PDA

View Full Version : அன்பு = 100



A Thainis
21-08-2012, 09:46 PM
அ உயிரெழுத்தின்
முதல் எழுத்தே - நீ
எண்ணிக்கையில் 1 :lachen001:
ன் மெய்யெழுத்தின்
இறுதி எழுத்தே - நீ
எண்ணிக்கையில் 18 :sprachlos020:
பு என்ற உயிர்மைஎழுத்தே
உன் எண் வரிசை 81 - கண்டீரா
அன்பு என்ற தமிழ் சொல்லின்
கூட்டுத்தொகை 100 என்று :icon_b:
அன்பென்றால் நூறு
நூறுன்றல் முழுமை
முழுமைஎன்றால் நிறைவு
அன்பு வழிச் சென்றால்
முழுநிறைவுன்ற மகிழ்ச்சியும்
அதன் வழி வரும் அமைதியும்
நூற்றுக்கு நூறு - நம்
வாழ்வில் சாத்தியமே - இதுவே
சான்றோரின் சரித்திரமே :wuerg019::wuerg019::wuerg019:

கீதம்
23-08-2012, 10:59 PM
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகுமாம்.

எண்ணிய எழுத்தும் பொன் எனத்தகுதே இங்கு.

ஆராய்ந்து சமன்பாடுகள் மூலம் மெய்ப்பித்து, அன்பின் திறனை அறிவுறுத்தும் நிலையில் உள்ளதே இன்றைய அவசரயுகம்.

வித்தியாச சிந்தனைக்குப் பாராட்டுகள் தைனிஸ்.

கலைவேந்தன்
24-08-2012, 03:34 AM
எப்படில்லாம் அறை போட்டு யோசிக்கிறாய்ங்கப்பா.. :icon_b:

அசத்தல் தைனிஸ்.

அமரன்
24-08-2012, 07:41 AM
அன்பு=100 என்ற தலைப்பூ மணத்தில் மனம் இழுக்கப்பட்டு, 100 என்றாம் முழுமை; அன்புதான் எதையும் முழுமை ஆக்குது என்று சொல்ல எண்ணி வந்தால். அதையும் சொல்லி விட்டார் கவிஞர். பாராட்டுகள்.

M.Jagadeesan
24-08-2012, 01:16 PM
அன்பு என்றால் 100 என்று நிரூபித்த ஆ. தைனிஸ் அவர்களுக்கு நன்றி!

A Thainis
24-08-2012, 01:36 PM
பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு என்பதற்கு அன்பு என்ற சொல்லின் அமைப்பும் ஒரு சிறப்பு.