PDA

View Full Version : முதியோர் இல்லம்...!vasikaran.g
21-10-2011, 04:04 AM
இங்கே எல்லோருமே
அந்நிய தேசத்து அகதிகள் .!
எஞ்சிய வாழ்க்கையை
எப்படி கழிப்பது என்று
அச்சத்தோடு அசைபோடும் ,
பிள்ளைகள் எனும் சனியன்கள்
ஆதரிக்க மறந்த ,

மனித தெய்வங்கள் வாழும்
மாதிரி ஆலயங்கள் ..!!
வாழ்க்கையில் வசந்தத்தை
இழந்த முதியவர்களின்
இறுதி விலாசம் ..!!!

உங்கள் வசிகரன்.க

Nivas.T
21-10-2011, 05:44 AM
நல்ல கவிதை

பாராட்டுகள் வசிகரன்

தொடர்ந்து எழுதுங்கள்

sarcharan
21-10-2011, 06:10 AM
என்ன வேதனையான ஒரு கவிதை. நடைமுறையில் நடப்பதை கவிதையாக புனைந்துள்ளீர்கள்

வீட்டுக்கு வரும் மருமகள்களால் ஆண் பிள்ளையை பெற்றவர்களுக்கு ஏற்படும் அவல நிலை. ஐயகோ!

ஒரு ஆணை புதிசாலியாக்க ஒரு தாய் என்னும் பெண் இருபது இருபத்தைந்து வருடங்கள் பாடு படுகிறாள்.

ஆனால் மனைவி என்னும் ஒரு பெண் அவனை ஓரிரு தினங்களுக்குள்ளாகவே முட்டாள் ஆக்கி விடுகிறாள்.

இந்த காலத்து பெண்களுக்கு கூட்டுக்குடும்பம் என்றாலே அறவே பிடிப்பது இல்லை.

கணவனை பிரித்து தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று நச்சரிச்சு இறுதியில் சாத்தித்தும் விடுகின்றனர். முடியாது என்று ஆண் சொல்லிவிட்டால் அவ்வளவுதான்! அதைப்பற்றி நான் விவரிக்க விரும்பவில்லை. உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். :lachen001::lachen001:

என்ன செய்ய, இன்றைக்கு முதியோர் இல்லங்களது இலக்கங்கள் கூடிக்கொண்டே போகின்றன.

இதற்கு காரணம் பெண்ணின் தாயார் தனது மகளுக்கு இடைவிடாது தரும் பிரிவினை ஆலோசனைகள் தான். இன்றைக்கு கைபேசிகள் ஜோராக இதற்கு ஒத்துழைக்கின்றன.

பழுத்த ஓலை விழும்போது பச்சை ஓலை சிரிக்குமாம்...
ஆனால் அந்த பச்சை ஓலைக்கு தெரியாது நாமும் நாளைக்கு பழுத்த ஓலை ஆவோம் என்று

இதை பதித்த என்னை உடனே ஒரு அற்பப்பதரை பார்ப்பது போல பார்த்து உங்களது ஆக்ரோஷங்களை கொட்டி விடாதீர்கள். ;)

இது முற்றிலும் உண்மையான ஒன்று. மறுப்பு சொல்ல முடியாது.;):redface:

குணமதி
21-10-2011, 10:23 AM
இல்லையில்லை!
இவர்கள் இந்நாட்டின்
எடுத்துக்காட்டான அடையாளங்கள்!
தாம்பெற்ற பிள்ளைகள் தம்
குஞ்சு குளுவான்களோடு
கொஞ்சிவாழத் தடையாயிராது
நெஞ்சம் நெகிழ்ந்து
அஞ்சா உள்ளத்தோடும்
அசையா உறுதியோடும்
விட்டுக்கொடுத்த
அன்பின் விளக்கங்கள்!
அவர்களுள்ள இல்லம் -
அது கோவிலன்று!
ஈகம் விளக்கும்
கலங்கரை விளக்கம்!

vasikaran.g
26-10-2011, 04:15 AM
நல்ல கவிதை

பாராட்டுகள் வசிகரன்

தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி நிவாஸ் .. உங்கள் ஊக்கம் எனை இன்னும் பெரிய கவியாக்கும் ..

வசிகரன்.க

vasikaran.g
26-10-2011, 04:18 AM
என்ன வேதனையான ஒரு கவிதை. நடைமுறையில் நடப்பதை கவிதையாக புனைந்துள்ளீர்கள்

வீட்டுக்கு வரும் மருமகள்களால் ஆண் பிள்ளையை பெற்றவர்களுக்கு ஏற்படும் அவல நிலை. ஐயகோ!

