PDA

View Full Version : மக்கட்பேறு.



M.Jagadeesan
23-08-2012, 03:14 AM
மக்கட்பேறு

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின் [07:02]


http://4.bp.blogspot.com/-DApvFY3ikDc/TthxSc7gHAI/AAAAAAAACjc/UnN1X525MFk/s400/07%2B02.jpg (http://4.bp.blogspot.com/-DApvFY3ikDc/TthxSc7gHAI/AAAAAAAACjc/UnN1X525MFk/s1600/07%2B02.jpg)


பொருள்: யாருடைய பழிச் சொல்லுக்கு ஆளாகாமலும், நல்ல குணங்கள் பொருந்திய மக்களைப் பெற்றவர்க்கு , ஏழு பிறவிகளிலும் துன்பம் நெருங்காது.

கீதம்
23-08-2012, 05:26 AM
மக்கட்பேறு பற்றிய மிக அற்புதமான குறட்பகிர்வுக்கும் விளக்கத்துக்கும் அதை மெய்ப்பிக்கும் அழகிய படப்பகிர்வுக்கும் மிகவும் நன்றி ஐயா.

M.Jagadeesan
23-08-2012, 06:12 AM
கீதம் அவர்களுக்கு நன்றி!

ஆதி
23-08-2012, 07:31 AM
அடுத்த பிறப்பில் துர்பிள்ளைகளை பெற்றாலும் பரவாயில்லையா எனும் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை

ஏழும் பிறப்பு என்பதை விட

எழும் பிறப்பும் அதாவது எடுக்கும் பிறப்பெல்லாம் தீமை நெருங்காது, எப்போது ?, நீ நல்ல பிள்ளைகளை பெற்றால்

என்பதாகவே கொள்கிறேன்

M.Jagadeesan
23-08-2012, 08:32 AM
அடுத்த பிறப்பில் துர்பிள்ளைகளை பெற்றாலும் பரவாயில்லையா எனும் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை

ஏழும் பிறப்பு என்பதை விட

எழும் பிறப்பும் அதாவது எடுக்கும் பிறப்பெல்லாம் தீமை நெருங்காது, எப்போது ?, நீ நல்ல பிள்ளைகளை பெற்றால்

என்பதாகவே கொள்கிறேன்

தங்கள் கருத்து சரி யானால் குறள், " எடு பிறப்பும் " என்று தொடங்கவேண்டும்.வள்ளுவருக்கு ஏழு என்ற எண்ணின் மீது பற்று அதிகம். அவருடைய இராசி எண் 7 ஆகும்.மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கை 133.அவற்றின் கூட்டுத்தொகை 7.குறட்பாக்களின் மொத்த எண்ணிக்கை 1330.அவற்றின் கூட்டுத்தொகை 7. "திருவள்ளுவர் " என்ற பெயரில் 7 எழுத்துக்கள் உள்ளன. எனவே எழுபிறப்பு என்பதே சரி என்று எண்ணுகிறேன்.

ஆதி
23-08-2012, 09:01 AM
எழு பிறப்பும்

எழு பிறப்பெல்லாம் என்று கொள்ள முடியும் தானே ?

7 அவரின் ராசி எண் என்பதை நகைச்சுவைக்காவே நீங்கள் குறிபிட்டதாய் எடுத்துக் கொள்கிறேன்

ராசி மீது பற்று உள்ளவன் என்றால், கணிதத்துக்கும், அதன் சூத்திரத்துக்கும் சில அதிகாரங்கள் வைத்திருப்பான் இல்லையா

நாஞ்சில் த.க.ஜெய்
23-08-2012, 02:34 PM
யார் பழிச்சொல்லுக்கும் ஆளாகாதிருக்கும் தலைவனுடைய மக்கள் நல்ல குணங்கள் பொருந்தியவராக இருப்பதென்பது அவர் கையில் இல்லையே ..சூழ்நிலையால் ஒருவன் சில இமை சிமிட்டும் நாழிகையில் தன்னிலை மறந்து செய்யும் செயல்களால் கூட தவறுகள் நிகழும் போது இந்த குறள் கூறும் உண்மை எவ்வாறு சாத்தியமாகும் ....