PDA

View Full Version : மக்கட்பேறு.



M.Jagadeesan
25-08-2012, 12:43 AM
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் [07:06]

http://4.bp.blogspot.com/-ZcLUeKgA3b4/Tohm5v3fSLI/AAAAAAAADMQ/ewxMqEtJSX8/s400/07%2B06.jpg (http://4.bp.blogspot.com/-ZcLUeKgA3b4/Tohm5v3fSLI/AAAAAAAADMQ/ewxMqEtJSX8/s1600/07%2B06.jpg)


பொருள் : தாம் பெற்ற குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்காதவர்களே, குழலோசை இனிது,

யாழோசை இனிது என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

கீதம்
25-08-2012, 07:03 AM
பக்கத்து வீட்டுக் குழந்தையொன்று இப்போதுதான் பேசத் துவங்கியுள்ளது. மிழற்றும் மழலைக் கேட்கும்போதெல்லாம் மனதுக்குள் ஜிவ்வென்று உற்சாகம் கொப்பளிக்கிறது. மனம் பல வருடங்கள் பின்னோக்கிச் சென்று என் பிள்ளைகளின் மழலை கேட்ட பொழுதுகளை நினைத்து மகிழ்கிறது. பிற குழந்தைகளின் மிழற்றலே இத்தனை இன்பம் தரும் என்றால்... பெற்றக் குழந்தைகள் பற்றி சொல்லவா வேண்டும்? தம் மக்கள் என்று குறிப்பிட்டுச் சொன்ன வள்ளுவரை எப்படித்தான் பாராட்டுவது? அழகான குறட்பகிர்வுக்கும் விளக்கத்துக்கும் நன்றி ஐயா.

கலைவேந்தன்
26-08-2012, 03:18 AM
மிக மிக உன்னதமான குறள். இன்றும் பொருந்தும் இனிய குறள். நன்றி ஐயா.

M.Jagadeesan
26-08-2012, 03:31 AM
கீதம், கலைவேந்தன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!