PDA

View Full Version : லட்டு திங்க ஆசையா?



M.Jagadeesan
21-08-2012, 01:38 AM
கையெழுத்து ஒன்று போட்டால்
கால்லட்சம் தருவதாய்ச் சொன்னான்.
கால்லட்சம் என்பது எனக்குக்
கனவிலும் பார்க்காத தொகைதான்.

லட்டு திங்க ஆசைதான் ஆனால் ........

மணமாகி குழந்தைகள் பெற்ற என்னைக்
கணக்குப் பண்ணினாள் காரிகை ஒருத்தி

லட்டு திங்க ஆசைதான் ஆனால்...........

ஐந்து லட்சம் முதலீடு செய்தால்
ஐந்து ஆண்டுகளில் ஐம்பது ஆகுமென்று
அறிவிப்பு செய்தான் வட்டிக் கடைக்காரன்

லட்டு திங்க ஆசைதான் ஆனால்........


உழைக்காமல் வருகின்ற லட்டைக் காட்டிலும்
உழைத்து வருகின்ற பூந்தி மேலென்று
உள்மனம் எனக்கு உறுத்திச் சொன்னதால்
தள்ளினேன் லட்டைத் தக்க சமயத்தில்.

அன்புரசிகன்
21-08-2012, 02:39 AM
நீங்கள் ஒவ்வொரு லட்டாக சொல்றீங்க...
அவனவன் இரண்டு லட்டுத்திங்க ஆசையா என்று சொல்லி 4 5 என்று அடுக்கிக்கொண்டு போறாங்களே... :D
நல்லதொருவிளிப்புணர்வூடட்டல்...

jayanth
21-08-2012, 10:38 AM
உழைக்காமல் வருகின்ற லட்டைக் காட்டிலும்
உழைத்து வருகின்ற பூந்தி மேலென்று
உள்மனம் எனக்கு உறுத்திச் சொன்னதால்
தள்ளினேன் லட்டைத் தக்க சமயத்தில்.



என்னே ஒரு நல்ல மனோபாவம்...

கீதம்
21-08-2012, 12:43 PM
சமகாலத்திய நகைச்சுவையோடு நல்லதொரு கருத்தும் சொல்லி, மனம் கவர்ந்துவிட்டீர்கள். உழைக்காமல் வரும் லட்டை விடவும், நம் உழைப்பினால் கிடைக்கும் பூந்தி ஒரு விள்ளலானாலும் விலைமதிப்பற்றதுதான். நயமான வரிகளில் நியாயமான கருத்து மிளிரும் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

சுகந்தப்ரீதன்
01-09-2012, 06:24 PM
:4_1_8::aktion033::aktion033:

A Thainis
01-09-2012, 06:30 PM
இந்தக் கவிதையில் வருகின்ற லட்டு சாப்பிட்ட லாக்கபிலத்தான் இருக்கணும், பூந்திய சாப்பிட்டா நல்ல செரிமானமும் இருக்கும் வாழ்க்கையில நமக்கு மானமும் இருக்கும்.

அனுராகவன்
02-09-2012, 04:43 PM
லட்டு திங்க ஆசையா..
எட்டு லட்டு விட்டு திட்டு தலையில் கொட்டு........

M.Jagadeesan
03-09-2012, 04:36 AM
அன்புரசிகன்,ஜெயந்த், கீதம்,சுகந்தப்பிரீதன்,ஆ. தைனிஸ், அச்சலா ஆகியோரின் பின்னூட்டத்திற்கு நன்றி!

நாஞ்சில் த.க.ஜெய்
03-09-2012, 05:04 AM
சுவையான லட்டு மூலம் லட்டான கருத்து ஆனால் நிகழ்வில் நிகழ்ந்தால் சாத்தியமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலவில்லை ..பகிர்வுக்கு நன்றி ஐயா!