PDA

View Full Version : மண்ணுலக சொர்க்கம்



A Thainis
13-08-2012, 03:56 PM
பொழுதெல்லாம்
உடலை வருத்தி உழைத்து
வெயிலில் வதங்கி
வியர்வையில் குளித்த
உழைப்பாளிக்கு
உறக்கம்
மண்ணுலகில் - ஓர்
சொர்க்கம்

ஆதவா
13-08-2012, 05:06 PM
சொர்க்கம் என்ற எதுவுமே கிடையாத நிலையில் மண்ணுலகமே ஒரு சொர்க்கம் தானுங்க.. நிஜ சொர்க்கம்.
பொதுவாக எல்லாருக்கும் உறக்கம் + கனவு = சொர்க்கமே!

சொற்கம் அல்ல. மாற்றிக் கொள்ளுங்கள்.

உண்மையில் ஒரு உழைப்பாளி, உறக்கத்தை விரும்புவதில்லை, உழைப்பையே விரும்புகிறான்.
உழைப்பை விரும்பும் உழைப்பாளிக்கு செல்வம் பெருகுவதில்லை.
முரண் தான். வேறுவழியில்லை.

கவிதைக்கு வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள். அதைவிட நிறைய படியுங்கள்.

அன்புடன்
ஆதவா.

A Thainis
13-08-2012, 07:02 PM
சொர்க்கம் என்று மாற்றிக்கொண்டேன் மிக்க நன்றி. உழைப்பாளி உழைக்கவே விரும்புகிறான் அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. இங்கு நான் உழைப்பாளியை குறைவாக மதிப்பிடவில்லை உயர்வாகவே மதிப்பிடுகிறேன். மறுவாழ்வில் நாம் எதிர்பார்க்கும் சொர்கத்தை உழைப்பாளி இப்போதே தனது உண்மையான உழைப்பின் களைப்பால் அந்த இன்பத்தை அடையும் பேறுபெற்றவன். சொர்க்கத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் பெரும்பாலான மனிதர்களின் வாழ்வை நெறிபடுத்துவது சொர்க்கம் என்ற வாழ்வின் எதிர் நோக்குதான்.
அன்பு செயல்களுக்கு உட்பட்டதாகவே சொர்க்கம் இருக்கிறது.

நிறைய படிக்க சொல்லி அறிவுரை தந்தமைக்கு நன்றி. ஏற்கனவே நிறைய படித்து கொண்டுதான் இருக்கிறேன், உங்களது அறிவுரை மேலும் வலுச்சேர்க்கட்டும்

அமரன்
13-08-2012, 08:48 PM
உண்மைதான்..
உழைப்பாளியின் உறக்கம் அவனுக்குச் சொர்க்கம்தான்.
ஊதாரிக்கு உறக்கம் நரகம்தான், அவனுக்கும் எல்லாருக்கும்..

தொடர்ந்து எழுதுங்கள் தைனிஸ்.

கீதம்
14-08-2012, 04:54 AM
கனவுகளின் போதும் கலையாத, நினைவுத் தப்பிய நீள் உறக்கம்...

காசினால் காசினியைப் பெற்றாலும், இமைதழுவா இன்னுறக்கம்...

களைத்தவனுக்கு அதிகாலைவரை மெய்க்காவலான கண்ணுறக்கம்...

உழைக்கும் வர்க்கத்துக்கு உறக்கம் சொர்க்கம்தான்.

கவி நன்று. பாராட்டுகள் தைனிஸ்.

செல்வா
14-08-2012, 05:03 AM
களைத்துவிட்ட உழைப்பாளிக்கு (உடலுளைப்பு, மூளையுழைப்பு) எதுவாயினும் உறக்கம் சொர்க்கம் தான்.
அனுபவ உண்மை.

தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்!