PDA

View Full Version : திரைப்படப் பாடல்களும் தமிழ் இலக்கியமும்



Hega
23-02-2012, 10:48 AM
உலகின் எம்மொழியிலும் காணாத சிறப்பு தமிழ் மொழிக்குண்டென்பர்.
தமிழ் மொழியில் காணும் குறிஞ்சிப்பாடல், குறுந்தொகை, ஆத்தி சூடி, கொன்றை வேந்தன்,திருப்புகழ், திருக்குறள் என பல அரிய பொக்கிஷங்கள் திரைபாடலகளாக்கபட்டு வெற்றி பெற்றிருக்கின்றன.

அவ்வகைபாடல்களை தேடி இங்கே தொகுப்பதுடன் அது குறித்த ஆரோக்கியமான் கருத்துக்களையும் இங்கே பகிரலாமா

Hega
23-02-2012, 11:15 AM
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
-செம்புலப்பெயனீரார்



என் தாயும் உன் தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும்
எப்படி உறவினர் ?
நானும் நீயும் எப்படி அறிந்தோம் ?
செம்மண்ணில் மழைநீர் போல்
அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டனவே.

நன்றி : எழுத்தாளர் சுஜாதா
( காதல் கவிதைகள் -குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்,)



பாடல் இணைக்க முடியவில்லை மன்னிக்கவும்.

M.Jagadeesan
23-02-2012, 01:38 PM
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். (காமத்துப்பால்-குறிப்பறிதல்-1094 )



இக்கருத்தை உள்ளடக்கிய திரைப்படப் பாடல்


உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின் றாயே !
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின் றாயே!
நேரிலே பார்த்தால் என்ன?
நிலவென்ன தேய்ந்தா போகும்?
புன்னகை புரிந்தால் என்ன
பூமுகம் சிவந்தா போகும்?

இது கவிஞர் கண்ணதாசன் இயற்றி , P.B. ஸ்ரீனிவாஸ் அவர்களால் பாடப்பட்டது. படம் தெரியவில்லை.

சிவா.ஜி
23-02-2012, 05:33 PM
கொடுங்கள் தங்கையே.....திரைப்படப்பாடல்கள் இலக்கியத்துக்கு எதிரானவையல்ல என்ற உண்மை புரியட்டும். உடைத்தெறியுங்கள் அந்த விம்பத்தை. வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
23-02-2012, 05:34 PM
அழகான பாடல்களை நல்கிய ஜகதீசன் அவர்களுக்கு நன்றி.

M.Jagadeesan
24-02-2012, 02:58 AM
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். ( காமத்துப்பால்-புணர்ச்சி விதும்பல் -1289 )

இக்குறளின் முதல்அடி பயின்று வந்துள்ள திரைப்பாடல்.

கொஞ்சிப்பேசும் கிளியே! -நல்
இன்பம் தரும் ஜோதியே!
மானே! மலரினும் மெல்லியது காதலே!
மகிழ்வோம் நாமே! புதுமை வாழ்விலே!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய இப்பாடல் இடம்பெற்ற படம் நாடோடி மன்னன்.

aren
24-02-2012, 05:23 AM
கலக்குங்க. பல புரியாத விஷயங்களை இங்கே புரிந்துகொள்ள வாய்ப்பாக அமைகிறது இந்தத் திரி. இன்னும் நிறைய எழுதுங்கள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
24-02-2012, 11:20 AM
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி --- குறள் 1118

இந்தக் குறளின் கருத்தை அப்படியே எடுத்து

"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் ஒளியில்லை" என்று கவிஞர் கண்ணதாசன் திரைப்படப்பாடல் எழுதினார் என்றால் மிகையாகாது.

அவ்வாறே :

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று ---குறள் 1112.

"அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை" என்று அடுத்த வரியையும் தொடர்ந்தார்.

