PDA

View Full Version : எதிரிகள் ஜாக்கிரதை!



M.Jagadeesan
08-08-2012, 02:32 AM
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!

நன்மை செய்தார்க்கு நன்மையே செய்வேன்!
புன்மை செய்தார்க்கும் நன்மையே செய்வேன்!


அதனால்
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!

அடுத்தவன் பொருளுக்கு ஆசைப் பட்டதில்லை
இறைவன்
கொடுத்தது போதும் என்று வாழ்பவன்!

அதனால்
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!

இன்முகம் காட்டி இன்சொல் பேசி
அன்பினைக் காட்டும் பண்பு கொண்டவன்!

அதனால்
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!

ஓர் இல், ஒரு சொல் என்று வாழ்பவன்
ஊரில் மக்களுக்கு உதவும் பண்பினன்!

அதனால்
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!

அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு
ஆலயம் சென்று இறைவனைத் தொழுவேன்!

அதனால்
எதிரிகள் என்று எனக்கு
யாருமே இல்லை இவ்வுலகில்!

ஆனால்
கண்ணுக்குத் தெரியா ஐந்து எதிரிகள்
மண்ணிலே உதித்த நாளது முதலா
என்னுளே இருந்து ஆட்டிப் படைத்து
துன்புறும் நரகிலே என்னைத் தள்ளி
இன்புறத் துடிக்கும் இயல்பினர் ஆவர்.
ஐம்புலன் என்னும் அத்தகு பகைவரை
அடக்கி ஆளும் மந்திரம் ஒன்றை
அடியேன் எந்தன் காதில் ஓதி
அருள்தனைச் செய்வாய் அம்பலத்து இறைவா!

கீதம்
08-08-2012, 02:42 AM
புலனைக் கட்டாதவனால் உளத்தைக் கட்ட இயலுமோ? ஐம்புலன்களின் அதீத ஆக்கிரமிப்பே புன்மை செய்யத் தூண்டுகோலென்று நினைத்திருந்தேன்.

நன்மையும் புன்மையும் நல்லதொரு மனமே செய்யும், புலன்களுக்கொன்றும் பங்கில்லையென்று பக்குவமாய் உரைத்துவிட்டீர்.

கவிதை பிரமாதம். பாராட்டுகள் ஐயா.

kulakkottan
08-08-2012, 02:56 AM
நன்மை செய்தார்க்கு நன்மையே செய்வேன்!
புன்மை செய்தார்க்கும் நன்மையே செய்வேன்!



யாரால் தான் வாழ முடியும் இப்பிடி இங்கு!
ஆக குறைந்தது எதிரிக்கு பயத்தை தானும் வெகுமதியாய் கொடுத்தால் தான் நாம் வாழலாம் !

இந்த இடத்தில் அட்டகாசம் பாடல் ஞாபகத்துக்கு வருகிறது .
"நல்லவனாய் நீயருந்தால் ஊரே தோளில் ஏறி நிற்கும்
வல்லவனாய் நீயிருந்தால் ஊரே தோளில் ஏற்றி வைக்கும் "

M.Jagadeesan

ஒவ்வொரு நல்லவனின் அசையையும் அப்பட்டமாய் சூது வாது இன்றி அழகாய் கவி வடிவம் கொடுத்திருகிறீர்கள்

M.Jagadeesan
08-08-2012, 03:43 AM
கீதம் , குளக்கோட்டன் ஆகியோரின் பாராட்டுரைக்கு நன்றி!

A Thainis
08-08-2012, 06:41 AM
ஓர் இல், ஒரு சொல் என்று வாழ்பவன்
ஊரில் மக்களுக்கு உதவும் பண்பினன்!



என்ற இவ்வரிகள் அற்புதம், எதிரிகள் இன்றி வாழ இது வழி காட்டும்,
இவ் கவிதையை போல யார் வாழ்ந்தாலும், ஐம்புலன்கள் ஏற்கனவே அவர்களின் கைக்குள் அடக்கம். பாராட்டுக்கள்.

தீபா
08-08-2012, 09:09 AM
ஜெகதீசன் சார்,

உங்களைப் பற்றிய அறிமுகம் மாதிரி இருக்கிறது கவிதை. இப்படியே எல்லாரும் இருந்துவிட்டால் நன்றாகத்தான் இருக்கும்.

கவிதை நன்று.
வாழ்த்துக்கள்.

தீபா.

M.Jagadeesan
08-08-2012, 10:00 AM
பாராட்டு நல்கிய தீபா அவர்களுக்கு நன்றி!

jayanth
08-08-2012, 05:20 PM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123')).....http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123')).....http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123'))