PDA

View Full Version : உடல் ஆரோக்கியத்திற்கான 5 விஷயங்கள்….



அமீனுதீன்
14-08-2012, 08:52 AM
1. பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிடுதல்.
அலுவலகம் செல்லும் நாட்களில் வீடு வந்தால் பழங்கள் சாப்பிடுவதையும், சனி, ஞாயிறு மட்டும் முறுக்கு அல்லது மிக்சர் போன்ற சமாச்சாரங்கள் அளவோடு சாப்பிடுவதையும் வழக்கமாக்கி கொள்ளலாம். பழங்கள் நிறைய சாப்பிடுவது மல சிக்கல் நீக்கம், உடலில் நல்ல ரத்தம், சக்தி சேருதல் போன்ற பல நல்ல பலன்கள் அளிக்கிறது.

2. உணவில் பூண்டு வெங்காயம் நிறைய சேர்த்து கொள்ளுதல்
பூண்டை தினமும் சமையலில் பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு நல்லது. பூண்டு குழம்பு, பூண்டு ரசம், பூண்டு சட்னி என பெரும்பாலும் தினம் ஒரு வகையை சமையலில் செய்யலாம்.. தினமும் பூண்டு சேர்த்துக்கொள்ளவதால் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் இரண்டும் உங்களை எட்டி பார்க்காது.

3. எட்டு மணி நேர தூக்கம்
விழாக்கள் அல்லது வெளியூர் செல்வது போல ஒரு சில நாட்கள் மட்டும் குறைந்தாலும், பெரும்பாலும் ஏழு அல்லது எட்டு மணி நேரம் தூங்கி விடுதல் நலம். தூக்கம் குறைந்தால் பிரச்ச்சனையாயிடும்.

4. உடலில் எந்த தொந்தரவு இருந்தாலும் டாக்டரை சந்திப்பது
சளி போன்ற சிறு விஷயங்கள் ஓகே. நாமே கூட சமாளிக்கலாம். உடல் குறித்த நம் பயங்கள் தீர்க்க வேண்டிய நபர் டாக்டர் தான். அவரிடம் பேசி விட்டால் பிரச்சனை நம்முடையதல்ல அவருடையது; அவர் சரி செய்ய வேண்டும்; நாம் ஒத்துழைக்க வேண்டும்.

5. வருடாந்திர உடல் பரிசோதனை
இது இந்த லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்தது. என்ன தான் இருந்தாலும் “அடிக்கடி இரவில் சிறுநீர் போகிறோமோ? சர்க்கரை நோய் இருக்குமோ? இடுப்பு பக்கம் வலிக்கிறதே? கிட்னி பிரச்சனை இருக்குமோ” போன்ற சந்தேகங்கள், பயங்கள் ஒரு பக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். இவை முழுதாய் போக வேண்டுமானால் வருடாந்திர உடல் பரிசோதனை தான் சிறந்தது. பொதுவாக நாற்பது வயதுக்கு மேல் வருடம் ஒரு முறை உடல் பரிசோதனை எடுக்க வேண்டும் என்பார்கள். இன்றைய சூழலில் முப்பதுக்கு மேலே கூட, 1 அல்லது 2 வருடத்திற்கொரு முறை எடுக்கலாம்.

நன்றி:http://udal-nalam.thaalamnews.com/2012/08/10/physical-health-issues-5/

jayanth
14-08-2012, 11:40 AM
மிகவும் பயனுள்ள தகவல். பகிர்விற்கு நன்றி அமீனுதீன்...