PDA

View Full Version : எனது அறிவியல் சார்ந்த கவிதைகள்



மதுரை மைந்தன்
06-08-2012, 11:51 AM
உன்னை பார்த்த நாள் முதல்
உன்னை திரும்ப திரும்ப*
பார்க்க வைக்கும்
தொடர் கிரியை ( chain reaction) ஏன்?

ஒரு வார்த்தை கூட வாய் பேசாமல்
ஆயிரம் கவிதைகள் பேசுகின்றனவே
உன் கண்கள்
இது என்ன ஊடொலியா ( ultrasound)?

தொலைதூரத்திலிருந்தாலும் என்னை
ஈர்க்கின்றனவே உன் கண்ணொளிகள்
இது என்ன ஊடொளியா ( laser)?

நீ என்னை பார்த்து சிரித்தால்
என் இதயம் உன் காலடியில்
இது என்ன புவி ஈர்ப்பு விசையா (gravitational force)?

நீ என்னை ஒரு முறை பார்த்தாலே
வேகமாகும் என் இதய துடிப்புகள்
உன்னிடமுள்ள காந்த சக்தியாலா ( magnetic force)

நீ என்னை விட்டு விலகி செல்லும் போது
என்னுள் ஏற்படும் வெற்றிடம் (vacuum)
விண்வெளியில் கூட கிடையாது

அனைத்து சக்திகளையும் கொண்ட நீ
ஒரு அறிவியல் அற்புதம் ( scientific marvel).

மதுரை மைந்தன்
06-08-2012, 11:52 AM
மனிதர்களை போலிகை ( cloning)
செய்வது இல்லை
இருந்தும் எப்படி எங்கு பார்த்தாலும்
உன்னை காண்கிறேன்?

மனிதர்களை போலிகை ( cloning)
செய்வது இருந்தால்
நீ காணும் இடமெல்லாம்
நானாக* இருப்பேன்

மனிதர்களை போலிகை ( cloning)
செய்வது இருந்தால்
உன் சுயம்வரத்தில்
அனைத்து மண்வாளர்களும் நானே!

மதுரை மைந்தன்
06-08-2012, 11:53 AM
உன் நினைவால்

ஊண் உறக்கம் இன்றி

உடல் மெலிந்தேன்


உன்னிடமிருந்து தபால்

வராததால் தலை

முடியை பிய்த்ததில்

முடி உதிர்ந்தது


பஸ் நிலையத்தில்

உன்னிடம் டாவு அடித்த

பையனை நினைத்து பல்லை

கடித்ததில் பல்லில் இருந்து

ரத்தம் வருகிறது


உடல் மெலிந்து முடி கொட்டி

பல்லில் ரத்தம் வரும்

என் நிலை புற்று நோய்க்கான

அறிகுறிகள் என்கிறார்கள்


எனக்கு காதல் நோயா? புற்று நோயா?

டாக்டரான நீ தான் என்னை

குணப்படுத்த வேண்டும்

மதுரை மைந்தன்
06-08-2012, 11:55 AM
சாத்திரங்கள் பல படித்து

சோதனைகள் பல செய்து

தர்க்கங்கள் பல புரிந்து

கனவுகள் பல கண்டு

படைப்புகளின் உண்மைகளை

கண்டறிபவன் விஞ்ஞானி

மதுரை மைந்தன்
06-08-2012, 12:08 PM
அவளின் கனவுகள்
கனவுகளில் வரும் மரங்கள்
மரங்களில் தொங்கும் நகைகள்
அவளின் உயரத்திற்கு மரங்கள்
அவைகளை தொட முடியாத கைகள்
நகைகள் நகைக்கின்றன!

கீதம்
06-08-2012, 01:02 PM
அனைத்து சக்திகளையும் கொண்ட நீ
ஒரு அறிவியல் அற்புதம் ( scientific marvel).

அறிவியல் கவிதைகள் அசத்துகின்றன. ஊடொலி, ஊடொளி போன்ற புதிய சொற்பதங்கள் அறிந்தேன்.

அறிவியற்சிந்தனை கொண்டவனுக்கு, காதலி பற்றிய வர்ணனையும் அறிவியல் சார்ந்திருப்பதில் வியப்பென்ன?





எனக்கு காதல் நோயா? புற்று நோயா?

