PDA

View Full Version : பதியை கிளப்பியதன் பின்னணி...அன்புரசிகன்
13-08-2012, 05:50 AM
அண்மைக்காலமாக மன்றத்தில் ஒரு நபரின் (X) பங்களிப்பு சற்று சந்தேகத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை. இரவு 9:30 இருக்கும். படுக்கைக்கு சென்றுவிட்டு கணினியை ஆரம்பிக்கவும் அலைபேசி அலறியது. பார்வதி நம்பியார் என்று காட்டவும் யாரையா இந்த நேரத்தில என்றுவிட்டு பார்த்தால் அதே சந்தேக நபர்... வழக்கமான குசலவிசாரிப்புக்கு பின் என்ன விசேசம் ஊருக்கு போகப்போறீங்க போல என விசாரிக்க 6 மாதத்துக்கு முன் ஒரு சத்திரசிகிச்சை நடந்தது. அதுசம்பந்தமாக தான் ஊருக்கு போறேன் என்றார். அவரின் பேச்சில் பல மழுப்பல்கள் இருக்கவே அலைப்பு கட்டணம் அதிகரிக்காது இருக்க தொடர்பாடல் skype க்கு மாறியது...

ஏறத்தாள 30 நிமிடம் தாண்டியிருக்கும். விட்டுக்கொடுப்பாரில்லை. சரி பேச்சை மாற்றுவோம் என்று என்ன படம் பார்த்தீங்க என நானும் அதற்கு ஏதோ சோகப்படங்களின் பெயரா சொல்லிக்கொண்டு போனார்... சகுனி பார்த்தீங்களா என்றதற்கு இல்லங்க. ஒருத்தரும் பெரிசா சொல்லல. அதால பார்க்கல என்றார். நகைச்சுவைக்காக பார்க்கலாம் பாருங்கள் என்று சொல்லவும்.. சரி ஊருக்கு போவதற்கு முன்னர் பார்த்திடணும். பிறகு நேரம் இருக்காது என்றார்...

சந்தேகம் இன்னும் கூடியது...

சரி உங்கள் நண்பர் ஒருவரோட பேசுவோமா என்றதற்கு அவரும் சம்மதித்தார். ஆனால் நான் சொல்லும் வரைக்கும் மூச்சுக்கூட விடக்கூடாது என்ற எனது கட்டளைக்கும் சம்மதித்தார். உடனே ஒரு முக்கோண தொடர்பாடல் ஆரம்பமானது. மற்றய முனை புதியலாந்துக்கு... (Y) :D

வழமையான குசலங்களுக்கு பின்னர்

நான்: என்ன பியர் போத்தில் சத்தம்...

Y: நான் சாப்பிடுகிறேன்.

நான்: என்ன சாப்பாடு...

Y: பிரியாணி

நான்: தாங்கள் சமைச்சதோ?

Y: ஏனிந்த கொலவெறி...

Y: ம்.. அப்புறம்...

நான்: X பேசினவரோ..

Y: ஒஃபீசில இருக்கேக்க பேசினவன். நான் கொஞ்சம் பிசி. அதால சரியா பேசேல...

நான்: என்னவாம்?

Y: ஊருக்கு போறானாம்.

நான்: ஏனாம். இப்பதானே போய் வந்தவர்.

Y: அது அவரோட வீடு கட்டு நடக்குதாம். அதப்பார்க்க முதல் போனவர். இப்ப அது முடியப்போகுது. அதோட ஹொஸ்பிடல் போகணுமாம். அதோட எல்லாம் சரிவந்தா வெடிங்ஐயும் ஒரே நேரத்தில முடிக்கிற ஐடியாவாம்.

நான்: இவ்வளவையும் பிசியா இருக்கேக்க கதைச்சியளோ???

Y: ஏன் ஏன்???

நான்: இல்ல அப்ப பிசியா இல்லயென்றால்...

Y: அத விடுங்க... அப்புறம் என்ன அவரப்பற்றி விசாரணை?

இல்ல X உம் கேட்டுக்கொண்டிருக்கிறார்....

X இன் வழமையான சிரிப்பு ....

X: ஏன் ஏன் நல்லாத்தானேப்பா போய்க்கிட்டிருந்தீச்சு....ஏம்மா எல்லாத்தையும் போட்டுடைச்சிட்டா....

பின் பழையபடி மழுப்பல்கள்... சில புலம்பல்கள் அவை தணிக்கை செய்யப்படுகிறது...

சரி Y அப்புறம் பேசுவோம்.... துண்டிக்கப்பட மீண்டும் skype ற்கு....

நான்: ம்.. இப்ப மாட்டருக்கு வாங்க...
மறுமுனை சிரிப்பு தொடர்ந்தது...

X: ஏங்க இப்படியெல்லாம் செய்யுறீங்க...

