PDA

View Full Version : விமர்சனம்



A Thainis
25-08-2012, 12:20 PM
கல்லடிபடாத
கனிமரங்கள் இல்லை
கல்லடிபட்டோமே - என
மரங்கள் கனிதர
மறுப்பதில்லை

விமர்சிக்கபடாத
மனிதர்கள் இல்லை
விமர்சிக்கபடுகின்றோமே - என
ஒதுங்குபவர்களின் வாழ்வு
என்றும் ஒளிர்வதில்லை

முறிக்கப்டுகின்றோமே - என
எந்த முருங்கை மரமும்
ஒப்பாரிவைப்பதில்லை
முறிக்க முறிக்கத்தான் - அது
உயரே ஓங்கி எழும்புகின்றது

வாழ்க்கை பயணத்தில்
விமர்சனங்கள் அவசியமே
எதையும் தாங்கும் இதயத்தோடு
எற்றுக்கொண்டால் - நம்
மனமும் குணமும் வாழ்வும் பண்படுமே

M.Jagadeesan
25-08-2012, 12:32 PM
விமர்சனங்களைத் துணிவோடு ஏற்றுக் கொள்பவர்களே வாழ்க்கையில் முன்னேறமுடியும். மற்றவர்கள்

நாம்செய்யும்தவறுகளைச் சுட்டிக் காட்டும்போது அதைத் திருத்திக் கொள்ள முயலவேண்டும்.

வாழ்த்துக்கள் தைனிஸ் !

அமீனுதீன்
25-08-2012, 12:41 PM
தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு, நன்றி அன்பரே...

ஆதவா
25-08-2012, 01:12 PM
நல்ல கவிதைங்க...
விமர்சனம் என்பது வெள்ளைத்தாளின் சிறு புள்ளி போன்றது. பெருக பெருக, சித்திரம் கிடைக்கும்!!

நீங்க அவரை நினைச்சுத்தானே எழுதியிருக்கீங்க?

அன்புடன்
ஆதவா

A Thainis
25-08-2012, 01:38 PM
விமர்சனம் கவிதையை வாசித்து, நல்ல கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட ஜெகதீசன், அமீனுதீன் மற்றும் ஆதவா அவர்களுக்கு நன்றி.

சுகந்தப்ரீதன்
01-09-2012, 07:10 PM
விமர்சித்தலின் அடிப்படை நோக்கம் நன்மை விளைவித்தலுக்காக என்பதை அதை எதிர்கொள்பவர் உணரும் வகையில் விமர்சிக்க வேண்டும்..!! பெரும்பாலான இடங்களில் மௌனமே மிகச்சிறந்த விமர்சனமாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.!!

இப்போதெல்லாம் விமர்சனத்தை பற்றி விமர்சனம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களாம்... ஹி..ஹி.. நம்ப தைனிஸ் கவிதை எழுதுற மாதிரி..!!:icon_b:



விமர்சனம் என்பது வெள்ளைத்தாளின் சிறு புள்ளி போன்றது. பெருக பெருக, சித்திரம் கிடைக்கும்!!ஓவியனின் பார்வை ரசிக்க வைக்கிறது..!!:)

A Thainis
01-09-2012, 10:05 PM
விமர்சித்தலின் அடிப்படை நோக்கம் நன்மை விளைவித்தலுக்காக என்பதை அதை எதிர்கொள்பவர் உணரும் வகையில் விமர்சிக்க வேண்டும்..!! பெரும்பாலான இடங்களில் மௌனமே மிகச்சிறந்த விமர்சனமாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.!!

இப்போதெல்லாம் விமர்சனத்தை பற்றி விமர்சனம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களாம்... ஹி..ஹி.. நம்ப தைனிஸ் கவிதை எழுதுற மாதிரி..!!:icon_b:

ஓவியனின் பார்வை ரசிக்க வைக்கிறது..!!:)

மௌனமே சிறந்த விமர்சனமாக இருந்தால் விமர்சனத்தை பற்றி பேசும் விமர்சன கவிதைக்கு ஏன் இந்த ஹி... ஹி விமர்சனம், உங்களது விமர்சனமே ஒரு விந்தை, ஓவியனைப் போல உங்கள் விமர்சனமும் மௌனமாக இருந்திருக்கலாமே, ஆச்சரியம் ஏன் உங்கள் மௌனம் ஹி ... ஹி என்று சிரித்து மௌனத்தை கலைத்தது.

Keelai Naadaan
02-09-2012, 04:19 AM
நல்ல பதிவு.
விமர்சனம் செய்வது தனி கலை.
மன்றத்தில் சில பின்னூட்டங்களை-விமர்சனங்களை கண்டு ஆச்சர்யபடுவதுண்டு.

ரசனையையும் அனுபவங்களையும் பொறுத்து விமர்சனங்களும் வித்தியாசப்படும்.
அரசியல் விசயங்களில் நடுநிலையான விமர்சனம் என்பது அரிதாகி விட்டது

நல்ல விமர்சனங்கள் செடிக்கு உரம் போல படைப்பாளியை பக்குவபடுத்துகிறது.

