PDA

View Full Version : நீள இரவுகள்!Sasi Dharan
23-08-2012, 01:47 PM
காணவில்லை அப்படியொரு
இரவையும்
அப்படியொரு நிலவையும்
அகமகிழ்ந்த அவளையும்
மீண்டும் ...

நீடித்த புன்னகையுடன்
நீண்ட இரவுகள் அவை...
விழிகளை தோய்க்கும் உறக்கம் உதறி
விரும்பி இதயம் தொலைத்த
இரவுகள் அவை...

காயும் நிலவின் நிழலும்..
நீடித்த நிசப்தமும்
வடிந்த தென்றலும்..

அலையடிக்கும் ஆசைகளும்
விழி துடைத்த ஆறுதலும்

உள்ளம் நெகிழ்ந்த பரிமாற்றங்களும்
வெம்பிய வேட்கைகளும்

இளமையின் வேகங்களும்
பொய் கோபங்களும்...
சின்ன சண்டைகளும்

மௌன இரவுகள் முழுதும்
மடை திறப்பதேல்லாம் இளம் இதயத்தின்
உணர்வு போராட்டங்களே..

அந்த இரவுகளில் நிலவோடும்
அவள் நினைவோடும்
பயணித்த களைப்பு

இன்றும் மயங்கி சரியும் சில
இரவுகளின்
கனவுகளில் மங்கிய ஒளிர்கிறது..

செயலிழந்து மூலையில் கிடக்கும்
அலைபேசியை பார்த்தாலும் மனதில்
மந்தகாசம் பரவுகிறது

உறக்கமற்ற சில இரவுகளில்
விழித்திருந்தாலும் விழி மடல்களில்
விழி நீரால் விறிகின்றது

A Thainis
23-08-2012, 04:07 PM
காணவில்லை அப்படியொரு

நீடித்த புன்னகையுடன்
நீண்ட இரவுகள் அவை...
விழிகளை தோய்க்கும் உறக்கம் உதறி
விரும்பி இதயம் தொலைத்த
இரவுகள் அவை...

உறக்கமற்ற சில இரவுகளில்
விழித்திருந்தாலும் விழி மடல்களில்
விழி நீரால் விறிகின்றது

சசி தரண் உங்களுது நீள இரவு பயண கவிதை, இனிமை, தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

கலைவேந்தன்
23-08-2012, 05:05 PM
இரவு பற்றிய அழகான வடிவமைப்பு. அருமையான படைப்பு. பாராட்டுகள் சசி தரன்..!

கீதம்
25-08-2012, 08:39 AM
முதல் பத்தியிலேயே மனதின் சோகக் குமிழியை வார்த்தைகள் படாரென்று உடைத்துவிட, வடிவதெல்லாம் உள்ளிருக்கும் பிரிவாற்றாமைத் துயரும் அது தரும் வலிகளுமே... நீள் இரவுகளின் மீள்நினைவுகளால் நிரம்பிய கவிதையும் ரசிக்கவைக்கிறது வார்த்தை வடிவழகால். பாராட்டுகள் Sasi Dharan.

Sasi Dharan
25-08-2012, 10:24 AM
நன்றி தைனிஸ்.

Sasi Dharan
25-08-2012, 10:26 AM
முதல் பத்தியிலேயே மனதின் சோகக் குமிழியை வார்த்தைகள் படாரென்று உடைத்துவிட, வடிவதெல்லாம் உள்ளிருக்கும் பிரிவாற்றாமைத் துயரும் அது தரும் வலிகளுமே... நீள் இரவுகளின் மீள்நினைவுகளால் நிரம்பிய கவிதையும் ரசிக்கவைக்கிறது வார்த்தை வடிவழகால். பாராட்டுகள் Sasi Dharan.

நன்றி கீதம்!

Sasi Dharan
25-08-2012, 10:27 AM
இரவு பற்றிய அழகான வடிவமைப்பு. அருமையான படைப்பு. பாராட்டுகள் சசி தரன்..!

நன்றி கலைவேந்தன்!

ஜானகி
25-08-2012, 12:40 PM
சோகத்திலும் அழகு மிளிர்கிறது என்ற உண்மை புலனாகிறது உங்கள் பாடலில்...!

ஆதவா
14-09-2012, 01:33 PM
கவிதைக்கென்றே சில வார்த்தைகள் இருக்கின்றதோ எனும் சந்தேகம் பல கவிதைகளைப் படிக்கும்பொழுதெல்லாம் ஏற்படும். ஒருவேளை கவிதையின் அந்தரங்க வார்த்தைகளாக இருக்குமோ என்று நினைத்துக் கொள்வேன். இந்த கவிதையிலும் அப்படி நிறைய “கவிதை வார்த்தைகள்” இருக்கின்றன. பொதுவாக இரவுகளைப் பற்றி எழுதும் கவிதைகளில் நிறைய காணப்படுகின்றன. இரவு, தனிமை, பிரிவு, அழுகை போன்றவை ஒன்றோடொன்று இணைந்து வெளிப்படுகின்றன. பொதுவாக இரவு குறித்த பல பார்வைகள் கவிதைகளில் காணலாம்.. இரவு என்பது குறைந்த ஒளி என்றார் பாரதி. எவ்வளவு அற்புதம்!! இரவு குற்றங்களின் பொழுது என்று படித்திருக்கிறேன். என்னைப் பொருத்தவரை இரவு ஒரு மர்மம். பெரும்பாலான இரவுகளில்தான் பூமி உயிர்ப்போடு இருக்கிறது. தனது உயிரை இரவுகளின் பிடியில்தான் தக்கவைத்திருக்கிறது. அது மர்மம், எதனாலும் அறுதியிட்டுச் சொல்லமுடியாத முடிச்சவிழ்க்காத சூச்சுமம்.