மேலும்:

வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து ---குறள் 1124

"அவள் இல்லாமல் நானில்லை,
நான் இல்லாமல் அவள் இல்லை"

என்று நன்றாக ஆராய்ந்தால், கருத்துத் திருடல்கள் குறித்து ஒரு பெரிய ஆய்வே செய்யலாம் என்று நான் கருதுகிறேன் :)

ஆதவா
24-02-2012, 12:09 PM
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி --- குறள் 1118

இந்தக் குறளின் கருத்தை அப்படியே திருடித்தான்

"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் ஒளியில்லை" என்று கவிஞர் கண்ணதாசன் திரைப்படப்பாடல் எழுதினார் என்றால் மிகையாகாது.

அவ்வாறே :

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று ---குறள் 1112.

"அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை" என்று அடுத்த வரியையும் தொடர்ந்தார்.

மேலும்:

வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து ---குறள் 1124

"அவள் இல்லாமல் நானில்லை,
நான் இல்லாமல் அவள் இல்லை"

என்று நன்றாக ஆராய்ந்தால், கருத்துத் திருடல்கள் குறித்து ஒரு பெரிய ஆய்வே செய்யலாம்.:)

பொதுப்பாடல்கள் என்று வகைப்படுத்தப்பட்டவைகளை யார் வேண்டுமானாலும் கையாளலாம், அவை கருத்துத் திருடல்கள் அல்ல.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்... - ஆண்டாள்

மார்கழி திங்களல்லவா, மதி கொஞ்சும் நாளல்லவா.. - வைரமுத்து

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய் கூட ஒரு சங்கப்பாடல்தான்..

நீங்கள் எழுதியதை நான் திருடினால் அது உரிமை மீறல். தவறானது, திருக்குறளுக்கு உரை எழுதினாலோ அல்லது அதை அப்படியே எடுத்துப் போட்டு புதுகுறள் எழுதினாலோ காப்பிரை வாங்க வேண்டியதில்லை.

M.Jagadeesan
24-02-2012, 02:32 PM
நண்பர் ஆதவா கூறியது போல தமிழ் இலக்கியங்களில் இருந்து எடுத்தாளப்படும் வரிகள், கருத்துக்கள் திருட்டு ஆகாது. காதல் குறித்து இலக்கியங்களில் இல்லாத கருத்துக்களை நாம் புதிதாகக் கூறிவிட முடியாது. நிலவைக் குறித்து நாம் எதைப் பாடினாலும், அதை ஏற்கனவே ஒரு புலவன் பாடித்தான் இருப்பான். மற்றவர்கள் தோளின் மீது ஏறி நின்றுகொண்டுதான் , அறிவியலில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப் படுகின்றன. இலக்கியங்களிலும் அப்படித்தான்.

கௌதமன்
24-02-2012, 04:37 PM
எங்காவது திருடித் திருடியாவது ஏதாவது நல்லதாக திரைப்பட பாடலாசிரியர்கள் தரட்டுமே. ஏற்கனவே பல "உள்ளங் கவர் கள்ளர்கள் " களத்தில் இருக்கிறார்கள். அவர்களோடு பலரும் இணையட்டும். அப்படியாவது தமிழ் வளர்க்கப்படட்டும்.

கீதம்
24-02-2012, 11:20 PM
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து.

(நளவெண்பா 184)

மலர் கொய்யச் சென்ற மங்கை ஒருத்தியின் அழகு முகத்தைத் தாமரை மலரென்று எண்ணி வண்டுகள் வட்டமிட, அவற்றைத் துரத்தும் நோக்கோடு, தன் அழகிய கரத்தை முகத்தருகே கொண்டுவர, விரல்களைக் காந்தள் மலரென்று நினைத்த வண்டுகள் இப்போது விரல்களை நோக்கிப் பாய, செய்வதறியாது அப்பெண் பயத்தில் வேர்த்து நின்றாளாம். என்ன ஒரு அழகிய கற்பனை!

