PDA

View Full Version : கறை நல்லது



M.Jagadeesan
23-08-2012, 09:24 AM
பள்ளி செல்லும் பிள்ளைக்கு
படிப்பில் அக்கறை நல்லது.

மாதர் பருவம் எய்தினால்
காதலில் அக்கறை நல்லது.

வரவில் செலவை அடக்கியே
வாழும் அக்கறை நல்லது.

உறவுக்குள் துன்பம் வந்திட்டால்
உதவும் அக்கறை நல்லது.

வாழும் நாளைத் தொடங்கிட
வைகறைப் பொழுது நல்லது.

ஜானகி
23-08-2012, 01:25 PM
மனித சமுதாயம் பயனுற நீங்கள் காட்டும் அக்கறையும் மிக மிக நல்லதே...!

அமரன்
23-08-2012, 01:46 PM
ஞானகி அம்மாவின் கருத்தை வழிமொழிகிறேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
23-08-2012, 02:37 PM
கறை கொண்ட இதயங்கள் உலவும் உலகில் அக்கறையுடன் கூறிய கவிதை அருமை ...

A Thainis
23-08-2012, 03:12 PM
பொழுதும் நாம் மேற்கொள்ளும் செயலும் சிறப்பாய் இருந்திட தேவை நிச்சயம் வைகறை வணக்கம், வைகறை துயில் எழுதல் நம் வாழ்வுக்கே நன்று.

கலைவேந்தன்
23-08-2012, 04:02 PM
சமூகத்தின் பேரில் தாங்கள் காட்டும் அக்கறை மிகவும் நல்லது. பாராட்டுகள் ஐயா..!

கீதம்
23-08-2012, 10:50 PM
வாழ்க்கையின் நல்ல கறைகளைக் காட்டி, தத்தளிக்கும் மனங்களைக் கரைசேர்க்க உதவும் தங்கள் கவிதை அசத்தல். பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
24-08-2012, 02:42 AM
ஜானகி, அமரன், ஆ.தைனிஸ்,கலைவேந்தன்,நாஞ்சில்.த.க.ஜெய்,கீதம் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

ஜானகி
24-08-2012, 02:37 PM
ஞானகி அம்மாவின் கருத்தை வழிமொழிகிறேன்.

என்னை ஞானியாக்கியதற்கு மிகவும் நன்றி...!

அனுராகவன்
30-08-2012, 05:30 PM
அக்கறை காட்டி
இக்கறை என்னை
இழுத்த உங்கள்
நல் கவிக்கு என்
நன்றிகள்........