நான்: நாமளா கேட்க்கும் போது சொல்லியிருந்தா பிரச்சனை இல்ல. அப்புறம் இப்படித்தான் திருகுதாளம் பண்ணுவோம்... சரி அதவிடுங்க. விசயத்துக்கு வாங்க.. ஏன் ஊருக்கு போறீங்க...

X: இல்லையப்பா... ஒருவருசத்துக்குமுன்னம் வீட்ல அறம்புறமா பார்த்தாங்க... வாறவங்க வீட்டப்பார்த்திட்டு போய்டுறாங்க. வீட்ட திருத்தணும் என்று தோணிச்சு. வாற சம்பளமும் பத்தல. அதால துபாயிலிருந்து கத்தாருக்கு மாறவேண்டி வந்தது. (கவலையோட சொன்னார்)

நான்:ஏனையா கத்தாருக்கு என்ன குறை.

X: இங்க பெருசா Entertainment இங்க இல்ல..

நான்: துபாயில எத்தினதடவ கிளப் பப் என்று போயிருக்கீங்க...

X: அதுக்கெல்லாம் எங்க நேரம்.

நான்: யோவ்.. கிளம்பினா வேல வேலமுடிஞ்சா வீடு. இப்படி இருக்கிற உங்களுக்கு துபாயென்னா கத்தாரென்ன. ? சம்பளம் வந்தா சரி தானே...

X: அதுவும் சரி தான்... போனவருசம் வீட்டு வேலையும் தொடங்கியாச்சு. இப்ப முடியுற நேரம். ஆறுமாசத்துக்கு முன்னால ஒரு சர்ஜரி. 3 மாசத்தால போயிருக்கணும். இங்க லீவு இல்ல. அது தான் ரமதான் லீவுல போய்டட்டு அப்படியே ஏதாவது பொருந்தினா முடிச்சிட்டு வந்திடணும். அடிக்கடி லீவு தரமாட்டாணுங்க.....

நான்: அப்ப இன்றைக்கு வெள்ளி தானே. இன்றைக்கே சகுனிய பார்த்திடப்பா... அப்புறமா அமரன் அக்னி ஓவியன் பாடு தானே... படம் எல்லாம் பார்க்க நேரம்வராது...

X: இனி உங்களுக்கு நல்லா தூக்கம் வருமே....

நான்: இந்த கிழமைக்கு இது போதும். முடிஞ்சா நம்ம மக்களுக்கும் சொல்லீடுறேன்...

X: இங்க... சும்மா வதந்திய கிழப்பாதீங்க...

நான்: பயப்படாதப்பா... நான் திங்கள் தான் போடுவன். நீங்கள் திங்கள் ஊருக்கு போய்டுவீங்கள். அப்புறமா ஆறேழு மாசத்துக்கு மன்றப்பக்கம் வரப்போறதில்ல. அதுக்குப்பிறகும் ஆடிக்கொருக்கா. அமாவாசைக்கொருக்க.. அந்த நேரத்தில இதப்பற்றி மறந்திடுவாங்க...

பின் சில பேச்சுக்களுடன் தொடர்பாடல் நிறைவுக்கு வந்தது. இப்போ நமக்கு சனிக்கிழமையாச்சு... இதுல யார் X யார் Y x க்கு திருமணமா இல்லையா என்பதெல்லாம் உங்கள் ஊகம்... ஏதோ சொல்லணும் போல தோணீச்சு. சொல்லீட்டேன்.... இதயெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க... :D :D :D

மதி
13-08-2012, 06:04 AM
இத படிச்சதுக்கு எங்கியாவது போய் முட்டிக்கலாம்.. தலையும் புரியல வாலும் புரியல. :(

இது பதியை கிளப்பியதன் பிண்ணனியா? பீதியை கிளப்பியதன் பிண்ணனியா?

கீதம்
13-08-2012, 06:10 AM
அதான் பார்வதி நம்பியார்னு முன்னாடியே சொல்லிட்டீங்களே... அப்புறம் என்ன x என்று புதிர் போடுறீங்க? :)

அந்த Y தான் யாரென்று தெரியல. ஒருவேளை அவரா இருக்குமோ? :icon_hmm:

மதி
13-08-2012, 06:32 AM
யார் பார்வதிநம்பியார்?:fragend005:

தீபா
13-08-2012, 06:39 AM
காலையில தெளிவா இருந்தேன்.

அன்புரசிகன்
13-08-2012, 06:48 AM
இத படிச்சதுக்கு எங்கியாவது போய் முட்டிக்கலாம்.. தலையும் புரியல வாலும் புரியல. :(

இது பதியை கிளப்பியதன் பிண்ணனியா? பீதியை கிளப்பியதன் பிண்ணனியா?


