PDA

View Full Version : நடிகர்கள் கொசுவாக நடித்தால்... ஒரு நகைச்சுவை கற்பனை



மதுரை மைந்தன்
15-08-2012, 10:13 AM
எனது "துப்பறியும் கொசு" திரியில் அமரன் இதை வைச்சு யாரும் படம் எடுக்கலையா என்று கேட்டதின் விளைவு இந்த நகைச்சுவை கற்பனை.


கமல் கொசுவாக நடிக்கும்படப்பிடிப்பில்:

ஹீரோயின் இயக்குனரிடம்: இந்த கொசு தொல்லை தாங்க முடியலை சார். என் உதட்டு மேல வந்து வந்து உட்காருகிறது.

இயக்குனர் சிரித்துக் கொண்டு: அது நிஜ கொசு இல்லைமா. நம்ம கமல் கொசு வேஷத்தில படத்தில நடிக்கறாரு. (கமல் எப்படி இவ்வளவு சின்னதா ஆக முடியும்னு கேக்கறவங்க அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்க்கலைனு அர்த்தம்).

சூப்பர் ஸ்டார் கொசுவாக நடிக்கும் படப்பிடிப்பில்:

ஹீரோயின் முன்னால் கொசு பல பல்டிகளை அடித்து இறங்கி ஸ்டைலாக ஒரு காலை மடக்கி போஸ் கொடுக்கிறது.

ஹீரோயின் கைதட்ட போகிறார். இயக்குனர் அவரை தடுத்து " இது நிஜ கொசு இல்லைமா. நம்ம சூப்பர் ஸ்டார் கொசுவா நடிக்கறாரு. நீ கை தட்டினா அவர் காதில அது இடி சத்தம் மாதிரி கேட்கும்.".

தனுஷ் கொசுவாக நடிக்கிறார்:

கொசு வட்டமடித்து படுத்திருக்கும் ஹீர்ரொயினை நெருங்குகிறது. ஆனால் நெருங்க முடியவில்லை. தனுஷ் பாடுகிறார்.

" வொய் திஸ் கொசு வலை கொசுவலை கொசுவலைடி.
டிஸ்டன்சில பாஃனு பாஃனு
பாஃனு அடிக்குது காத்து காத்து
காத்தில துரத்தி துரத்தி வந்தா
வொய் திஸ் கொசுவலை கொசுவலை கொசுவலைடி"

கவுண்டமணி கொசுவாக நடிக்கிறார். செந்தில் அவரிடம் வந்து " நல்லா மாட்டிகிடீங்களா இத்தனை நாளா என்னை நீங்க அடிச்சீங்க. இப்ப நான் உங்களை அடிக்க முடியும். கொசுவை அடிச்சா யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க".

அமரன்
15-08-2012, 10:32 AM
ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹா..

நினைச்ச மாத்திரத்தில் வந்து வந்து விழும் உங்கள் ஆக்கத் திறனுக்கு சல்யூட்.

தனுஸ் கொசுவை நினைச்சாலே சிரிப்பு முட்டுது.

ஆள் சும்மாவே கொசுமாதிரி..

நாஞ்சில் த.க.ஜெய்
15-08-2012, 02:20 PM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

jayanth
15-08-2012, 04:42 PM
சூப்பருங்க மைந்தரே...

A Thainis
15-08-2012, 06:28 PM
அருமையான கற்பனை கொசுக்கள், ரசிக்கத்தக்கவை வாழ்த்துக்கள்

அன்புரசிகன்
16-08-2012, 01:11 AM
சூப்பர் ஸ்டார் கொசுவாக நடிக்கும் படப்பிடிப்பில்:

ஹீரோயின் முன்னால் கொசு பல பல்டிகளை அடித்து இறங்கி ஸ்டைலாக ஒரு காலை மடக்கி போஸ் கொடுக்கிறது.


சரியா பார்த்தீங்களா???
ஏன்னா,... கடைசியா காலை மடக்கி போஸ் குடுக்கிறது மட்டும் தான் சூப்பர் ஸ்டார் கொசுவாக இருக்கும். முதல்ல பல்டி அடித்ததெல்லாம் ஸ்டன்ட் கொசுவாக இருக்கும். :D

கலைவேந்தன்
16-08-2012, 01:37 AM
நல்ல நகைச்சுவைக் கற்பனை மதுரை அண்ணா..!

கீதம்
16-08-2012, 05:17 AM
கொசுவானாலும் ரஜினிக்கு ஸ்டைல் போகவில்லை, கமலுக்கு குறும்பு போகவில்லை. தனுஷூக்கு இன்னும் கொலைவெறி தணியவில்லை. கவுண்டமணிக்கோ நேரம் சரியில்லை. மிகவும் ரசிக்க வைத்த கற்பனை. உடனடி ஆக்கத்துக்குப் பாராட்டுகள் மதுரை மைந்தன் அண்ணா.

இராஜிசங்கர்
16-08-2012, 01:35 PM
நாராயணா..இந்தக் கொசுத்தொல்ல தாங்க முடியலப்பா!!

sarcharan
22-08-2012, 08:10 AM
கவுண்டமணி கொசுவாக நடிக்கிறார். செந்தில் அவரிடம் வந்து " நல்லா மாட்டிகிடீங்களா இத்தனை நாளா என்னை நீங்க அடிச்சீங்க. இப்ப நான் உங்களை அடிக்க முடியும். கொசுவை அடிச்சா யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க".

இது ஹைலைட். ரசித்தேன் :)

arun
21-10-2012, 11:40 AM
தங்களது கற்பனை வளம் நன்றாக இருந்தது சிரித்து படித்தேன் பாராட்டுக்கள்

govindh
21-10-2012, 12:02 PM
நல்ல கற்பனை.
படித்து ரசித்தேன்...
பாராட்டுக்கள்.