PDA

View Full Version : மழைத்துளி.



M.Jagadeesan
19-08-2012, 03:16 AM
அதிகாரம் - 02 : வான் சிறப்பு (http://visualkural.blogspot.in/2011/09/02_03.html)


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது [02:06]

http://3.bp.blogspot.com/-Ruw9mqe9Vqo/TohkeBsImWI/AAAAAAAADLw/PzqHuSRU2Ps/s400/02%2B06.jpg (http://3.bp.blogspot.com/-Ruw9mqe9Vqo/TohkeBsImWI/AAAAAAAADLw/PzqHuSRU2Ps/s1600/02%2B06.jpg)
பொருள்: நிலம், காற்று, வெப்பம், ஆகாயம் ஆகிய நான்கு காரணிகள் இருந்தாலும், நீர் இல்லாது போனால் , இவ்வுலகில் ஓரறிவு உடைய புல் இனம் கூட தோன்றுவது அரிது. தாவரங்கள் தோன்றுவதற்கும், தோன்றிய தாவரங்கள் , நிலைபெற்று நிற்பதற்கும் , நீரின் தேவை இன்றியமையாததாகும்.

மழைத்துளி வாழ்வின் உயிர்த்துளி!

கலைவேந்தன்
22-08-2012, 04:17 AM
நீரன்றி அமையாதுலகம் என்னும் பேருண்மையை உரைத்த வள்ளுவரின் அழகான குறளுக்கு பொருத்தமான படம். நன்றி ஐயா.