இக்கவிதையின் இரவு கடந்தகாலத்தின் அசைபோடல். ஏக்கம், காதல் கொடுத்திருக்கும் வலியினை உணரும் ஒரு பொழுது! ஒரு நினைவின் போராட்டத்தை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் சசிதரன்... வெல்கம் டூ தமிழ்மன்றம். உங்களுக்கான இடம் இது.

காணவில்லை. அப்படியொரு இரவையும்.... மீண்டும்..

ஒவ்வொரு இரவையும் தேடிக்கொண்டிருப்பவனே இதனை நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஆக, பிரிவின் வலியை கொஞ்சம் நன்றாக உணர்ந்து கொள்ளமுடிகிறது. “அகமகிழ்ந்த அவள்” அவளைப் பற்றிய மேன்மையை மிக அருமையாக சொல்லுகிறது. அவளைப்பற்றிய ஒரு சிறுகுறிப்பு!

காயும் நிலவின் நிழலும்..
நீடித்த நிசப்தமும்
வடிந்த தென்றலும்..

கவிதை வடிக்கும்பொழுது நான் நிறைய யோசிப்பேன். ஆனால் கடைசியில் ‘முதலில் என்ன யோசித்தேனோ அதுதான் வெளிப்படும். ஒரு நிகழ்வினைச் சுற்றியுள்ள புறப்பொருள்களை கவிதையில் எப்படி காண்கிறோம் என்பதை என்னால் சொல்லமுடிவதில்லை. நீங்கள் நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். இரவின் நீளத்தை அதன் புறப்பொருளால் விளக்கிட முடிகிறது இக்கவிதை. இரவு எல்லாவற்றையும் வழங்குகிறது. நீளம் குறைவதும் அதிகரிப்பதும் அவரவர் தனித்திறம்..

மௌன இரவுகள் முழுதும்
மடை திறப்பதேல்லாம் இளம் இதயத்தின்
உணர்வு போராட்டங்களே..

மெளன இரவுகள் மடைதிறப்பது என்பது மிக அழகான பதம். மெளனத்தின் முரண்செயல்! சப்தமிடாமல் உரக்கக் கூவும் சூக்குமம்! அருமை அருமை!

தொடர்ந்து எழுதுங்கள் சசிதரன். உங்கள் பெயரிலேயே நண்பர் ஒருவர் இங்கே எழுதிக் கொண்டிருந்தார். அவரை நினைவுபடுத்துகிறது எழுத்தும் பெயரும்!!

அன்புடன்’
ஆதவா

சுகந்தப்ரீதன்
17-09-2012, 08:15 PM
ஊடலும் கூடலும் நிகழ்ந்த காலங்கள் நினைவுகளில் நிரம்பி வழியும் ஏகாந்த கணங்களை இத்தனை எளிதாய் அழகியலுடன் காட்சிபடுத்த உங்களால் மட்டுமே முடியுமென்று தோன்றுகிறது...!!:)

பாண்டிய நாட்டு தலைநகரிலும் இந்நிகழ்வு ஏற்பட்டிருக்கக்கூடும்... அண்ணலும் ஏங்கினான்... அவளும் ஏங்கினாள்...!! கலக்குங்க சசி சார்..!!:icon_b:

Sasi Dharan
20-09-2012, 12:38 PM
சோகத்திலும் அழகு மிளிர்கிறது என்ற உண்மை புலனாகிறது உங்கள் பாடலில்...!
நன்றி ஜானகி!!

Sasi Dharan
20-09-2012, 12:51 PM
மெளன இரவுகள் மடைதிறப்பது என்பது மிக அழகான பதம். மெளனத்தின் முரண்செயல்! சப்தமிடாமல் உரக்கக் கூவும் சூக்குமம்! அருமை அருமை!

தொடர்ந்து எழுதுங்கள் சசிதரன். உங்கள் பெயரிலேயே நண்பர் ஒருவர் இங்கே எழுதிக் கொண்டிருந்தார். அவரை நினைவுபடுத்துகிறது எழுத்தும் பெயரும்!!
அன்புடன்’
ஆதவா
நன்றி திரு ஆதவா!
உங்களது விமர்சனத்திலிருந்து நீங்க இந்த கவிதையை நன்கு உள்வாங்கி வாசிச்சிருக்கீங்கனு தெரியுது...
ரொம்ப நன்றிங்க...

அப்படிங்களா!! ஆனா அது நான் இல்லைங்க... உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி,,, தொடர்ந்து எழுத ஆசைதான்!!!

Sasi Dharan
20-09-2012, 12:54 PM
ஊடலும் கூடலும் நிகழ்ந்த காலங்கள் நினைவுகளில் நிரம்பி வழியும் ஏகாந்த கணங்களை இத்தனை எளிதாய் அழகியலுடன் காட்சிபடுத்த உங்களால் மட்டுமே முடியுமென்று தோன்றுகிறது...!!:)

பாண்டிய நாட்டு தலைநகரிலும் இந்நிகழ்வு ஏற்பட்டிருக்கக்கூடும்... அண்ணலும் ஏங்கினான்... அவளும் ஏங்கினாள்...!! கலக்குங்க சசி சார்..!!:icon_b:

ஹா.. ஹா.. உங்க சூசக வரிகள் புரிகிறது திரு. சுபி.
ரொம்ப நன்றிங்க உங்க பதிவுக்கு!!!