PDA

View Full Version : அரிவை முயக்கு.

M.Jagadeesan
09-08-2012, 04:10 PM
இருமனப் பெண்டிர் இல்லம் ஏகி
பொருளைத் தொலைத்து சிறுமை அடைந்து
மானம் இழந்து மதியும் கெட்ட
ஈனப் பிறவிகாள்! ஒருசொல் கேளீர்!

கட்டிய மனைவி காதல் மிக்கு
இன்முகம் காட்டி இருகை நீட்டி
உம்மை அணைத்து உடற்பசி நீக்கும்
அத்தகு இன்பம் அறியாயோ நீ?

குலமகள் முயக்கம் தருகிற இன்பம்
ஈட்டிய பொருளை வீட்டகத் திருந்து
உறவுடன் பகிர்ந்து அறவோர்க் களித்து
தானும் உண்டு மகிழ்தலை ஒக்கும்.

குறள் :

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.

கருத்து :

இல்லற வாழ்க்கையிலிருந்து , நல்வழியிலே ஈட்டிய பொருளைப் பிறர்க்குக் கொடுத்துத் தாமும் பங்கிட்டு உண்பதுபோல , இந்தப் பெண்ணின் தழுவல் இன்பமாக இருக்கிறது.

கீதம்
10-08-2012, 08:01 AM
இரண்டு வரிகளுக்குள் எத்தனை அரிய கருத்து! இல்லறத்தை நல்லறமாய் மாற்றும் இனிய வழியை அன்றே சொன்னாரே.

அருமையானதொரு குறளை எடுத்து அதற்கேற்றக் கவிபுனைந்து விளக்கியமை பாராட்டுக்குரியது.

குறளையும் பொருளையும் கதையாகவும் கவிதையாகவும் அனைவரும் அறியச் செய்யும் தங்களுக்கு என் நன்றியும் பாராட்டும் ஐயா.

M.Jagadeesan
10-08-2012, 08:35 AM
கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

கலைவேந்தன்
10-08-2012, 09:13 AM
வாய்மை உரைத்த குறள். அதன் மாண்மை தொனிக்கும் கவிதை. பாராட்டுகள் ஐயா..!

kulakkottan
11-08-2012, 04:30 AM
ஏழ்கடலை கடும் நடையில் ரெட்டை வரியில் கூறும் குரல்!
அந்த குரல் அர்த்தத்தை இளைமையாய் கவியில் காட்டி அரும் பணி செய்திருகிறீர்கள் !
M.Jagadeesan
அறிவை முயக்கு -என்பதன் எளிய அர்த்தம் தாருங்கள் ?

திருக்குறளை சிறந்த முகாமை நூலை ,தத்துவ நூலாக தான் கருத வேண்டி உள்ளது!
சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம் நூல நாபகம் வருகிறது!இது அரசிய ,ராணுவ ராஜ தந்திரத்தை கூட சொல்லி இருக்கிறது!
இதை மொழி பெயர்த்து உள்வாங்கி கொண்ட மேற்குலகு தனக்கென எதோ புதிய நூல்களை படைத்து தம்பட்டம் அடித்து கொள்கிறது !
Seven ways to greet a neighbour (http://vijay-mystory.blogspot.com/2011/01/seven-ways-to-greet-neighbour.html) என்பது மிக பிரபல்யமான ஒன்று !
wikipedia (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)

jayanth
11-08-2012, 04:35 AM
நெத்தியடியய்யா...

M.Jagadeesan
11-08-2012, 04:54 AM

"அரிவை முயக்கு " என்றால் பெண்ணின் தழுவல் என்று பொருள்.

M.Jagadeesan
11-08-2012, 04:56 AM
கலைவேந்தன், குளக்கோட்டன், ஜெயந்த் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

சொ.ஞானசம்பந்தன்
11-08-2012, 06:54 AM
குறளின் கருத்தைத் தெளிவான , யாவர்க்கும் புரியும் நடையில் செய்யுளாலேயே விளக்கிய திறம் பாராட்டுக்குரியது .

M.Jagadeesan
11-08-2012, 07:49 AM
ஐயா அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

ராஜா
14-08-2012, 06:11 AM
அறிவை முயக்கும் `அரிவை முயக்கு` பகிர்வுக்கு நன்றி அய்யா..!