PDA

View Full Version : நாளிதழ்



A Thainis
08-08-2012, 03:59 PM
நேற்றைய நிகழ்வுகளை
இன்றைய செய்திகளாக்கி
நாளைக்கு வழிகாட்டி
காலங்கள் கடந்தாலும்
நிகழ்வுகள் மறைந்தாலும்
காலச் சுவடுகளாய் வாழ்ந்திடும்
நேற்று இன்று நாளை என்றும்
நின்றிடும் இந்த வரலாற்று பெட்டகம்

jayanth
08-08-2012, 04:31 PM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

சுகந்தப்ரீதன்
09-08-2012, 03:42 PM
வரலாறு ரொம்ம்ம்ம்ப முக்கியம் அமைச்சரே..!!:lachen001:

கலக்குங்க தைனிஸ்..!!:icon_b:

A Thainis
09-08-2012, 03:47 PM
என் படைப்புகளை வாசித்து, நல்ல கருத்துகளை வாரி வழங்கும் சுகந்தப்ரீதன் அவர்களுக்கு மிக்க நன்றி, உங்களை போன்ற நண்பர்களால் நம் மன்றம் சிறந்த வளர்ச்சி பெறுகிறது.

சுகந்தப்ரீதன்
09-08-2012, 04:07 PM
என் படைப்புகளை வாசித்து, நல்ல கருத்துகளை வாரி வழங்கும் சுகந்தப்ரீதன் அவர்களுக்கு மிக்க நன்றி, உங்களை போன்ற நண்பர்களால் நம் மன்றம் சிறந்த வளர்ச்சி பெறுகிறது.அய்யயோ... நீங்க தப்பா புரிஞ்சுட்டேள்... உண்மையில ஆடியில அன்பு சொன்னதுதான் உண்மை...!!:icon_ush:

HEMA BALAJI
10-08-2012, 07:09 AM
கவிதை மிக நன்று. வாழ்த்துக்கள் தைனிஸ்..

கீதம்
10-08-2012, 08:44 AM
நள்ளிரவு தாண்டியும் அரங்கேற்றப்படுகின்றன,
அச்சுமேடையில் சில ஒப்பனைகளோடு
அன்றாட வாழ்க்கை நாடகத்தின் கூத்துகள்.
விடியலில் வீட்டுவாயில்களில் அம்பலமாகின்றன
நேற்றையப் பொழுதின் ரகசியங்கள்!

வரலாற்றுப் பெட்டகத்தை வாழ்த்தியுரைத்தக் கவிதை அருமை. பாராட்டுகள் தைனிஸ்.

கலைவேந்தன்
10-08-2012, 08:45 AM
அன்றே முகிழ்த்து அன்றிரவே மடியும் விட்டில்களின் வாழ்க்கைதான் நாளிதழ்களுக்கு..

முதன் முதலில் காலையில் கைக்குவரும் நாளிதழ் சில மணிகளுக்குப் பிறகு சலித்துப்போன சமையல்காரனின் கண்ணில் படும் சர்க்கரைப்பொங்கலாய் மாறிவிடும் அவலம்..

அத்தகு நாளிதழ்களுக்கு தங்களின் இந்த வரிகளின் சமர்ப்பணம் மதிப்பை உயர்த்துகிறது. பாராட்டுகள் தைனிஸ்..!

M.Jagadeesan
10-08-2012, 01:26 PM
நாளிதழ் கவிதை அருமை தைநிஷ்!

A Thainis
10-08-2012, 01:43 PM
நாளிதழ் கவிதையை வாசித்து நல்ல கருத்துகளை வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

அமரன்
11-08-2012, 09:19 PM
நாலிதல்களை விரிக்கச் செய்து நாவிதங்களை உருவாக்கும் நாளிதழ்கள் நலிந்துதான் போய்விட்டன. பழைய பத்திரிகை படித்த உணர்வைத் தருகிறது இந்தக் கவிதை.

இறந்த காலக் கலங்கலால் எதிர்காலத்தை பிறப்பிக்கும் நான்காம் மூர்த்திகளும் நான்காம் கண்களும் நல்லபடியாக இருக்கட்டும் என ஆசைப்படும் மனசு எல்லாருக்கும் உண்டு.

A Thainis
11-08-2012, 09:22 PM
கருத்துக்கு நன்றி, நாலிதல், நாவிதம் புரியவில்லை அமரன், அந்த வார்த்தைகளை விளக்கவும்.