PDA

View Full Version : நண்பன்



A Thainis
05-08-2012, 12:04 PM
என்னை புரிந்துகொள்ள
நானே தடுமாறியபோது - என்
புரிதலாக வந்தவன்

என்னை ஏற்றுக்கொள்ள
சொந்தங்களே மறுத்தபோது - தன்
இதயத்தில் சுமந்தவன்

என்னில் கருக்கொண்ட
திறமைகளை இனங்கண்டு - எனக்கு
முகவரி தந்தவன்

எனகென்று ஒன்றென்றபோது
உயிர் கொடுக்கவும் துணிந்தபோது - என்
உயிராகி இருந்தான்

தமிழ்மன்றம் நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய நண்பர்கள் நாள் நல்வாழ்த்துக்கள். :lachen001::wuerg019::aetsch013:


உங்களின் பாச தோழன்
ஆ. தைனிஸ்

M.Jagadeesan
05-08-2012, 12:35 PM
நண்பனின் இலக்கணங்களை உரைக்கும் கவிதை! அருமை!! பாராட்டுக்கள் தைநிஷ்!

கீதம்
05-08-2012, 01:06 PM
நல்ல நண்பனைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

நட்பின் பெருமை பேசும் கவிதைக்குப் பாராட்டுகள் தைனிஸ்.

அக்னி
05-08-2012, 04:42 PM
நல்ல நட்புக் கிடைப்பது,
உனக்குக் கிடைக்கும் வரம்...

உன்னாலும் கிடைக்கட்டும் வரம்,
நல்ல நட்பாய் இரு...

சுகந்தப்ரீதன்
05-08-2012, 05:17 PM
சுருக்கமாக நறுக்கென்று நட்பின் மகிமையை பறைசாட்டும் கவிதை..!!:)

நட்புக்கும் நல்கவிக்கும்... வாழ்த்துக்கள் தைனிஸ்..!!:icon_b:

A Thainis
06-08-2012, 06:16 AM
நல்ல நண்பர்களாக இருந்து என் கவி வரிகளுக்கு நல்ல கருத்துக்களை வாரி வழங்கி உற்சாகம் தந்த கீதம், அக்னி & சுகந்தப்ரீதன், நன்றிகள் பல.

தீபா
06-08-2012, 06:36 AM
நட்பு

எல்லா நாட்களிலும் பூக்கும் பூ..

உங்களது நட்பின் இலக்கணம் நன்று. எல்லாருக்கும் இப்படி அமைந்துவிடாது. என்னுடைய நண்பர்கள் என்னைப் புரிந்து கொள்வது கிடையாது, திறமைகளைக் கண்டுகொல்வது கிடையாது, எனக்காக உயிரெல்லாம் தரவும் மாட்டார்கள். இருந்தாலும் அவர்கள் என்னுடைய நண்பர்கள்தானே?

இவள்
தீபா.

சிவா.ஜி
06-08-2012, 07:02 AM
நட்பு நல்ல உறவு...எதிர்பார்ப்புகள் ஏதுமில்லாதபோது....

நல்ல நட்பு...வாழும் நாட்களுக்கு வளமான ஊக்கம்.

நல் கவிதைக்கு வாழ்த்துக்கள் தைனீஷ்.

A Thainis
06-08-2012, 12:44 PM
சிவா.ஜி, தீபா உங்கள் வாழ்த்துக்கு நன்றி, நட்பு இரத்த பாசம் இல்லாத உறவு, ஆனால் பல நேரங்களில் நட்பு நம்மை கபாதுதான் உண்மை, இரத்த பாசத்தை மீறிடும் அன்பு.

அனுராகவன்
06-08-2012, 09:03 PM
கவிதை! அருமை!! பாராட்டுக்கள் தைநிஷ்!

jayanth
07-08-2012, 06:56 PM
அதுதான் "நண்பேன்டா" (சாரிங்க "டா" போட்டதற்கு...!!!