PDA

View Full Version : நானாக நீயிருந்தால்



jayaprakash
09-08-2012, 07:01 PM
நானாக நீயிருந்தால்
உழைப்பின் அருமை
தெரியாத செல்வந்தனாய்
உனை உதாசீனம் செய்திருப்பாய்!

நானாக நீயிருந்தால்
மூடியபூத் திறக்கா
வண்ணத்துப் பூச்சியாய்
வேறு மலர்தேடிச் சென்றிருப்பாய்!

நானாக நீயிருந்தால்
காதலியின் சுடுசொல்லே
காதலின் பிள்ளையார்சுழி
எனும் தத்துவம் மறந்திருப்பாய்!

நானாக நீயிருந்தால்
நமக்குள்ளான யாவும்போல்
காதலுமொரு விளையாட்டு
என்று தப்புக்கணக்குப் போட்டிருப்பாய்!

நானாக நீயிருந்தால்
ஒருதலைக் காதலெனும்
இருதலைக் கொள்ளியால்
தாடி வைத்துத் திரிந்திருப்பாய்!

நானாக நீயிருந்தால்
இதயத்தில் பீறிடும்
பித்தம் தலைக்கேறி
நாளும் பைத்தியமாய் உழன்றிருப்பாய்!

நானாக நீயிருந்தால்
அறிவுஜீவியாய்த் தட*மாறிச்
சோகக்கவிதையாய்க் கிடைக்கின்ற
தாளிலே கிறுக்கிப் பிழைத்திருப்பாய்!

நானாக நீயிருந்தால்
எடுத்தெடுத்த முயற்சியெல்லாம்
அடுத்தடுத்துத் தோற்றுவிடக்
கண்ணீர்ப் பஞ்சத்தைக் கண்டிருப்பாய்!

நானாக நீயிருந்தால்
உனக்கில்லா உயிருடலுடன்
இருந்தென்ன போயென்ன
என்றே தற்கொலை புரிந்திருப்பாய்!

நானாக நீயிருந்தால்
எனக்கில்லா நீயாருக்கும்
இருக்கவும் கூடாதென்றே
உனது உயிரையும் பறித்திருப்பாய்!

ஜானகி
10-08-2012, 02:32 AM
நல்லவேளை....நானாக நீயில்லை...!

jayaprakash
10-08-2012, 02:58 AM
:) :)

ரொம்ப சீரியஸா எடுத்துட்டீங்களா?

HEMA BALAJI
10-08-2012, 07:00 AM
அட!! இருவேறு கோனங்களில் நானாக நீயிருந்தால்,,, நீயாக நானிருந்தால்,,,என கவிதை புனைந்த விதம் அழகு ஜெ.பி. வாழ்த்துக்கள்.

கீதம்
10-08-2012, 08:25 AM
அவள் நிலையில் தன்னையும், தன் நிலையில் அவளையும் இருத்தி ஆறுதலாய் ஆதரவாய்க் கவிபுனையும் மனம் ரசிக்கவைக்கிறது.

உன் பணம் என் பணம், என் பணம் என் பணம் என்பது போல், யார் யாராய் மாறினாலும் தான் மட்டும் மாறாமல் கவிதையானது காதலைத் தக்கவைத்துக்கொள்கிறது தன்னிருப்பில்.

அருமை. தொடர்ந்து எழுதுங்கள் ஜெயப்ரகாஷ்.

jayaprakash
11-08-2012, 01:56 AM
நன்றிங்க.

jayanth
11-08-2012, 03:27 AM
அருமை ஜேப்பி...

kulakkottan
11-08-2012, 04:11 AM
அருமை ஜெய பிரகாஷ் !
உங்கள் கவிதை!
நானாக நீ என்பதன் உட்பொருள் எனக்கு கடைசி பந்தியில் தான் புரிந்தது!எழுதட்டும் உங்கள் கற்பனை தொடர்ந்தும்

அமரன்
11-08-2012, 09:42 PM
இரண்டு கண்களால் இரண்டு காட்சியைக் காணும் முயற்சி. காதலில் எதுவும் சாத்தியம்..

கும்பகோணத்துப்பிள்ளை
24-09-2012, 07:50 AM
செம்புலப்புயல் நீா்!

நன்று! ஜெய பிரகாஷ்!


எமக்கு மட்டும்
ஈருடல்கள்
ஓன்றில் நீயாகிய நானும்!
மற்றொன்றில் நானாகிய நீயும்!