இந்த உவமையின் ஒரு பாதி கையாளப்பட்டத் திரைப்பாடல் இந்நேரம் நினைவுக்கு வந்திருக்கவேண்டுமே...

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற...

அதே... அதே... அதேதான்.

பாடல்:நான் மலரோடு தனியாக
படம்:இரு வல்லவர்கள்
பாடியவர்கள்-டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் பி.சுசீலா
வரிகள்- கவிஞர் கண்ணதாசன்

aren
25-02-2012, 02:34 AM
வாவ்!!! கீதம் அவர்கள் சொன்ன வரிகள், படித்தவுடன் வாவ் என்று தானாகவே சொல்ல வைத்துவிட்டது. நம் முன்னோர்களின் கற்பனைத்திறன் மிகவும் அருமை. அதை கண்ணதாசன் அவர்கள் அருமையாக எளிய தழிமில் நமக்கு அளித்திருக்கிறார்.

இன்னும் நிறைய கொடுங்கள்.

கீதம்
25-02-2012, 06:40 AM
வெகுநாளாகவே என் மனத்தில் ஓடிக்கொண்டிருந்த எண்ணம் இது. திரைப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இலக்கியவரிகளைப் பற்றி நமக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்துகொள்வதில் எத்தனை இனிமையும் மகிழ்ச்சியும். திரியைத் துவங்கிவைத்து அருமையானப் பாடல்களைப் பகிர வாய்ப்பளித்த ஹேகாவுக்கு மிகவும் நன்றி. இலக்கியங்களில் இருக்கும் அற்புதங்களைப் பாமர மக்களும் அறியச் செய்யும் நல்லெண்ணமே இதுபோன்ற பாடல்களுக்கு அடிப்படை என்று கவிஞர் கண்ணதாசனே சொன்னதாகப் படித்த நினைவு.

தொடர்ந்து பகிர்ந்துகொள்ளும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

கீதம்
25-02-2012, 07:06 AM
பூண்டி அரங்கநாத முதலியாரியற்றிய கச்சிக்கலம்பகம் (44)

என்னெஞ் சினுமினியார் இல்லையென எண்ணியதைத்
துன்னற் கருங்கச்சித் தூயவர்பால் - இன்னலறப்
பூங்கொன்றைத் தாரிரக்கப் போதி யெனவிடுத்தேன்
தீங்கொன்றைச் சூழ்ந்திலா தேன்.


என் நெஞ்சினும் இனியவர் வேறு எவரும் இல்லையென நினைத்து அந்த நெஞ்சினை காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதரிடத்தில் கொன்றைப்பூ மாலையை வாங்கிவரச்சொல்லி தூது அனுப்பினேன், அதனால் உண்டாகும் தீங்கைச் சற்றும் அறிந்திடாதவளாய்!

என்ன தீங்காம்? நெஞ்சம் அதற்குப் பிடித்தமானவரிடத்தில் போனால் திரும்பி வருமா? வராது அல்லவா? அப்படி அனுப்பிவிட்டுத் தவிக்கிறாளாம் அப்பேதை!

இதே கருத்து கவிஞர் வைரமுத்துவின் வரிகளில்….

நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு..
சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு..
தன்னன்னானன...தன்னன்னா… தன்னன்னானன...தன்னன்னா…

பாடல்: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
படம்: பூவெல்லாம் உன் வாசம்
வரிகள்: வைரமுத்து

சிவா.ஜி
27-02-2012, 07:20 PM
அடடா....தங்கை கீதத்தின் பதிவுகள் ...பழம் இலக்கியம் மற்றும், திரைமுலாம் பூசப்பட்ட புதுப் பாடல்களின் சுவையிரண்டையும் ருசிக்க வைக்கிறது.

வாழ்த்துக்கள்மா.

சிவா.ஜி
27-02-2012, 07:21 PM
ஜகதீசன் மற்றும் சுந்தர்ராஜ் அவர்களின் பதிவுகளும் ஆச்சர்யப்படுத்துகின்றன....ஆனந்தப்படுத்துகின்றன.

