PDA

View Full Version : காதுகளின் ஆயுள்



அமீனுதீன்
19-08-2012, 06:36 PM
சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு எந்த அளவுக்கு காதுகளை பாதிக்கிறது?
எங்கு திரும்பினாலும் வாகனங்களின் சத்தம், தொழிற்சாலையின் பேரிரைச்சல் இதை எப்படி
சமாளிப்பது என்று பார்ப்போம்... நமது வாழ்க்கையில் சர்வ சாதாரண ஒன்றக்க நம்மோடு
ஐக்கியமாகி விட்டன இதெல்லாம். இதனை முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் பாதிப்பு
வராமல் நம்மை நாமே பாது காத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன் பாதிப்புகள் எந்த
ரூபத்தில் வரலாம் என்பதை புக்ப்ந்து கொள்ள வேண்டும்.

தொழிற்சாலை, போக்குவரத்து இரைச்சல் இவையெல்லாம் வெளிப்புறங் களில் உள்ளவை. முதலில் நமது வீட்டில் என்ன
நடக்கிறது?வால்யூமை எவ்வளவு அதிகமாக வைத்துக் கேட்கலாமோ அவ்வளவு அதிகமாக வைத்து
டேப்ரெக் கார்டர் கேட்கிறோம், டி.வி. பார்க் கிறேக்ம். இதை முதலில் கணிசமாக
குறைத்துக் கேட்கப் பழகிக் கொள்ள வேண்டும். அடுத்த தெருக்களிலும், சாலைகளிலும் கோன்
வடிவிலான ஸ்பீக்கர்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். காதினுள்ளேயே பொரிய
பீரங்கியை வைத்துக் கொண்டு நடந்து போனால் என்ன ஆகும். வாக்மேனைத் தான் சொல்கிறேன்.
இசையை கேட்டு ரசிக்க வேண்டியதுதான். அதற்காக அதை காது கிழியத்தான் கேட்க வேண் டும்
என்றக்ல் நிச்சயம் காது கேட்கும் திறன் பாதிப்படையும். வாக்மேனை கூடிய மட்டும்
உபயோகப் படுத்துவதை குறைத் துக் கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளில்... அடுத்து தொழிற்
சாலைகளில் பணி யாற்றுவோர் பற்றி முக்கியமாக குறிப் பிட வேண்டும்.

பயங்கர சத்தத்துடன் இயங்கக்கூடிய தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் மிகுந்த எச்சாப்க்கை யுடன்
இருக்க வேண் டும். அதிக பட்சமாக எவ்வளவு டெசிபல் சத்தத்தை ஒரு நாளைக்கு கேட்கலாம்
என்பதை தொப்ந்து கொண்டு செயல்பட வேண்டும். சாதாரணமாக 90 டெசிபல் அளவை ஒரு நாளைக்கு 8
மணி நேரம் கேட்கலாம். தவிர்க்க முடியாமல் 100 டெசிபல் சத்தத்தை கேட்க வேண்டி
வந்தால், இரண்டு மணி நேரத்துக்கு மேல் கேட்கக் கூடாது. இதைவிட அதிக அளவில் 115
டெசிபல் சத்தத்தை கேட்கும்படியான நிலை ஏற்பட்டால் 15 நிமிடம் வரை பொறுத்துக்
கொள்ளலாம். அதற்குமேலும் கண்டிப்பாக கேட்கக் கூடாது. டெசிபல் கணக்கு பார்த்
தெல்லாம் மனிதன் வேலை செய்ய முடியுமா டாக்டர்? நடைமுறையில் சில சிக்கல்கள் இருக்
கலாம். அதற்காக அலட்சியம் செய்ய முடியுமா? உதாரணமாக பெருத்த சத்தத்தை கேட்கும்போது
காது தானா கவே அடைப்பது போன்று இருக்கும். தொடர்ந்து கேட்க வேண்டி வந்தால் காது
அடைப்பானை பொருத்திக் கொள்ள வேண்டும். காது அடைப்பான் ஒன்றும் அதிக விலையில்லை.
அவற்றை வாங்கி பொருத்திக் கொள்ளலாம்.