டாக்டரான நீ தான் என்னை

குணப்படுத்த வேண்டும்

இது காதல் தொற்றுநோய், மருத்துவர் நெருங்கிவர தொற்றிக்கொள்ளக்கூடும். :)


அவளின் கனவுகள்
கனவுகளில் வரும் மரங்கள்
மரங்களில் தொங்கும் நகைகள்
அவளின் உயரத்திற்கு மரங்கள்
அவைகளை தொட முடியாத கைகள்
நகைகள் நகைக்கின்றன!

கனவிலும் எட்டாக்கனியாய் மங்கையவள் ஆசைகள். நகைகள் நகைக்காமல் வேறென்ன செய்யும்?

ரசிக்கவைத்த அறிவியல் கவிதைகளுக்குப் பாராட்டுகள் மதுரை மைந்தன் அண்ணா.

தீபா
06-08-2012, 01:16 PM
சூப்பர் சூப்பர் மதுரை மைந்தன் அண்ணா

முதல் பாரா அபாரம் போங்கள். திரும்பத் திருப்ப பார்க்கவைக்கும் செயின் ரியாக்ஸன்.

அறிவியலும் காதலும் கலந்த இக்கவிதக்கு வாழ்த்துக்கள்.

jayanth
06-08-2012, 03:10 PM
அனைத்தும் அருமை மைந்தரே...!!!

மதுரை மைந்தன்
07-08-2012, 10:00 AM
உன் நினைவில் பித்தானேன்
பித்தம் தெளிந்தது
அல்ஜிமேர் நோய் வசப்பட்டவுடன்

மதுரை மைந்தன்
07-08-2012, 10:01 AM
என் மனமெனும் விண்வெளியின்
செவ்வாய் கிரஹத்தில் இறங்கினேன்
செவ்வாய் திறந்து நீ சிரித்ததும்

மதுரை மைந்தன்
11-08-2012, 12:05 PM
நான் சிரித்தால் மட்டுமே
நீ பதிலுக்கு சிரிக்கிறாய்
இது என்ன ந்யூட்டனின் மூன்றாம் விதியா?

நான் இருக்கும் இடத்தை விட்டு
நீங்கி செல்கின்றாயே
இது என்ன பாலியின் நீக்கல் தத்துவமா? ( Pauli Exclusion Principle)

உனது அருகாமையில்
எனது நேரம் காலம் மறைந்தது
ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்தினாலா? ( Einstein's theory of relativity)

உனது திருமண பத்திரிகையை நீ தந்தவுடன்
என்னிதயம் சுக்கு நூறாக உடைந்தது
பெரிய வெடிப்பு தத்துவத்தினாலா? ( Big Bang Theory)

கீதம்
11-08-2012, 01:24 PM
அட, இப்படியும் கூட அறிவியல் விதிகளை மாணவர்களுக்குச் சொல்லித் தந்துவிட முடியுமா? காதல் வினையில் விஞ்ஞான விதிகள் புகுத்திப் புதுமை செய்யும் தங்களுக்குப் பாராட்டுகள் மதுரை மைந்தன் அண்ணா.

சுகந்தப்ரீதன்
11-08-2012, 07:15 PM
அறிவியலையும் அவளியலையும் இணைத்து பிணைக்கும் கவிதைகள் ஒவ்வொன்றும் அழகியல்..!!:)

வாழ்த்துக்கள் மதுரையண்ணா..!!:icon_b:

jayanth
13-08-2012, 01:28 PM
அனைத்தும் சூப்பருங்க மைந்தரே...!!!

ஆதி
14-08-2012, 09:06 AM
//உன்னை பார்த்த நாள் முதல்
உன்னை திரும்ப திரும்ப*
பார்க்க வைக்கும்
தொடர் கிரியை ( chain reaction) ஏன்?

ஒரு வார்த்தை கூட வாய் பேசாமல்
ஆயிரம் கவிதைகள் பேசுகின்றனவே
உன் கண்கள்
இது என்ன ஊடொலியா ( ultrasound)?


நீ என்னை விட்டு விலகி செல்லும் போது
என்னுள் ஏற்படும் வெற்றிடம் (vacuum)
விண்வெளியில் கூட கிடையாது

//


அபாரமான வரிகள் ஐயா, மிக மிக ரசித்தேன்

போலிகை புது சொல் கற்று கொண்டேன்

கவிதைக்கு வாழ்த்துக்களும்

கலைசொற்களுக்கு நன்றிகளும் ஐயா

கலைவேந்தன்
16-08-2012, 03:07 PM
வித்தியாசமான முயற்சி. பாராட்டுகள் மதுரை அண்ணா..!