PDA

View Full Version : சே குவேரா



kulakkottan
09-08-2012, 10:30 AM
https://m.ak.fbcdn.net/a3.sphotos.ak/hphotos-ak-snc6/217764_472542829431300_1029441070_n.jpg

கிளர்ந்தெழும் இளைஞர்களின் -கிழக்கு
அறிமுகமல்லோ உங்கள் -சரித்திரம்

ஊருக்கே நீ எரிந்தாய்- உனக்காய்
நீ எரித்தது உன் சொந்த விளக்கே -நேர்மை

கணவனின் பயத்தால் படிந்தவளை -கர்சித்து
விழிக்கசெய்தது உன் -பெண்ணடிமை மறுப்பு

பதவிப் பல்லக்கு பலமுறை காத்திருக்க -பற்றிக்கொள்ள
பிணம் தின்னி அரசியல் மூடன் அல்ல என்றது -உன் பொது நலம்


விதைத்து வியர்வை சிந்தும் விவசாயிகளிடமே -விதைத்தாய்
போராட்ட பேராயுதத்தை கூட நிற்பேன் நானும் என்று

கடை வரி நின்று காய் நகர்த்தும் தலையிடையே -படைக்கும்
முந்துவான் இந்த சே என்றது உன் -சோர்வுறா முகம்


மெருகேற்றாத மேலாடைகள் -மேன்மக்களின்
சொருபம் அகமனமொன்றே என்றது உன் -பிள்ளைத்தனம்

ஆஸ்துமா கூட அஞ்சியதே -அச்சமில்லை
என்று பனியோடு நீ பழகிய -அணிநடை கண்டு

அடங்கியிருக்குதே என்று கியூபா சென்றாய் -அன்று
இன்று கியூபாவின் பாசத்துக்கே நீ -யுரிமை


உன்னை போல் ஒரு புரட்சியின் கீழ் -அடக்கு முறை
கொன்றொழிக்க அடியெடுக்க -சின்ன ஆசைதான் எனக்கும்

சிவா.ஜி
09-08-2012, 01:31 PM
போராளி என்றாலே....உலகம் உச்சரிக்கும் ஒரே பெயர்.....கவிதை நாயகனின் பெருமை சொல்லும் கவிதைக்கு வாழ்த்துக்கள் குளக்கோட்டன்.

A Thainis
09-08-2012, 03:15 PM
சே குவேரா தன்னை எரித்து தரணிக்கு ஒளியேற்றிய போராளி, நீதிக்கு போராடும் அனைவருக்கும் அவர் ஒரு அணையா விளக்கு.
அந்த போராளிக்கு இந்த கவிதை ஒரு உயிர் துடிப்புள்ள சமர்ப்பணம்.

சுகந்தப்ரீதன்
09-08-2012, 03:18 PM
எல்லை கடந்த சுதந்திரத்தை உலகிற்க்கு கற்றுதந்த மாவீரன்.. அல்லும் பகலும் அயராது போராடிய அவனையும் வழக்கம்போல வரலாற்றின் சுவடுகளில் தூரோகமே துயில்கொள்ள செய்தது..!!

தோழனின் நினைவூட்டலுக்கு நன்றி தோழரே..!!:icon_b: