PDA

View Full Version : இரவு பூக்கள்



A Thainis
10-08-2012, 09:12 PM
விரிந்து கிடக்கும்
விண் சோலையில்
பூத்து குலுங்கி
இரவொன்றை பகலாக்க
போரிட்டு
விண்ணோடு உரசி
காரிருளை கறைத்திட்டு
மரகதவொளி வெள்ளத்தில்
மின்னி விளையாடும்
இரவு பூக்கள்

M.Jagadeesan
11-08-2012, 01:08 AM
இரவுப் பூக்கள் எதுவென்று சொல்லவில்லையே! விண்மீன்கள் என்று வைத்துக் கொண்டாலும் , இரவைப் பகலாக்கும் சக்தி அதற்கு உண்டா?

kulakkottan
11-08-2012, 03:44 AM
இரவொன்றை பகலாக்க
போரிட்டு
விண்ணோடு உரசி

M.Jagadeesan ,அவற்றின் பகலாக்க முடியா இயலாமையை தான் !
போரிட்டு...கறைத்திட்டு(கரைதிட்டு ) என்று தொக்கு நிற்கும் பதம் மூலம் வெளிபடுத்த முனைந்திருக்கிறார் thainis!

jayanth
11-08-2012, 04:32 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

A Thainis
11-08-2012, 06:37 AM
ஜெகதீசன் அவர்களுக்கு நான் சொல்லவந்த விளக்கத்தை மிக தெளிவாக சொல்லிருக்கிறார் குலகோட்டன். விண் சோலையில் குவிந்துகிடப்பது விண்மீன்கள்தான்,
அவைகளுக்கு பகலவனாக ஆசை ஆகவேதான் இரவு முழுவதும் போரிட்டு அவர்கள் தோற்றாலும், அவர்கள் போராட்டம் இரவுக்கு அழகும் நம் விழிகளுக்கு விருந்தாகவும் அமைகின்றன.

சுகந்தப்ரீதன்
11-08-2012, 07:22 PM
கற்பனையில் ஒளிர்கிறது இரவுபூக்களின் எழில்..!!:)

கலக்குங்க தைனிஷ்..!!:icon_b:

A Thainis
11-08-2012, 09:10 PM
நலமான வாழ்த்துக்கு நன்றி சுகந்தப்ரீதன்

அமரன்
11-08-2012, 09:13 PM
இரவுப் பூக்காட்டில் பறித்த
ஒற்றைப் பூ..
கற்பனைக் காம்பில் அழகாக..

A Thainis
11-08-2012, 09:18 PM
அமரன் உங்கள் கருத்து பதிவிலும் இரவு பூக்களின் கற்பனை வளம் மின்னி விளையாடுகிறது, நன்றி.

vasikaran.g
19-09-2012, 12:02 PM
இரவு பூக்கள்
இளைய கவியின்
வரைவால்
மணக்கும்
பாக்கள் ..

நாஞ்சில் த.க.ஜெய்
19-09-2012, 12:12 PM
இரவுபூக்கள் கண்டது இம்மாலை வேளையில்..விண்ணோடு உரசி போரிட்டு மனதில் அமர்ந்த பூக்கள் மீண்டும் நாளை பூக்குமென்றே...தொடருங்கள் தைனிஸ்...

A Thainis
19-09-2012, 08:56 PM
வசிகரனின் வசிகரமான வாழ்த்து வார்த்தைகளுக்கும், நண்பர் நாஞ்சில் ஜெய் அவர்களின் பாராட்டுகளுக்கும் நன்றிகள் பல.

ஆதவா
20-09-2012, 08:32 AM
நன்றாக இருக்கிறது தைனிஷ்.

பூத்துக்குலுங்கல் எனும் சொல்லில் அது ஒரு பெண் என்று எடுத்துக் கொண்டேன். நம் இயற்கை எல்லாமே “தாய்” எனும் உறவில் குறிப்பிடப்படுவது போல..

வார்த்தைகளை எப்படி அமைத்திருக்கிறீர்கள் என்று பார்ப்போம்.

விரிந்து கிடக்கும்

பிரபஞ்சம் எத்தனை தொலைவு என்பது யாருக்கும் தெரியாது ஆனால் அது விரிந்து கொண்டேயிருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. விரிந்து கொண்டேயிருக்கும் என்று இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

விண்ணில் பகலே கிடையாது என்பதால் இயல்பாகவே எந்த விண்மீன்களும் பகலாக்க முயற்சிப்பதில்லை.

இருப்பினும் இரவுப்பூக்களான விண்மீன்களை வருணித்த விதம் அழகுதான். இந்த விண்மீனுக்கும் விண்ணுக்கும்தான் எத்தனை எத்தனையோ உவமைகள் தரப்படுகின்றன. ஒவ்வொருமுறையும் அவை புதியதாகவே தெரிகிறது.

நம் மன்றத்தில் “ வானத்தின் பொத்தல்” என்று அருமையாக யாரோ சொல்லியிருக்கிறார்கள்.... யாரப்பா அது??

இரவின் மேனியில்
தீராது மின்னும்
அம்மைப் புண்கள்

வாழ்த்துக்கள் தைனீஷ்.

A Thainis
20-09-2012, 11:40 AM
ஆதவன் இரவுபூக்கள் கவிதையை பற்றிய பின்னோட்டம் அழகு, அதற்கு பழைய கவிதை ஒன்றை மேற்கோள்காட்டி எழுதியதும் சிறப்பு.