PDA

View Full Version : சாதனை மனிதர்கள்.. - பிரியா ரவிச்சந்திரன்..!கலைவேந்தன்
19-08-2012, 10:18 AM
நண்பர்களே.. இந்த திரியில் நாம் அன்றாட வாழ்க்கையில் காணும் அரிதான சாதனை மனிதர்கள் பற்றியும் வீர தீர கருணைச் செயல்கள் புரிந்தவர்களைப் பற்றியும் காணப்போகிறோம்..

நீங்களும் உங்களுக்குத் தெரிந்த மனிதர்கள் வாசித்த மனிதர்கள் பற்றிய குறிப்புகளை முடிந்தால் படத்துடன் இணைக்கவும்..

இதோ முதல் சாதனைப் பெண்மணி..

கலைவேந்தன்
19-08-2012, 10:20 AM
http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/c0.56.403.403/p403x403/431481_476563875695201_1385805563_n.jpg

சென்னை எழிலகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16 - ம் தேதி அதிகாலை பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது சென்னை மத்திய கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் உள்ளே நுழைந்து கோப்புகளை பாதுகாக்க முயல, எதிர்பாராதவிதமாக தீயில் சிக்கி உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் உடன் இருந்த அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டார். இந்தியாவின் முதல் பெண் கோட்ட தீயணைப்பு அதிகாரியான இவர், இன்று வரை தீக்காயங்களுக்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் பிரியா ரவிச்சந்திரனின் வீர தீர செயலை பாராட்டி அவருக்கு ஜனாதிபதி விருது கொடுக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

சென்னை தீ விபத்தில் பலத்த காயம் அடைந்த தீயணைப்பு கோட்ட அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், எதற்கும் அஞ்சாத துணிச்சல் மிக்கவர். மேற்கு மாம்பலத்தில் சினிமா டம்மி குண்டுகள் வெடித்து விபத்து ஏற்பட்டபோது, இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் பயமில்லாமல் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.

கண் முன்னே ஆபத்து இருப்பதை தெரிந்தும் இவர் நெருப்பு வளையத்துக்குள் இறங்கினார். ஒரு பக்கம் குண்டு வெடிப்பது போன்ற பயங்கர சத்தத்துடன், கட்டிடம் இடிந்து விழுந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் 6 வீரர்களுடன் களம் இறங்கினார் பிரியா. இதில் அன்பழகன் வீர மரணம் அடைந்தார். பிரியா, முருகன், பிரபாகரன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

jayanth
20-08-2012, 03:47 AM
சாதனைப் பெண்மணி பிரியா ரவிச்சந்திரன் பூரண குணமடைந்து மீண்டும் அவர் பணியில் சேர இறைவனை பிரார்த்திக்கின்றேன்....

கீதம்
20-08-2012, 10:50 AM
சாதனை மனிதர்கள் பற்றிய திரித் துவக்கத்துக்குப் பாராட்டுகள் கலைவேந்தன். வெளியில் தெரியாமல் சாதித்துக்கொண்டிருக்கும் பல நல்ல உள்ளங்களை இங்கு அடையாளம் காண முடியும். தொடருங்கள். மற்றவர்களும் இயலும்போது தகவல்களைப் பகிர்வோம்.


பிரியா ரவிச்சந்திரனின் துணிகரச் செயல் பற்றியும் அவரது தற்போதைய கவலைக்கிடமான நிலை பற்றியும் முன்பு அவள் விகடனில் படித்தேன். முகம் முழுவதும் சிதைந்து பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தார். அவர் அத்துயரிலிருந்து மனதாலும் உடலாலும் மீண்டு வர என் பிரார்த்தனைகள்.

M.Jagadeesan
20-08-2012, 12:38 PM
http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2012/may/08/7-1.jpg சாதனைப்பெண் பாரதி


விளையாட்டாக சதுரங்கம் விளையாட ஆரம்பித்த பாரதி, இன்று தேசிய சாம்பியனாக உயர்ந்து நிற்கிறார். இந்தியா சார்பில், வெளிநாடுகளிலும் சென்று விளையாடி வருகிறார்.

பதினோராம் வகுப்பு மாணவியான பாரதி, தன் சாதனை பயணத்தைப் பற்றி விவரிக்கிறார்:

சின்ன வயதில், செஸ் என்றில்லை, எனக்கு எதிலெல் லாம் ஆர்வமோ, அவற்றில் எல்லாம் இறக்கிவிட்டனர் என் பெற்றோர். நான் ஸ்கேட்டிங் கற்றேன், நீச்சலடித்தேன், பரத நாட்டியம் பயின்றேன். ஆனால், தற்போது எஞ்சி நிற்பது செஸ்தான். அதில், நான் சிறப்பாகவே செயல்படுகிறேன் என்பதில், என் பெற்றோருக்கு மிக்க மகிழ்ச்சி.

