொடுப்பதை விட, பலதைக் காட்டிச் சிறந்ததைத் தெரிவு செய்து கொடுத்தால் திருப்தியும் ஏற்றுக்கொள்ளலும் கிடைக்கும். வழிநடத்தும் பண்புகளில் அதுவும் ஒன்று. கவிதையும் அவ்வாறே அமைந்திருக்கிறது.

அவனை மன்னித்து விடலாம்,
அவன் துரோகத்தை..?

பட்டறிவுகளை மறந்து விட்டால் பட்டே ஆக வேண்டும்.

கச்சிதமான கருவும் கவிதையில் உண்டு.

பராட்டுகள் ஆதன்.

இளைத்தல், இழைத்தல். எது சரி?

A Thainis
26-08-2012, 09:13 PM
கவிதையை வாசிகின்றபோது பெரிதும் அதிர்ந்துபோனேன், பயங்கரவாதம் கண்டு உறைந்து போனேன் ஆனால் கடைசி வரிகளில் பற்றி எரியும் பயங்கரவாத தீயை தண்ணீர் ஊற்றி அணைத்திட கண்டேன். இருந்தாலும் இன்னும் அச்சம் போகவில்லை.

ஆதி
28-08-2012, 11:23 AM
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

M.Jagadeesan
28-08-2012, 12:43 PM
துரோகம் இழைத்தவனுக்கு மன்னிப்புதான் மிகப்பெரிய தண்டனை.!

ஆதி
28-08-2012, 01:41 PM
பின்னூட்டத்துக்கு நன்றிங்க ஐயா

நாஞ்சில் த.க.ஜெய்
28-08-2012, 04:45 PM
மன்னிப்பு என்பது மறுமுறை துரோகம் இளைத்தவனை கண்டால் ஒதுங்கி செல்வதல்ல ,அவ்வாறே ஒதுங்கி சென்றாலும் இழப்பு ஒன்றும் இல்லை ..மற்றொன்று அவ்வாறே மன்னித்தாலும் துரோகமிளைத்தவன் தவறினை உணரும் வரை அந்த மன்னிப்பினை எவ்வகையில் நோக்குவான் , இன்றைய நிலை இவ்வாறாகத்தான் இருக்கிறது அப்படியிருக்க மன்னிப்பு என்பது சாத்தியப்படாது அதற்கு பதில் மௌனமே தேவலை ....அருமை ஆதன் தொடருங்கள் ...

கீதம்
29-08-2012, 04:23 AM
எவ்வளவு பழிவாங்கினாலும்
உன் மனரணமும் அழுத்தமும் சினமும் பழியும்
குறைய போவதே இல்லை


மிகவும் உண்மையான வரிகள். கவிதை முழுவதையும் தாங்கிப் பிடிக்கும், அடர்த்தியான வரிகள். எத்தனை செய்தும் ஆறா ரணத்தை அப்படியே விட்டுவிடுதல் நலம்.

துரோகத்தின் கத்தி ஏனோ நினைவுக்கு வந்துபோகிறது. துரோகமிழைக்கப்பட்ட மனதின் எண்ணங்களை அழகாய்ப் படம்பிடித்தக் கவிதைக்குப் பாராட்டுகள் ஆதன்.

கலைவேந்தன்
29-08-2012, 05:52 AM
துரோகம் என்பது தவறல்ல. கொலை..!

தவறை மன்னிக்கலாம். கொலைக்கு மன்னிப்பு கிடையவே கிடையாது.

இந்த என் திண்மையான கருத்தினால் தான் இக்கவிதை பலமுறை நான் வாசித்தும் பின்னூட்டம் இட தயங்கவைத்தது.

துரோகத்தை எவ்வகையில் எந்த மனநிலையில் மன்னிக்கலாம்..? அந்த துரோகத்தினால் பெரிதும் பாதிக்கப்படா நிலையிலோ அல்லது மனம் செத்துப் போகாத நிலையிலோ மன்னிக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தெரிந்தே செய்த படுகொலை போன்ற துரோகத்தை மன்னிப்பது என்னனம்..?

ஒரு துரோகத்தால் தனது சகலத்தையும் இழந்து நிற்கும் ஒருவரிடம் இக்கவிதையைக் காட்டுங்கள். அவரின் குமுறலைப் பதிவு செய்துபாருங்கள். துரோகத்தின் வீரியம் புரியும்.

துரோகத்தை ஒரு அறியாமல் செய்த பிழைபோல் மன்னிக்கச்சொல்வது வாசிக்க நல்லா இருந்தாலும் வாழ்க்கைக்கு ஏத்ததாயில்லை. கருவில் எனக்கு உடன்பாடில்லை.

மன்னியுங்கள் ஆதன்.

சுகந்தப்ரீதன்
05-09-2012, 03:19 PM
அல்லது மறந்துவிடலாம்..!!

-கடைசியில் இந்த வரியையும் கவிதையில் சேர்த்திருக்கலாம்..!!:)

ஆதன் உன் எழுத்துகள் அடுத்த பரிமாணத்தை நோக்கி பயணிக்கின்றன.. வாழ்த்துக்கள்டா..:icon_b:

கோபாலன்
22-10-2012, 08:52 AM
துரோகத்தை மன்னிப்பது என்பது கொஞ்சம் கடினமாக இருந்தாலும், அதைத்தவிர வேறு நல்லவழி இருப்பதாக தோன்றவில்லை. ஆனாலும் துரோகம் செய்தவரை நேரில் பார்க்கும்போது அந்த வலிகளின் வடுக்களை மறைப்பது அரியது.
நல்ல கவிதை:)

ந.க
28-10-2012, 11:23 AM
மன்னிப்பதால் மனிதன் தெய்வமாகின்றான். இத மெய்ப்பிக்கின்ற கவிதை. கோழைத் தனமாய் அல்ல - பெருங்கருணை மனதோடு ......நன்றி..