PDA

View Full Version : சைனஸ் பிரச்சனையால அவஸ்தைப்படுகிறீர்களா? கவலைபடாதீங்க...அமீனுதீன்
06-08-2012, 07:55 AM
பருவ காலநிலை அடிக்கடி மாறுபடுவதால், உடலில் ஜலதோஷம் திடீரென்று ஏற்படும், அவ்வாறு ஜலதோஷம் வந்தால், அது இரண்டு, மூன்று நாட்களில் போய்விடும். ஆனால் அது சிலருக்கு நீண்ட நாட்கள் இருந்து, எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாத அளவு இருக்கும். இதனால் அந்த சளியானது மூக்கில் நீண்ட நாட்கள் இருப்பதால், அது சைனஸாக மாறிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், தலைக்கு குளித்தப்பின்னர், தலையில் இருக்கும் ஈரத்தை காய வைக்காமல் இருப்பர். இதனால் தலையில் நீர் கோர்த்து, அடிக்கடி வலி ஏற்படும். பின் மூச்சு விடும் போது ஒரு துர்நாற்றம், திடீரென்று மூக்கில் எரிச்சல் போன்றவை ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளை போக்க ஈஸியான வீட்டு மருந்து இருக்கிறது.

சைனஸ் பிரச்சனையை போக்க...

* ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வர வேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலைவலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.

* தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.

* தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க்கோர்வை போன்றவை சரியாகும்.

* குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.

* கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும் முன் நெற்றிக்குத் தடவி, காலையில் கழுவ வேண்டும். இல்லையென்றால் கிராம்பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட் போல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவ வேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலைபாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குணமாகும்.

எனவே மேற்கூறியவற்றையெல்லாம் செய்து, சைனஸ்-ஆல் வரும் பிரச்சனையை ஈஸியான முறையில் வீட்டிலேயே சரிசெய்யலாம்.

நன்றி: http://tamil.boldsky.com/health/wellness/2012/home-remedies-sinus-problem-001700.html

A Thainis
06-08-2012, 01:59 PM
சைனஸ் பிரசின்னைக்கு அற்புதமான கை வைத்தியம், வாழ்த்துகள். சைன்ஸ் உள்ளவர்கள் வெளியே சென்று வந்தவுடன், மூக்கு தூவரங்களை வென்ணீரால் நன்கு கழுவ வேண்டும்.
மூக்கு தூவங்களில் தூசி தங்கமால் கவனிப்பது நல்லது.

jayanth
06-08-2012, 04:31 PM
முயற்சிக்க வேண்டும்...

கலைவேந்தன்
06-08-2012, 04:37 PM
எனக்கு சைனஸ் பிரச்சினை உண்டு.. மாத்திரைகள் எடுத்துக் கொண்டு அவ்வப்போது சரியாக்கிக்கொள்கிறேன்.

நான் இருப்பது புது தில்லியில்.

இங்கே தும்பைப்பூக்களுக்கு எங்கே போவேன்..?

தாய்ப்பாலுக்கு எங்கே போவது..? ( எங்க பசங்க எல்லாம் வளர்ந்தாச்சு ரொம்ம்ம்ம்ம்ப..)

குப்பை மேனி கீழா நெல்லிக்கு எங்கே போய்த்தேடுவது..?

ஹூம்... இருக்கறவரைக்கும் இடும்பை அனுபவித்து இறுதியில் இத்துப்போகவேண்டியது தான்.. ( அட எத்தனை ‘இ’ )

பகிர்வுக்கு நன்றி அமீனுதீன்..!

அமீனுதீன்
06-08-2012, 08:30 PM
நண்பர் கலை வேந்தன் அவர்களே,

எனக்கும் சைனஸ் உள்ளது அறுவை சிகிச்சை செய்து கொண்டும் பலன் இல்லை, பல ஆண்டுகளாக கஷ்டப்படுகிறேன், ENT மருத்துவரே இதை முழுவதும் குணப்படுத்த இயலாது என்று சொல்கிறார், என்ன செய்வது... விதி விட்ட வழிதான்...
தமிழகம் செல்லும் போது தான் இம்மருந்தை முயற்ற்சிக்க போகிறேன்.

சரி, இப்ப கிடைப்பவர்களாவது பெற்று பயனடையெட்டும், நன்றி

seguwera
06-08-2012, 08:38 PM
பயனுள்ள செய்தி முயற்சி செய்கிறேன் நன்றி

அனுராகவன்
06-08-2012, 10:08 PM
அருமை இன்றைய சூழ்நிலையில் அவசியம்...