ஆறு வயதில் செஸ் விளையாடத் துவங்கிய நான், போட்டிகளில் கலந்து இரண்டு, மூன்றாவது இடங்களைப் பெற்றேன். அப்போதுதான் எனக்குள் இருந்த செஸ் திறமை தெரிய வந்தது. செஸ் பயிற்சியாளர் சுந்தர்ராஜன், என் திறமையை பார்த்து, நன்கு கவனம் செலுத்தினால், செஸ்சில் நிறைய சாதிக்கலாம் என்று கூறி, எனக்குப் பயிற்சியளித்தார்.

தொடர்ந்து, மாவட்ட அளவிலான பல போட்டிகளில் வெற்றி பெற்றேன். மாநில அளவிலான போட்டிகளிலும், குறிப்பிடத்தக்க இடங்களைப் பெற்றேன்.

கடந்த 2007ல், மாநில அளவிலான, 14 வயதுக்குட்பட்ட மகளிர் விரைவு செஸ் போட்டியில், முதலாம் இடம் பெற்றேன். அதே ஆண்டு, மகளிர் சப் - ஜூனியர் போட்டி யில் பட்டம் வென்றேன். மேலும் 25 வயதுக்குட்பட்ட பெண் களுக்கான போட்டியில், என்னை விட பல வயது மூத்த வீராங் கனைகளுடன் போட்டியிட்டு, இரண்டாவது இடம் பெற்றேன். 2009ல், மாநில போட்டியிலும், இரண்டாவது இடம் கிடைத்தது. மேலும், மாநில அளவிலான பல போட்டிகளில் மூன்றாவது இடம் பெற்றிருக்கிறேன்.

தேசிய அளவில் பார்த்தால், கடந்த 2008ல், தேசிய சப்-ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்றேன். 2006ல், 13 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசிய போட்டியில், ஐந்தாவது இடமும், 2008ல், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசிய போட்டியில், நான்காவது இடமும் பெற்றேன்.

கடந்தாண்டு நடைபெற்ற இரு தேசிய போட்டிகளில், மூன்றாவது, நான்காவது இடங்களைப் பெற்றேன். தேசியப் போட்டிகளில், சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம், வெளிநாடுகளில் நடைபெற்ற, சர்வதேச சதுரங்கப் போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

கடந்த 2008ல், பெண்களுக்கான நான்காவது ஆசிய குழந்தைகள் சர்வதேச விளையாட்டு மற்றும் சதுரங்கப் போட்டி, ரஷ்யாவின் யாகுட்ஸ்க்கில் நடைபெற்றது. அதில் வெண்கலப் பதக்கத்தைத் தட்டி வந்தேன். கடந்த 2008ல், ஆசிய ஜூனியர் செஸ் போட்டியில் பங்கேற்றேன்.

கடந்தாண்டு ஸ்பெயினின் பெனாஸ்கினிவில் நடைபெற்ற சர்வதேச ஓபன் போட்டியில், "சிறந்த சதுரங்க வீராங்கனை' மற்றும் "சிறந்த ரேட்டட் பிளேயர்' ஆகத் தேர்வு பெற்றேன். விளையாட்டுகளில் ஆர்வமாக இருந்தாலும், படிப்பிலும் கோட்டை விட்டு விடாமல் இருக்கிறேன். ஒன்பதாம் வகுப்பு வரை, வகுப்பில், முதல் மாணவி நான்தான். கடந்தாண்டு, சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்புத் தேர்வில், 95 சதவீத மதிப்பெண்கள் பெற்றேன். வழக்கமான துறைகள் என்றில்லாமல், நானோ டெக்னாலஜி அல்லது ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் போன்ற ஒன்றில் மேற்படிப்புப் பயில விரும்புகிறேன்.

போட்டிகளுக்கு முன், "என்னால் இது முடியும்... நான் ஒரு சாம்பியன்...' என்று பத்து முறை எழுதுவேன். அது எனக்குள் புது சக்தியைப் பாய்ச்சும். அதன்படி சாதித்துக் காட்டுவேன். புன்னகை மாறாத முகத்துடன் முடிக்கிறார் பாரதி.

Keelai Naadaan
20-08-2012, 01:11 PM
அரிய மனிதர்களை அறியும், தன்னம்பிக்கை வளர்க்கும் நல்ல முயற்சி.

கலைவேந்தன்
20-08-2012, 04:46 PM
பாராட்டி ஊக்குவித்த நண்பர்களுக்கும் பங்குபெற்று, பாரதியின் அருமை பெருமைகளைப் பகிர்ந்துகொண்ட, ஐயாவுக்கும் மிக்க நன்றி..!