PDA

View Full Version : வாழ்க்கை அழகானது



VISHNU ROCKY77
17-10-2011, 05:58 AM
http://i.imgur.com/WastP.jpg


வாழ்க்கை பயணத்தின் முடிவில்
வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை

ஆனாலும் நாம் ஒடிக்கொண்டே இருக்கிறோம்
வாழ்க்கை பந்தயத்தில் எல்லோரையும் முந்திவிட

இதில் நீ எதை இழந்தாய்? எதை பெற்றாய்?

எல்லாம் அடைந்ததாய் நினைத்தாலும் எதோ ஒரு வெறுமை
தளும்புகின்ற அரைகுடமாகவே நம்மில் பலரின் வாழ்க்கை

எதையும் தொலைக்காமலே தேடிக் கொண்டிருக்கிறோம் பல வேளைகளில்
இருட்டு பாதையில் செல்லும் குருடன் போல..

பணம் தேடி பாசம் தொலைக்கிறோம் சில வேளைகளில்
காதல் தேடி கடமை தொலைக்கிறோம் சில வேளைகளில்

அடுத்த நொடி காத்திருப்பது மரணமா? வாழ்க்கையா?
அறிந்திருக்கவில்லை இன்று வரை ஒருவரும்
ஆனால் ஆயுள் முழுவதற்குமான திட்டங்கள்
வகுத்து கொண்டே இருக்கிறோம் தினமும்..

புரிந்து கொள்ள முயல்வதில்லை வாழ்க்கையின் வடிவத்தை

தன்னம்பிக்கைக்கும் தன்னை மீறிய நம்பிக்கைக்கும்
வித்தியாசம் தெரிவதில்லை நமக்கு

முகங்களை தொலைத்து மூகமூடி சூடிக்கொண்டிருக்கிறோம்

புதுமை படைப்பதாய் கூறி புன்னகைக்க மறந்து கொண்டிருக்கிறோம்

வெளிச்சம் தொலைத்து வண்ணங்கள் வாங்கி என்ன பயன்?

நேற்றையை பற்றிய நினைவுகள்
நாளையை பற்றிய கனவுகள்
இதனூடேயே கழிகிறது நமது இன்றைய பொழுது

வாழ்க்கை அழகானது
தவறவிட்ட தருணங்களின் தொகுப்பும்
அடுத்த நிமிடம் என்னவென்று அறியும் ஆவலும் மறந்து
அந்த நொடிகளை வாழக் கற்றுக்கொள்.

http://i.imgur.com/x6EkY.jpg