PDA

View Full Version : எல்லை தாண்டாதே!



M.Jagadeesan
18-08-2012, 02:59 PM
அதிகாரம் 048 : வலியறிதல் [வலிமை அறிதல்] (http://visualkural.blogspot.in/2011/10/048.html)
http://1.bp.blogspot.com/-4Jl8M2dCyF4/TqIzlSVzGtI/AAAAAAAACGg/EJIH0fGBugY/s400/48%2B06.jpg (http://1.bp.blogspot.com/-4Jl8M2dCyF4/TqIzlSVzGtI/AAAAAAAACGg/EJIH0fGBugY/s1600/48%2B06.jpg)

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்.

பொருள்: ஒரு மரத்தில் தன்னைத் தாங்கக்கூடிய உச்சிக் கிளைவரையில் ஏறினவன், அதையும் தாண்டி ஏற முயற்சி செய்வானாயின், அது அவனுடைய உயிருக்கே ஆபத்தைத் தேடிக் கொண்டதாக முடியும்.

ஒருவன் தன்னுடைய வலிமையின் எல்லையறிந்து, ஒரு முயற்சியில் ஈடுபடவேண்டும்.ஊக்க மிகுதியால், வலிமையின் எல்லை தாண்டி செய்யும் முயற்சி, அவனுடைய உயிருக்கே உலை வைத்துவிடும்.

இக்குறள் பிறிது மொழிதல் அணியில் வந்துள்ளது.உவமானத்தை மட்டும் கூறி , உவமேயப் பொருளை , நாமே அறியும்படி விட்டுவிட்டார்.

பட உதவி: குறளும், காட்சியும்.

கீதம்
19-08-2012, 06:23 AM
வலியறியாவிடில் வலி அறிவான். உண்மைதான். தேர்ந்த குறள்விளக்கத்துக்கும் வேடிக்கையான படப்பகிர்வுக்கும் மிகவும் நன்றி ஐயா.

கலைவேந்தன்
19-08-2012, 03:49 PM
மிக அருமையான விளக்கம். தகுந்த படமும் கூட.. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
20-08-2012, 01:54 AM
கீதம், கலைவேந்தன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!