காதை சுத்தம் செய்யலாமா?
காதுகளை சுத்தம் செய்கிறேன் என்று பேனாமூடி, பென்சில், தீக்குச்சி, பட்ஸ் போன்ற வற்றை சிலர்
உபயோகிக்கிறக்ர்கள். முதலில் பட்சை எடுத்துக் கொள் வோம். பிரபலமான கம்பெனிகள்கூட
பொப்ய சைஸ் பட்சை போடுகிறக்ர்கள். அது உபயோகிக்கத்தக்கதல்ல. மேலும் பேனா, பென்சில்
எல்லாம் எழுதுவதற் காகத் தானே தவிர காது குடைய அல்ல. அப்படி குடைந்தால் காதின்
செவிப்பறை கிழிந்து போக வாய்ப்பு உண்டு. எக் காரணத்தைக் கொண்டும் எந்தப் பொருளையும்
காதில்விடக் கூடாது. காதில் இயற்கையாகத் தோன்றும் வேக் சின் காதை பாதுகாப்பதற்காகவே
உற்பத்தியாகிறது. அதனால் தொந்தரவு என்று கருதினால் டாக்டரை அணுகி சுத்தம் செய்து
கொள்வதே நல்லது. காதில் சீழ் ஏன்? காதில் சீழ் வடிவது பலருக்கும் வரும் ஒரு
தொந்தரவாகும். இதனை சரி செய்ய முடியுமா? என்பது பலரின் கேள்வி. நகரங்களில் காதுக்கு
ஏதாவது சின்ன தொந்தரவு என்றக்ல் உடனே டாக்டரை அணுகிவிடுகிறக்ர்கள். கிராமப்
புறங்களில் அப்படி இல்லை. காதில் சீழ் வடிவதை சாதாரணமாக நினைத்து அலட்சியம்
செய்துவிடக் கூடாது. காதின் நடுச் செவியில் தொற்று ஏற்பட்டிருந்தால் அவ்வாறு சீழ்
வடிய வாய்ப்பு உண்டு. மேலும் காதின் பின்புறம் உள்ள எலும்பில் நோய்த் தொற்றும்,
செவிப்பறையில் துளையும் உண்டாகியிருக்கலாம்.

இது போன்ற பிரச்சினைகள் குழந்தைகளுக்குத் தான் அதிகம் காணப்படுகிறது. இந்நோய் பரவ டான்சில் பிரச்சினையும்,
அடினாய்டுகளிலிருந்து நோய்த் தொற்று பரவுவதும் ஒரு முக்கியக் காரணம். மூக்கு
மற்றும் சைனஸ்களின் நோய்த் தொற்று, மூக்கில் ஒவ்வாமை போன்றவையும் குழந்தையின்
காதில் சீழ் வடியக் காரணமாக இருக்கின்றன. இவற்றின் மூலம் மூக்கு மற்றும் காது
இவ்விரண்டுக்கிடையே உள்ள இணைப்புக் குழாய் அடைபட்டு காதில் உள்ள காற்றின் அளவு
குறைந்து விடுகிறது. மேலும் காயம் படுதல், கன்னத்தில் பலமாக அடித்தல் போன்றவற்றக்ல்
செவிப்பறை கிழிந்து பல்வேறு தொந்தரவுகளை உண்டு பண்ணலாம். இதற்கு அறுவை சிகிச்சை
மூலம் தீர்வு காண முடியும். காதில் சீழ் வடிதலை கவனிக்காமல் விட்டு விட்டால் காது
கேட்கும் திறன் படிப்படியாக குறையும். பையன் படிக்க வில்லை, பேசினால், சரியாக
புக்ப்ந்து கொள்ள முடியவில்லை போன்ற பிரச்சினை சிறுவர்களுக்கு இருந்தால் காது
பிரச்சினையால் அப்படி இருக் கலாம். உடனே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
காதின் உட்செவியில் மிகச் சிறிய வடிவில் உள்ள எலும்புகள் மிகவும் முக்கியமானவை.

