PDA

View Full Version : ஒரு பக்தனின் வேண்டுதல்...



கலைவேந்தன்
05-08-2012, 09:06 AM
ஒரு பக்தனின் வேண்டுதல்...

http://4.bp.blogspot.com/_P5lKIV54Hts/TGkWnNNUEeI/AAAAAAAAEbc/fUS9LkPLDgg/s1600/pray-2.jpg

வேண்டும் வேண்டும்...

பஞ்சம் இல்லாத பாரதம் வேண்டும்...
லஞ்சம் இல்லாத அரசியல் வேண்டும்...
பயமே இல்லாத மனிதர் வேண்டும்...
சுயநலம் இல்லாத மனநிலை வேண்டும்...

தட்சிணை இல்லாத வரன்கள் வேண்டும்...
கட்சிகள் இல்லாத தமிழகம் வேண்டும்...
பட்டினி இல்லாத வாழ்க்கை வேண்டும்...
தட்டினில் குறையாத உணவுகள் வேண்டும்...

ஏக்கம் தராத மகளிர் வேண்டும்...
தூக்கம் மறுக்காத இரவுகள் வேண்டும்...
வாட்டம் இல்லாத வாழ்க்கை வேண்டும்...
ஆட்டம் இல்லாத திரைப்படம் வேண்டும்...

நஞ்சம் இல்லாத நாகம் வேண்டும்...
வஞ்சம் இல்லாத பகைவர்கள் வேண்டும்...
வேண்டும் வேண்டும் எல்லாம் வேண்டும்...
வேண்டிட மறந்த பிறவும் வேண்டும்...

விரக்தியில்லாத மனமும் வேண்டும்..
வேதனை இல்லாத சொல்லும் வேண்டும்..
கரந்து வாழாத வீரம் வேண்டும்..
கற்ற்வை பகிரும் துணிவும் வேண்டும்...

சோர்வு இல்லாத உழைப்பும் வேண்டும்..
சொந்தமாக ஓர் இல்லம் வேண்டும்..
பார்வை எல்லாமே பரிவுகள் வேண்டும்..
பாரே போற்றும் பணிவுகள் வேண்டும்..

ரத்தம் சிந்தாத யுத்தம் வேண்டும்..
ராத்திரி உணவு நிலைப்பட வேண்டும்..
பித்தம் தெளிந்திட்ட தலைவன் வேண்டும்..
பிள்ளை இல்லாத பிரதமர் வேண்டும்..

வேதம் பிறழாத வேதியர் வேண்டும்..
வேண்டியதைத் தரும் இறைவன் வேண்டும்..
பேதம் இல்லாத திருமணம் வேண்டும்..
பேடியல்லாத மணமகன் வேண்டும்...

இன்னும் இன்னும் வேண்டிட வேண்டும்..
இதயம் நிறைந்த வரங்கள் வேண்டும்..
மன்னும் போதே மறைந்திட வேண்டும்..
மக்கள் போற்றிட புதைந்திட வேண்டும்...

A Thainis
05-08-2012, 09:24 AM
உண்மையான வேண்டல், உருக்கமான தூண்டல், உங்கள் வேண்டல் நிறைவேற என் வேண்டலையும் தருகிறேன்.

jayanth
05-08-2012, 10:27 AM
மிக மிக பேராசை...

நடக்குமா இது...???

ஆனாலும் பேராசைபடுவதில் தவறேதுமில்லை...!!!

சுகந்தப்ரீதன்
05-08-2012, 06:20 PM
இப்பக்தனின் வேண்டுதல் யாவும் குறைவின்றி நிறைவேற வேண்டும்..!!:)

நல்லதொரு கவி... வாழ்த்துக்கள் கலையண்ணா..!!:icon_b:

தீபா
06-08-2012, 06:45 AM
பிள்ளை இல்லாத பிரதமர் வேண்டும்....:)


ஹாஹா.... பிரதமருக்குப் பதில் அரசியல்வாதி என்றுபோட்டிருக்கலாம்.

”வேண்டும்” கவிதைகளை நிறைய கவிஞர்கள் எழுதுகிறார்கள். சிறப்பான உதாரணம் வைரமுத்துவின் பாடல் ஒன்ரு.

