PDA

View Full Version : நீயாக நானிருந்தால்



jayaprakash
07-08-2012, 05:05 PM
நீயாக நானிருந்தால்
என் இதயம் சுமந்து வந்த*
கைக்குட்டைத் தூதைக்
கசக்கி எறிந்திருக்க மாட்டேன்!

நீயாக நானிருந்தால்
ஏக்கத்துடன் யாசித்த*
பார்வைக்குக் கொஞ்சம்
நஞ்சைக் கலந்திருக்க மாட்டேன்!

நீயாக நானிருந்தால்
அன்புடன் அழைத்த*
இனிமைப் பயணத்தைத்
தவிர்த்துத் தனித்திருக்க மாட்டேன்!

நீயாக நானிருந்தால்
உனக்காக எதையும்
துணிந்த என்னைத்
துறக்கத் துணிந்திருக்க மாட்டேன்!

நீயாக நானிருந்தால்
நொடிதோறும் ஆயிரமாய்த்
தட்டிய இதயக் கதவைப்
பூட்டி வதைத்திருக்க மாட்டேன்!

நீயாக நானிருந்தால்
உன்சீலை நுனியாக*த்
தவமிருந்த என்னைத்
துடைத்துத் தள்ளியிருக்க மாட்டேன்!

நீயாக நானிருந்தால்
உனைக் காணாமல்
எந்தன் விழிகளில்நீர்
வழியச் செய்திருக்க மாட்டேன்!

நீயாக நானிருந்தால்
ஏனென்றே அறியாமல்
காதல்வைத்த என்மேல்
வெறுப்பைச் சுரந்திருக்க மாட்டேன்!

நீயாக நானிருந்தால்
என்னன்புக் காதலை
வயசுக் கோளாறென்றே
குதறிக் கொன்றிருக்க மாட்டேன்!

நீயாக நானிருந்தால்
வெறும் மூன்று
சொல்லைச் சொல்வதற்கு
இத்தனை யோசிக்க மாட்டேன்!

சுகந்தப்ரீதன்
07-08-2012, 06:22 PM
அவள்....
நீ நானாக வேண்டாம்
நான் நீயாக வேண்டாம்
நாம் நாமாக வேண்டும்
என்றிருந்தால்...
இக்கவிதை இன்றிங்கிருக்காதோ..?!:)

நீங்க நீங்களாகவே இருங்க...
உங்களிடம் அந்த மூன்று சொல்லை..
சொல்வதற்க்கும் யாரோ ஒருவர் ஒருநாள் தயங்கக்கூடும்..!!:aetsch013:

வாழ்த்துக்கள்... ஜெயப்ரகாஷ்..!!:icon_b:

jayanth
07-08-2012, 06:34 PM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

கீதம்
09-08-2012, 12:41 AM
நீயாக நானிருந்தால்...
வேண்டாத பெண்ணை மனதால்
தீண்டவும் துணிய மாட்டேன்!
வேலையற்றவள் பின்னால் திரிந்து
வெறும்பொழுது போக்கமாட்டேன்,
காதலில்லாப் பெண்ணைப்பற்றி
கவிதையெழுதிப் புலம்பமாட்டேன்,
காதல் வாய்க்கும்பொழுது வாய்க்குமென்றே
இதயத்தில் நம்பிக்கை வைத்து
எனைப் புரிந்தவளுக்காய் காத்திருப்பேன்.

என்கிறாளாம் அவள்! எனவே காத்திருங்கள், திசை தப்பிய படகு மீண்டும் காற்றோட்டத்தால் (கால மாற்றத்தால்) பழையபடி நீங்கள் இருக்கும் திசை தேடியும் வரலாம் அல்லவா? :)


நீயாக நானிருந்தால் என்னும் நினைவில் எழுந்த கவி வரிகள் உண்மையில் அசத்தல். அடுத்தவர் நிலையிலிருந்து ஒரு பிரச்சனையை அணுகிப் பார்த்தால் தெரியும் அதன் ஆழம் என்பார்கள். அவள் நிலையிலிருந்து சிந்தித்தது (உங்களுக்கு சாதகமாகவே என்றாலும்) ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள் ஜெயப்ரகாஷ். தொடர்ந்து எழுதுங்கள்.

jayaprakash
09-08-2012, 11:14 AM
இது தான் கௌண்டர் குடுக்குறதுன்றதா?

நல்லாருக்குங்க.