PDA

View Full Version : வலியது வெல்லுமோ ?



kulakkottan
07-08-2012, 11:11 AM
https://m.ak.fbcdn.net/a1.sphotos.ak/hphotos-ak-ash3/s480x480/539213_470892606262989_1295028030_n.jpg
வலியது வெல்லுமோ ?
வஞ்சனை வெல்லுமோ!


இரைக்காய் ஒரு உயிர் விரட்ட
இதயம் இடிக்க ஓடும் ஜீவன்!

பெரும்பான்மை கவ்வும் சிறுமை
பெற்றது தக்க வழியில்லை சிறியதுக்கு

வெல்லுமோ இந்த உயிர் போராட்டம்
வெறும் எதிர்பார்ப்பாய் கரையுமோ!

அக்னி
07-08-2012, 11:59 AM
கூடவே ஒட்டியிருந்து
பிடித்துக் கொடுக்கும்
காக்கைவன்னியன், எட்டப்பன்
வால்கள் இருக்கும்வரை..,
கடினம்தான்,
சிறியதன் வெற்றி...

பல்லிக்குக் கிடைத்த வரம்,
கிடைக்காததே பெரும் சாபம்...

jayanth
07-08-2012, 06:50 PM
வெல்லும்...

சுகந்தப்ரீதன்
07-08-2012, 07:09 PM
இயற்கையின் உணவு சங்கிலியில்... பசிபோக்க கொலை வெறிகொண்டு துரத்தும் சிங்கம்... உயிர்காக்க உயிரை பிடித்துக்கொண்டு ஓடும் மான்... பெரும்பாலும் மான்களே இப்போட்டியில் வெல்கின்றன... காரணம் உணவு போராட்டத்துக்கும் உயிர் போராட்டத்துக்கும் உள்ள வீரியத்தின் வேறுபாடுதான்.!! இதில் தகுதியுள்ளதே தரணியில் தப்பி பிழைக்கும்...:icon_b:

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...
நம்பிக்கையே நல்லது... எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது..!!

M.Jagadeesan
08-08-2012, 12:37 AM
வலியது வெல்வதும், மெலியது தோற்பதும் உலகத்து இயற்கை. மெலியது வென்று வலியது தோற்றால் , உலகத்தின் இயக்கம் நின்றுவிடும்.

kulakkottan
08-08-2012, 01:50 AM
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது..!!

அர்த்தமான வரிகள்

கீதம்
08-08-2012, 02:02 AM
உணவுச்சங்கிலியில் இணைக்கப்பட்டுவிட்ட இரு உயிர்களின் போராட்டம். உயிரைத்தக்கவைக்கும் முயற்சியில் இரண்டுமே ஓட்டம். முன்னதன் முழுவீச்சோ, பின்னதன் துளிப்பின்வாங்கலோ, சங்கிலியின் இணைப்பை சற்றே நெகிழ்த்திடக்கூடும். எனினும், இன்றில்லையேல் நாளை... மீண்டும் நடைபெறும் உயிரைப் பணயம் வைத்து இன்னொரு பந்தயம். வாழ்க்கையின் தொடரோட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம் நாமும் இப்படி...

சிந்தனைத் தூண்டும் கவிதைக்குப் பாராட்டுகள் குளக்கோட்டன்.

கீதம்
08-08-2012, 02:07 AM
கூடவே ஒட்டியிருந்து
பிடித்துக் கொடுக்கும்
காக்கைவன்னியன், எட்டப்பன்
வால்கள் இருக்கும்வரை..,
கடினம்தான்,
சிறியதன் வெற்றி...

பல்லிக்குக் கிடைத்த வரம்,
கிடைக்காததே பெரும் சாபம்...

ஆட்டுக்கு வாலை அளந்துவைத்தானாம், எலிக்கு அளக்க மறந்தான்போலும்.

பல்லிக்குக் கிடைத்த வரம், எலிக்குக் கிடைத்தாதது பெரும் சாபம்,

எலிக்கு கிடைத்த சாபம், பூனைக்கு கிடைத்த வரம்.

வழக்கம்போல அக்னிப் பார்வை பட்டு கவிதை அழகாய் மின்னுகிறது.