அது சமயத்தில் வைப்ர ஷேன் ஆகாமல் இருக்கும். 60Šக்கும் மேல் அப்படி இருக்கும்
பட்சத்தில் லேசர் சிகிச்சை கொடுக்கலாம். செவியில் உட்பகுதியில் நீர் கோர்த்து
கொள்வதுண்டு. இதனால் காதில் இரைச் சல் உண்டாகும். சமயத்தில் காதே கேட் காது. காது
கேட்கும் திறன் வெகுவாக பாதிக்கப் பட்டிருக்கும். வயது ஆக, ஆக தொந்தரவு கொடுக்கக்
கூடியதாக அமைந்து விடும். எனவே தகுந்த நேரத்தில் உரிய சிகிச்சை எடுக்க தாம திக்கக்
கூடாது. இத்துறை வெகு வேகமாக வளர்ந்து வரும் துறை. இதில் சமீபத்திய புதிய
கண்டுபிடிப்புகள், வளர்ச்சிகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். மூளையில் வரக்
கூடிய கட்டியை அறுவை சிகிச்சை செய்வதற்காக தலையின் வழியாகத்தான் அறுவை சிகிச்சை
செய்ய வேண்டும். அப்போது மூளை சேதப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பல அபாய கரமான
விளைவுகள் ஏற்பட்டு வந்தன. குறட்டை பிரச்சினை மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்து,
விவாகரத்து வரை போவதாக சொல்லப்படுகிறது. இந்த குறட்டையை நிறுத்த முடியுமா? குறட்டை
விடுவது பெண்களைவிட ஆண்களுக்குத்தான் அதிகமாக இருக் கிறது. தொண்டையில் அடைப்பு
இருக் கும் பட்சத்தில், உள்நாக்கில் ஏற்படும் மாற்றங்கள் முதலான காரணங்களால்
மட்டுமில்லாமல் அதிக எடை உள்ளவர் களுக்கும் வருகிறது. மேலும் மொடாக் குடியர்கள்,
தூக்க மாத்திரை சாப்பிடுகிற வர்கள், உடல் உழைப்பு அதிகம் இல்லாத வர்கள்
ஆகியோருக்கும் இந்தப் பழக்கம் இருக்கிறது. குறட்டை எதனால் ஏற்படு கிறது என்பதை
கண்டுபிடிக்க சம்பந்தப் பட்டவரை மருத்துவமனையிலேயே தங்க வைத்து ஆய்வு செய்வதன்
மூலம் உரிய காரணத்தை கண்டறியலாம். ஒரு சில ருக்கு மூளை பாதிப்பால்கூட வருவ துண்டு.
சிகிச்சையைப் பொருத்தவரையில் உள்நாக்கு காரணமாக இருந்தால் வெட்டி எடுத்துவிடலாம்.

அதைத்தவிர சரியான அளவு சாப்பிடுதல், குடிப்பழக்கத்தை கைவிடல், ஒரு பக்கமாக சாய்ந்து
படுத் துக் கொள்ளல் மூலமாக குறட்டையை தவிர்க்க முடியும். ஒரு சில நேரத்தில்
கழுத்தில் துவாரம் போட்டு சுவாசப் பாதையை மாற்றி யமைக்கலாம். பலரும் இந்த விதி
முறையை விரும்புவதில்லை. மேல்நாடு களில் குறட்டை வந்தவுடன் எழுப்பி விடும்
அலாரமெல்லாம் உண்டு. டான்சில் பிரச்சினை அதிகமாக இருக்கிறது பலருக்கு. நாம்
அன்றக்டம் உபயோகிக்கும் தண்ணீர், உணவு மற்றும் காற்று வழி யாக உடலுக்குள் நுழையும்
கிருமி களைத் தடுக்க தொண்டை யில் உள்ள சதை உதவு கிறது. இது சிலருக்கு தொற்று நோயால்
தாக்கப் பட்டு காய்ச்சல், தொண்டை வலி, எச்சில் விழுங்கும் போது வலி ஆகிய
தொந்தரவுகள் ஏற்ப டும். தொண்டைச் சதையை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி
எடுத்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். ஆண் குரல், பெண் குரல் என்று எளிதாக
பிக்ப்த்து அறிய முடிகிறது. இந்தக் குரல் வளம் சிலருக்கு திடீரென்று பாதிக்கப்பட்டு
ஆண்- பெண் போலவும், பெண்- ஆண் போலவும் பேசுவார்கள். காது கேட்பது எவ்வளவு முக்கி
யம் என்பதை காது கேட்காமல் போகும் போது தான் உணர் கிறர்கள். மக்க ளோடு மக்களாக
கலந்து பழக, பேச, உணர்வு களை பரிமாறிக் கொள்ள தகவல் தொடர்புக்கு இப் படியாக காதின்
முக்கியத்துவம் ரொம்பவும் அபரிதமானது.

நன்றி: http://tamil.vvonline.in/health/ear.html

jayanth
20-08-2012, 03:32 AM
பயனுள்ள தகவல் பகிர்விற்கு நன்றி ...

M.Jagadeesan
20-08-2012, 06:58 AM
காதுகளைப் பற்றிய பயனுள்ள பகிர்வு! நன்றி அமீனுதீன்!