வாழ்த்துக்கள் நண்பர்களே.

Hega
27-02-2012, 09:16 PM
எல்லோரும் என்னை மன்னிக்கவும்,

திரியை ஆரம்பித்து விட்டு இந்தப்பக்கம் வராமலே இருந்து விட்டேன். கொஞ்சம் வேலை அதிகமானதால் முடியல்லை.

மிக மிக அருமையாக தொடர்கிறீர்கள் .. தொடருங்கள் ஓரிரு நாளில் நானும் சேர்ந்து கொளவேன். நன்றி

செல்வா
29-02-2012, 11:53 AM
அருமையான திரியைத் துவங்கிய ஹேகா அக்காவுக்கும். அதைத் தொடரச் செய்யும் மன்ற உறவுகளுக்கும் நன்றிகள்.

என் பங்குக்கு ஒன்றே ஒன்று சொல்லிவிடுகிறேன்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் இந்தப் பாடல் பல படங்களில் அப்படியே எடுத்தாளப் பட்டுள்ளது.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு

திரைப்படங்கள் :
சரஸ்வதி சபதம்
தசாவதாரம்

இன்னும் ஏதோ ஒரு பாடலில் இடையில் கேட்ட ஞாபகம்.

sarcharan
02-03-2012, 07:53 AM
அடி ராக்கம்மா கையத்தட்டு பாட்டுல தேவார பட்டு வருமே..

அமரன்
02-03-2012, 09:31 PM
பெரியவங்க புண்ணியத்தில் சின்னவங்க நாங்க நிறையக் கத்துக்கு்றோம் இல்லையா பாஸ்..:)

சினிமாப் பாடல்கள் தொடர்பாக எழுகின்ற ஏகப்பட்ட கூச்சல்களுக்கு நடுவில், திரை இசை இலக்கியம் என்ற நயத்தை நாடித் தேடித் தரும் அனைவருக்கும் நன்றி.

கனி இருக்கக் காய் கவர்ந்தற்று என்ற சொல்லாடலும் பொருந்தும்..

கானாப் பாடல்களின் நயத்தை ஜேபிஎல் அவர்கள் தொடங்கியதாக ஞாபகம்.

செல்வா
03-03-2012, 01:03 PM
அடி ராக்கம்மா கையத்தட்டு பாட்டுல தேவார பட்டு வருமே..

குனித்த புருவமும் கொவ்வைச் செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇம் மாநிலத்தே..!

சிவா.ஜி
05-03-2012, 09:01 PM
அசத்துறீங்க மக்களே.

Dr.சுந்தரராஜ் தயாளன்
06-03-2012, 01:00 AM
ஜகதீசன் மற்றும் சுந்தர்ராஜ் அவர்களின் பதிவுகளும் ஆச்சர்யப்படுத்துகின்றன....ஆனந்தப்படுத்துகின்றன.

வாழ்த்துக்கள் நண்பர்களே.
மிகவும் நன்றி சிவா.ஜி அவர்களே :)

கீதம்
29-04-2012, 07:14 AM
வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
சாயும் நிலவின் மழையிலே
காலம் நடக்கும் உறவிலே...

மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்...

திரைப்படம் எதுவென்று தெரியவில்லை.

வரிகள் கண்ணதாசன்.

எடுத்தாண்ட இலக்கியவரிகள்:

வாயின் சிவப்பை விழிவாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ.

(கலிங்கத்துப்பரணி )

Hega
29-04-2012, 03:57 PM
ஆஹா

திரையிசையில் இலக்கியம் அருமையான அலசல்கள்.ஒவ்வொருவர் பதிவும் ஆச்சரியம் தருகின்றது .

நானும் என் கைவசம் சில பாடல்களில் தொகுப்பு வைத்திருந்தேன். நேரம் கிடைக்கும் போது தேடி பகிர்கிறேன்..