A Thainis
02-09-2012, 07:56 AM
விமர்சனம் படைப்பாளியை பக்குவபடுத்துகிறது என்பதுதான் உண்மை, அதே நேரத்தில் படைப்பையும் மேலும் சிறப்புற செய்கிறது என்பதும் உண்மை.

அமரன்
02-09-2012, 09:25 AM
பக்கத்தில் இருந்து பரிமாறும் போது, எங்கள் முகத்தைப் பார்த்து தன் சமையலை எடை போட்டிக்கொள்வாள் அம்மா/மனைவி.

அலுவலகத்தில் வைத்து நாம் சாப்பிட்ட பின்பு, தொலைபேசியில் சொல்வதைக் கேட்டு தன் சமையலை எடைபோடுவாள் அம்மா/மனைவி.

இப்படித் தம் சமையலை எடைபோட்டு, எமக்குப் பிடித்த மாதிரி சமையல் செய்யக் கற்றுக்கொள்வார்கள். ஆனால் சத்தான சாப்பாட்டில் சமரசம் என்ற கதைக்கே இடம் இராது..

படைப்பாளிகளும் அப்படித்தான்.. அருகிலிருந்து படித்தால் எங்கள் முகவோட்டத்தில் எம் மனவோட்டத்தைக் கணித்து படைப்பை எடை போடுவர். மன்றம் போன்ற தளங்களில் நாம் ரசித்து ருசித்ததை எழுதினால் தம் படைப்பை எடை போடுவர். படைப்பாற்றலை மேம்படுத்துவர்.

சமையலை குறை சொல்லாமல், ஆஹா.. ஓஹோ எனப் புகழ வேண்டும் என்று சில மனைவியர் "ஆசை"ப்படுவதைப் போல, படைப்பின் குறையைச் சொல்லாமல் நிறையை மட்டும் சொல்ல வேண்டும், நிறை என்று ஒன்று இல்லாவிட்டாலும் நிறை என்றுதான் சொல்ல வேண்டும் என்று அடம்பிடிக்கும் படைப்பாளிகளும் உண்டு.

படைப்புகளுக்கு விமர்சனமும் முக்கியம். ஆரோக்கியம் சார்ந்து அவை இருக்க வேண்டியது அவசியம். ஏற்றுக்கொளும் பக்குவம் அனைவருக்கும் அவசியம்.

மதி
02-09-2012, 09:35 AM
விமர்சனம் பற்றிய அழகான கவிதைக்கும் அதை விமர்சித்தவர்களுக்கும் பாராட்டுகள். விமர்சனம் இன்றி உலகில்லை.

A Thainis
02-09-2012, 09:47 AM
விமர்சனம் இன்றி உலகில்லை என்ற மதியின் கருத்தும், அவற்றை ஏற்றுக்கொளும் பக்குவம் அனைவருக்கும் அவசியம்
என்ற அமரனின் பதிவும் அருமையான கருத்து பரிமாற்றங்கள்,
சிறந்த படைப்புக்கும், படைப்பாளிக்கும் இப்பதிவுகள் வலிமை தருகின்றன

நாஞ்சில் த.க.ஜெய்
02-09-2012, 01:07 PM
விமர்சனம் கூறும் விமர்சனத்தின் தெளிவுரைகள் ....

கீதம்
17-09-2012, 12:25 AM
விமர்சனம் பற்றிய அருமையானக் கருத்துக்களை அழகாய் விரிக்கும் கவிதை. பாராட்டுகள் தைனிஸ்.

கவிதையின் முதல்பத்தி முன்பு கவிச்சமரில் எழுதியதொன்றை நினைவுக்குக் கொண்டுவருகிறது.

கல்லெறிவோருக்காக
நான் கவலைப்படவில்லை!
காமுறுகிறேன் அவர்
கவனம் கண்டு!
காய்த்தமரம்தானே
கல்லடிபடுமாம்!
இன்னும் காய்த்துக்கொண்டிருக்கிறேன்
என்பதில் இதமான கர்வமே!

எனவே படைப்புக்கான விமர்சனங்களை நம் படைப்பின்மீதான அக்கறை என்று நினைத்தால் போதும். படைப்புகள் மேலும் மெருகேறும்.

aren
17-09-2012, 02:49 AM
நல்ல கவிதை. ஆனால் நமக்கு முக்கிற்குமேல் உடனே கோபம் வந்துவிடுகிறதே. என்ன செய்வது.

நல்ல கவிதை. இன்னும் கொடுங்கள்.

A Thainis
17-09-2012, 06:49 PM
விமர்சனம் கவிதைக்கு தங்கள் கருத்து பதிவுகளால் விமர்சனத்திற்கு புதுபொலிவு செய்துள்ள கீதம், நாஞ்சில் ஜெய் மற்றும் அரேன் ஆகியோருக்கு நன்றி.