PDA

View Full Version : முற்றுபெறாத கவிதை



sridhara
31-07-2011, 08:01 PM
வாசம் கொண்ட மலருக்கு
பாசம் தெரியாததேனோ
ஏக்கம் கொண்ட மனதிற்கு
தூக்கம் வறாததேனோ..



இக்கவிதையை யாராவுது முடித்து வையுங்கள்

கீதம்
31-07-2011, 11:02 PM
வாசம் கொண்ட மலருக்கு
பாசம் தெரியாததேனோ
ஏக்கம் கொண்ட மனதிற்கு
தூக்கம் வராததேனோ..



இக்கவிதையை யாராவது முடித்து வையுங்கள்

முற்றுப்பெறாக்கவியென்று சொல்லிவிட்டு
முடித்துவைக்கக் கோருதல் நியாயமோ?
முற்றுப்பெறாமலே முழுமையாகாதோ
முற்றிய காதலும், கவிதையும்?

நாஞ்சில் த.க.ஜெய்
01-08-2011, 07:26 AM
எழுதும் கவிதை குறை பிரசவம் என்றாலும் வளரும் போது ஆலவிருட்சம் போல் நிலைத்துநிற்கும் ...முற்றுபெறா கவிதையென்று துவங்கிய கவிதை முற்று பெற என் வாழ்த்துகள்..