கீதம் அக்கா,செல்வா, தயாளன் சார்,ஜெகதீசன் சார், சிவா அண்ணா அமரன் சார் என அனைவருக்கும் நன்றி... இன்னும் தொடருங்கள்.

Hega
29-04-2012, 04:03 PM
அருமை கீதம் அக்கா

அன்னை இல்லம் படத்தில்,கவிஞர் கண்ணதாசன் இயற்றி,கே.வி. மஹாதேவன் இசையமைத்து,டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பாடிய பாடல் இது.





வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
சாயும் நிலவின் மழையிலே
காலம் நடக்கும் உறவிலே...

மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்...

திரைப்படம் எதுவென்று தெரியவில்லை.

வரிகள் கண்ணதாசன்.

எடுத்தாண்ட இலக்கியவரிகள்:

வாயின் சிவப்பை விழிவாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ.

(கலிங்கத்துப்பரணி )

Hega
29-04-2012, 10:36 PM
அருமை ஐயா.


கண்ணதாசன் அவர்கள் வரிகளில் வாழ்க்கை படகு எனும்படத்தில் பாடபட்ட அழகிய அர்த்தம் தரும் பாடல் இது.



நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே.

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன
பூ முகம் சிவந்தா போகும்

பாவை உன் முகத்தைக் கண்டேன்
தாமரை மலரைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததே கனவோ என்று
வாடினேன் தனியே நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு.


இனம், மொழி, மதம் கடந்ததம காதல்.. போன நிமிடம் வரை யாரென்று அறியா ஒருவனை பார்த்த நொடியே இவன் என்னுடையவன் என உணரசெய்து அது வரை காலம் பெற்று வளர்த்து, சீராட்டி தாலாட்டிய உறவுகளையே மறக்க வைக்கும் காதல்..

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
-செம்புலப்பெயனீரார்

என்றோ எழுதியதை நீயாரோ நான் யாரோ ஒருவரையொருவர் யாரென்றும் அறியோம் , ஆனாலும் உன்னை கண்டபின் நானும் நீயும் வேறல்ல என எளிமைபடுத்தி

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே.

என்றும்


"யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக் கால்
தான் நோக்கி மெல்ல நகும்.என திருவள்ளுவரின் குறளை

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன
பூ முகம் சிவந்தா போகும்

இப்பாடலில் அழகாக புரியும் விதமாக கையாண்டிருப்பது கண்ணதாசன் அவர்களின் பாடல்களில் தெரியும் சிறப்புக்களில் ஒன்றாகும். .



அருமையான் பாடலொன்றை நினைவூ கூர்ந்து அதன் இலக்கிய தாக்கம் தேடி சங்க கால இலக்கியங்களையும் , குறுந்தொகைபாடல்களையும், கவனித்து கேட்க செய்தமைக்காய் மீண்டும் என நன்றிகள் ஐயா.


இன்னும் இன்னும் பகிருங்கள்





யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். (காமத்துப்பால்-குறிப்பறிதல்-1094 )



இக்கருத்தை உள்ளடக்கிய திரைப்படப் பாடல்


உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின் றாயே !
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின் றாயே!
நேரிலே பார்த்தால் என்ன?
நிலவென்ன தேய்ந்தா போகும்?
புன்னகை புரிந்தால் என்ன
பூமுகம் சிவந்தா போகும்?

இது கவிஞர் கண்ணதாசன் இயற்றி , P.B. ஸ்ரீனிவாஸ் அவர்களால் பாடப்பட்டது. படம் தெரியவில்லை.

கீதம்
08-08-2012, 03:12 AM
மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ...

படம்: பட்டணத்தில் பூதம்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடல்: அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...

எடுத்தாளப்பட்ட இலக்கியம்: கலித்தொகை - பாலைக்கலி
பாடியவர்: புலவர் பெருங்கடுங்கோ.

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்குஅவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்குஆங்கு அனையளே.