PDA

View Full Version : உன்னோடு நான்



kulakkottan
08-08-2012, 02:37 AM
http://4.bp.blogspot.com/-qlBZEXLt10A/UCHNkFcfxhI/AAAAAAAAAJE/QCJ8n5pf8Uw/s1600/girlinhair.jpg
உன் கண்ணிமை கருமை
என் கனவில் வரும் வெளிச்சமது

உன் ஓர விழி பார்வை
என் பாலைவனத்து சூரியகாந்தியது

உன் உரக்க தெரியா வார்த்தைகள்
என் வாழ்கையின் தொடர் சங்கீத பல்லவி ஆனது

உன் கூட நான் நடக்கும் தருணங்கள்
என் நடப்பு பயணத்தின் மறக்காத தடயமது

உன் செவியோர ஒற்றை முடி
என் நினைவுகளை உன்னருகி இழுக்கும் வடமானது

உன் நிஜமான அக்கறை -கறைபட்ட
என் நிஜ வாழ்வையே வெளுத்தது

உன் காதலோடு நானும்
என் கரிசனையோடு நீயுமே -நான் வேண்டுவது

தீபா
08-08-2012, 06:19 AM
கருமை - கனவில் வரும் வெளிச்சம்.

ஒரு அழகான முரண். காதலில் மட்டுமே தோன்றக்கூடிய பிழையற்ற பிழை.

மொத்த கவிதையையும் இந்த ஒற்றை முரண் தான் கிருஷ்ணனின் விரலைப் போல தாங்கி நிற்கிறது.
முதல் வரி போல இன்னும் நன்கு அழுத்தமாக யோசித்து எழுதியிருந்தால் கவிதை பிரம்மாதமாக இருக்கும்.


- தீபா

kulakkottan
08-08-2012, 11:04 AM
வழிகாட்டலுக்கு நன்றி தீபா!இன்னும் அழுத்தமாய் எழுத முயற்சிகிறேன் !

jayanth
08-08-2012, 04:30 PM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')).....http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')).....http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))