ஒரு ஆணை புதிசாலியாக்க ஒரு தாய் என்னும் பெண் இருபது இருபத்தைந்து வருடங்கள் பாடு படுகிறாள்.

ஆனால் மனைவி என்னும் ஒரு பெண் அவனை ஓரிரு தினங்களுக்குள்ளாகவே முட்டாள் ஆக்கி விடுகிறாள்.

இந்த காலத்து பெண்களுக்கு கூட்டுக்குடும்பம் என்றாலே அறவே பிடிப்பது இல்லை.

கணவனை பிரித்து தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று நச்சரிச்சு இறுதியில் சாத்தித்தும் விடுகின்றனர். முடியாது என்று ஆண் சொல்லிவிட்டால் அவ்வளவுதான்! அதைப்பற்றி நான் விவரிக்க விரும்பவில்லை. உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். :lachen001::lachen001:

என்ன செய்ய, இன்றைக்கு முதியோர் இல்லங்களது இலக்கங்கள் கூடிக்கொண்டே போகின்றன.

இதற்கு காரணம் பெண்ணின் தாயார் தனது மகளுக்கு இடைவிடாது தரும் பிரிவினை ஆலோசனைகள் தான். இன்றைக்கு கைபேசிகள் ஜோராக இதற்கு ஒத்துழைக்கின்றன.

பழுத்த ஓலை விழும்போது பச்சை ஓலை சிரிக்குமாம்...
ஆனால் அந்த பச்சை ஓலைக்கு தெரியாது நாமும் நாளைக்கு பழுத்த ஓலை ஆவோம் என்று

இதை பதித்த என்னை உடனே ஒரு அற்பப்பதரை பார்ப்பது போல பார்த்து உங்களது ஆக்ரோஷங்களை கொட்டி விடாதீர்கள். ;)

இது முற்றிலும் உண்மையான ஒன்று. மறுப்பு சொல்ல முடியாது.;):redface:
உங்கள் கருத்து உண்மையே ..அதன் ஊடே உள்ளே இருக்கும் வலியும் தெரிகிறது ..
கருத்து பகிர்வுக்கு நன்றி .

வசிகரன்.க

vasikaran.g
26-10-2011, 04:21 AM
இல்லையில்லை!
இவர்கள் இந்நாட்டின் எடுத்துக்காட்டான அடையாளங்கள்!
தாம்பெற்ற பிள்ளைகள் தம்
குஞ்சு குளுவான்களோடு
கொஞ்சிவாழத் தடையாயிராது
நெஞ்சம் நெகிழ்ந்து
அஞ்சா உள்ளத்தோடும்
அசையா உறுதியோடும்
விட்டுக்கொடுத்த
அன்பின் விளக்கங்கள்!
அவர்களுள்ள இல்லம் -
அது கோவிலன்று!
ஈகம் விளக்கும்
கலங்கரை விளக்கம்!
குணமதிக்கு பெரிய மனது , அதான் எதையும் விசாலமாக பார்க்கிறார் ..
கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றி .
வசிகரன்.க

கீதம்
27-10-2011, 12:39 AM
மிகவும் துர்பாக்கியசாலிகள் அவர்கள். வேறென்ன சொல்ல? கவிதையின் வரிகளில் விரவிக்கிடக்கிறது வாழ்விழந்த முதியவர்களின் சோகம்.

குணமதி அவர்களின் பார்வை கண்டு அசந்தேன். பெற்ற மனம் என்றுமே பிள்ளைகளின்பால் பித்தென்பதை அழகாய் உணர்த்துகின்றன அவரது வரிகள்.

vseenu
27-10-2011, 09:36 AM
எஞ்சிய வாழ்க்கையை
எப்படி கழிப்பது என்று
அச்சத்தோடு அசைபோடும் ,
பிள்ளைகள் எனும் சனியன்கள்
ஆதரிக்க மறந்த ,

மனித தெய்வங்கள் வாழும்
மாதிரி ஆலயங்கள் ..!!
சனியன்கள் என்பது மிகச்சரியான வார்த்தைதான்.வேறு எப்படி கூறுவது?கவிதையால் மனம் நெகிழ்ந்தது.

vasikaran.g
28-10-2011, 03:59 AM
நன்றி கீதம் ..உங்கள் கருத்து என் எழுத்துக்கு மேலும் வலு சேர்க்கும் என்று நம்புகிறேன் ..
வசிகரன்.க

vasikaran.g
28-10-2011, 04:00 AM
நன்றி சீனு அவர்களே ..நெகிழ்ச்சி கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் .

வசிகரன்.க