PDA

View Full Version : துப்பறியும் கொசு



மதுரை மைந்தன்
15-08-2012, 03:27 AM
http://img692.imageshack.us/img692/7217/30073146824921653366064z.jpg (http://imageshack.us/photo/my-images/692/30073146824921653366064z.jpg/)

படத்தில் காணப்படுவது உண்மையான கொசுவல்ல. இது ஒரு துப்பறியும் கொசு. அமெரிக்க அரசாங்கத்தால் தயாரிப்பில் உள்ள சாதனம். இதில் புகைப்பட காமிராவும் ஒலிகளை பதிவு செய்ய மைக்ரோபோனும் உள்ளன. மனித உடலில் அம்ர்ந்து DNA சாம்பிளை எடுத்து அனுப்ப முடியும் இதனால். இந்த கருவியை வெகு தொலிவிலிருந்து இயக்க முடியும். இது ஜன்னல்கள் மூலமாக வீட்டின் உள்ளே நுழைய முடியும். மனிதர்களின் சட்டைகளில் ஒட்டிக்கொண்டு செல்ல முடியும் இதனால்.

கீதம்
15-08-2012, 04:37 AM
மிகவும் நுணுக்கமான இந்த அறிவியல் கண்டுபிடிப்பு அசத்துகிறது. இந்த அற்புதமான கண்டுபிடிப்பு ஆக்கபூர்வ செயல்பாடுகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் மட்டுமே செயல்படவேண்டும். இல்லையெனில் வேண்டாத விபரீதங்கள் (தேவையற்ற மரபணுக்களையோ, நோய்க்கிருமிகளையோ பிறருடைய கவனத்துக்குட்படாமல் அவர்களுடலில் செலுத்தி அபாயத்தை உருவாக்குவது போன்று) விளையக்கூடும்.

துப்பறியும் கொசு பற்றிய தகவல் பகிர்வுக்கு மிகவும் நன்றி மதுரை மைந்தன் அண்ணா.

மதி
15-08-2012, 04:39 AM
அட்டகாசம். ஆச்சர்யம் ஒரு பக்கம் இருந்தாலும் இம்மாதிரி கண்டுபிடிப்புகள் வேண்டாதவர் கைகளில் மாட்டினால் என்னாவது என்ற பயமும் எழாமல் இல்லை.

M.Jagadeesan
15-08-2012, 05:05 AM
துப்பறியும் கொசு அறிவியலின் அரிய கண்டுபிடிப்பு! இது ALL OUT -க்குத் தாக்குப் பிடிக்குமா?

மதுரைமைந்தன் அவர்களுக்கு நன்றி!

கலைவேந்தன்
15-08-2012, 05:21 AM
எச்சரிக்கையாகக் கையாள வேண்டிய கண்டுபிடிப்பு..!

அமரன்
15-08-2012, 09:27 AM
இதை மையமாக வைச்சு இன்னும் எவரும் படம் எடுக்கலையா.

தகவல் பகிர்வுக்கு நன்று மதுர அய்யா.

மகிழ்ச்சியும் பயமும் கலந்த உணர்வுக்கலவை உருவாவதைத் தடுக்க முடியவில்லை.

நாஞ்சில் த.க.ஜெய்
15-08-2012, 01:29 PM
இது நல்லதுக்கென்பதை விட தவறான செயல்களுக்கு அதிகம் பயன்படும் ....

jayanth
15-08-2012, 05:25 PM
சூப்பர் கொசுங்க மைந்தரே...இத வச்சு நம்ம ஊர் கொசுக்கள அழிக்கலாமா :medium-smiley-002:...????
.
.
.
தகவலுக்கு நன்றி மைந்தரே...