PDA

View Full Version : நட்பை சுவாசிக்க



ravikrishnan
15-04-2012, 02:16 PM
நட்பை சுவாசிக்க

மொழியின் புகழ்
பாடா புலவனும்
இல்லை…

மலரின்
மனம் இல்லா கவிதையும்
இல்லை…

தென்றலின் இதம்
தொடா மரமும்
இல்லை...

விழியின் வீச்சு
அறியா கவிஞனும்
இல்லை…

நட்பின் வாசம்
சுவாசிக்கா மனமும்
இல்லை…

ஆகவே...

மனமே
தேடல் செய்…நட்பை சுவாசிக்க...

நாஞ்சில் த.க.ஜெய்
15-04-2012, 04:33 PM
கவிதை அருமை ..சில பிழைகள் மாறுபட்ட அர்த்தம் கூறும் அதனை களைந்தால் நன்று...வாழ்த்துகள் ...

ravikrishnan
15-04-2012, 05:06 PM
ஜெய்அவர்களெ முன்பெல்லாம் எழுத்துகளில் தவறு இருந்தால் சிகப்பில் கோடிட்டு காட்டுவார்கள், தற்பொழுது இல்லை,அதுபோன்று இருக்கும்பச்சத்தில் என்னைபோன்று உள்ளவர்க்கு உதவியாக இருக்கும்,

கீதம்
15-04-2012, 10:30 PM
நட்பின் மகத்துவம் உரைக்கும் கவிதை வெகு நன்று. நட்பில்லா வாழ்க்கை சுவைப்பதில்லை. உண்மைதான்.

மலரின் மனம் இல்லா கவிதையும் இல்லை

இந்தப் பத்தியை மட்டும் இன்னும் செதுக்கினால் கவிதை பூரணமடையும் என்பது என் கருத்து.

பாராட்டுகள்.. தொடர்ந்து எழுதுங்கள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
16-04-2012, 01:23 AM
பாராட்டுக்கள் ரவிகிருஷ்ணன்....தொடருங்கள் :)

கலைவேந்தன்
16-04-2012, 06:04 AM
மலர் போன்ற மனமில்லா கவிதையும் இல்லை என்றாலும் அழகாகப் பொருந்துகிறதே.. மலர் மணத்துக்கு மட்டுமா..? மென்மைக்கும் கட்டியம் கூறுவதாயிற்றே..?

கவிதை மிக அழகு தம்பி..!! பாராட்டுகள்..!