யார் பார்வதிநம்பியார்?:fragend005:

உதவியாளரா இருக்கிறவங்க கரண்ட்ல இருக்கணும். (நன்றி: சகுனி - கமல்)

அன்புரசிகன்
13-08-2012, 06:51 AM
அதான் பார்வதி நம்பியார்னு முன்னாடியே சொல்லிட்டீங்களே... அப்புறம் என்ன x என்று புதிர் போடுறீங்க? :)

அந்த Y தான் யாரென்று தெரியல. ஒருவேளை அவரா இருக்குமோ? :icon_hmm:

உங்களுக்காக ஒரு துப்பு...
அண்மைய 4 பக்கங்களை தாண்டிய திரிக்கும் இதற்கும் கொஞ்சம் சம்பந்தம் இருக்கு...
Y ஐ கேள்விப்பட்டிருப்பீங்க.. தெரிஞ்சிருக்காது. ஆனால் மதி பலதடவை வாங்கிக்கட்டியிருக்கிறார்...

அமரன்
13-08-2012, 06:55 AM
ஸ்ரீனிவாசா.... வெங்கட்ரமணா...


ரசிகரே...!


புதுலாந்த்து கிட்டச் சொல்லுங்க.. முடிஞ்சா பேசச்சொல்லி...


எப்ப விசேசம்னு எக்ஸ் கிட்ட கேட்டதாச் சொல்லுங்கோ..

கீதம்
13-08-2012, 06:58 AM
உங்களுக்காக ஒரு துப்பு...
அண்மைய 4 பக்கங்களை தாண்டிய திரிக்கும் இதற்கும் கொஞ்சம் சம்பந்தம் இருக்கு...
Y ஐ கேள்விப்பட்டிருப்பீங்க.. தெரிஞ்சிருக்காது. ஆனால் மதி பலதடவை வாங்கிக்கட்டியிருக்கிறார்...

X என்று சுருக்கமா பார்வதி நம்பியாரைத்தான் சொல்றீங்கன்னு புரிஞ்சிகிட்டேன். Y தான் இன்னும் சந்தேகமாவே கிடக்கு.

ஓ... அவரோ?

ஆதி
13-08-2012, 06:58 AM
மாமாவும் மருமகனுமா ?

அன்புரசிகன்
13-08-2012, 07:02 AM
மாமாவும் மருமகனுமா ?
இதப்பற்றி கொஞ்சம் விசாரிக்கணும். யாரு மாமா யாரு மருமகன்???

அடுத்த வெள்ளி இரவு இதற்கு ஒதுக்குகிறேன். :D

ஆனால் நீங்கள் எல்லாம் தடுமாறுறதப்பார்த்தா எனக்கு பயமா இருக்குங்க...

பதில் இல்லை...

ஆதி
13-08-2012, 07:15 AM
​புதியலாந்தை கவனிக்காததால் வந்த பிழை ரசிகன்

மதி
13-08-2012, 07:30 AM
புதியலாந்து.. புதிய...லாந்து.. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு..??

ஆமா.. இங்க என்ன நடக்குது?:wuerg019:

மதி
13-08-2012, 07:32 AM
Y: ஏன் ஏன்???

இது சொல்லுமே பல கதைகளை..

kulakkottan
14-08-2012, 03:25 PM
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கட்டும் !
மணிரத்தினம் படமும் தோத்திடும்

கலைவேந்தன்
14-08-2012, 03:53 PM
தெரியாத்தனமா இந்த பக்கம் வந்திட்டேன்... நேக்கு வேணும்.. நேக்கு வேணும்... நன்னா வேணும்... அபிஷ்டு அபிஷ்டு... ( என்னையத்தான் சொல்லிக்கினேன்.. )

kulakkottan
14-08-2012, 04:26 PM
sep 15 தானே அமெரிக்க தாக்குதல் நடக்கும் ?

arun
21-10-2012, 01:07 PM
ஒண்ணும் புரியல ! இதுக்கு யாரும் விளக்கமும் கொடுக்கல போல

சுகந்தப்ரீதன்
21-10-2012, 02:53 PM
அடங்கொக்க மக்கா... அருணண்ணனுக்குதான் நன்றி சொல்லோனும்.. ரெண்டுமாசமா இந்ததிரி எப்படி என்ர கண்ணுல படமா போச்சி..:sprachlos020:


பின் பழையபடி மழுப்பல்கள்... சில புலம்பல்கள் அவை தணிக்கை செய்யப்படுகிறது... ஏனுங்க ஜமீந்தாரே... அதையெல்லாம் பார்வதி நம்பியாருக்கு காணிக்கை செலுத்திட்டிங்களாக்கும்..?!:lachen001:

நாஞ்சில் த.க.ஜெய்
21-10-2012, 06:24 PM
ஏனுங்க தலையும் இல்லாம வாலும் இல்லாம இது என்ன புது கூத்து..யாரோ ரெண்டு பேரு பெருசா பல்பு வாங்கியிருக்கீங்க அது மட்டும் தெளிவா தெரியுது...யாரு அந்த ரெண்டு பேரு கண்டு பிடிச்சி சொல்லுங்கப்பு..