நல்ல கவிதை, நன்று

தீபா.

சிவா.ஜி
06-08-2012, 06:59 AM
இவையெல்லாம் வேண்டுமெனில் தனிமனித சுய ஒழுக்கம் வேண்டும்......சுட்டும் விரலில் அழுக்கில்லாதிருத்தல் வேண்டும்....

நான் தூய்மையானால்
என் வீடு தூய்மையாகும்
வீடு தூய்மையானால்
ஊர் தூய்மையாகும்
ஊர் தூய்மையானால்
நாடு தூய்மையாகும்
நாடு தூய்மையானால்
உலகம் தூய்மையாகும்

உங்கள் வேண்டுதல்....உண்மையாகும்.

நல்ல வேண்டுதலுக்கு எனது பாராட்டுக்கள் கலை.

கீதம்
06-08-2012, 07:26 AM
வேண்டும் யாவும் வேண்டும் யாவர்க்கும் கிடைத்திடும் நாள்வரவேண்டும். பாமரனின் மன ஆசைகள் ஒரு பாவலன் கவி வரிகளாய். பாராட்டுகள் கலைவேந்தன்.

ஜானகி
06-08-2012, 09:23 AM
வேண்டியவை யாவும் கிடைத்திடவே வேண்டிடுவோம்....!

கலைவேந்தன்
06-08-2012, 03:12 PM
உண்மையான வேண்டல், உருக்கமான தூண்டல், உங்கள் வேண்டல் நிறைவேற என் வேண்டலையும் தருகிறேன்.

தங்களின் வேண்டலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தைனிஸ்..!

கலைவேந்தன்
06-08-2012, 03:14 PM
மிக மிக பேராசை...

நடக்குமா இது...???

ஆனாலும் பேராசைபடுவதில் தவறேதுமில்லை...!!!

நடக்குமா என்று வியப்பதைக் காட்டிலும் நடக்கவேண்டும் என விழைவதில் நன்மையே உண்டு நண்பா..!

பாராட்டுக்கு நன்றி ஜெயந்த்..!

கலைவேந்தன்
06-08-2012, 03:15 PM
இப்பக்தனின் வேண்டுதல் யாவும் குறைவின்றி நிறைவேற வேண்டும்..!!:)

நல்லதொரு கவி... வாழ்த்துக்கள் கலையண்ணா..!!:icon_b:

உங்கள் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சுகந்தப்ரீதன்..!

கலைவேந்தன்
06-08-2012, 03:17 PM
பிள்ளை இல்லாத பிரதமர் வேண்டும்....:)


ஹாஹா.... பிரதமருக்குப் பதில் அரசியல்வாதி என்றுபோட்டிருக்கலாம்.

”வேண்டும்” கவிதைகளை நிறைய கவிஞர்கள் எழுதுகிறார்கள். சிறப்பான உதாரணம் வைரமுத்துவின் பாடல் ஒன்று.

நல்ல கவிதை, நன்று

தீபா.

பிள்ளை இல்லாத முதல்வர் வேண்டும் எனத்தான் எழுத நினைத்தேன் தீபா.. அது வாய்த்துவிட்டதால் :) பிரதமர் என்று எழுதினேன்.. நன்றிம்மா தீபா..!

கலைவேந்தன்
06-08-2012, 03:21 PM
இவையெல்லாம் வேண்டுமெனில் தனிமனித சுய ஒழுக்கம் வேண்டும்......சுட்டும் விரலில் அழுக்கில்லாதிருத்தல் வேண்டும்....

நான் தூய்மையானால்
என் வீடு தூய்மையாகும்
வீடு தூய்மையானால்
ஊர் தூய்மையாகும்
ஊர் தூய்மையானால்
நாடு தூய்மையாகும்
நாடு தூய்மையானால்
உலகம் தூய்மையாகும்

உங்கள் வேண்டுதல்....உண்மையாகும்.

நல்ல வேண்டுதலுக்கு எனது பாராட்டுக்கள் கலை.

மிக்க நன்றி சிவா.. இயன்றவரை கவிஞர்கள் வாக்கிலும் மனதிலும் செயல்களிலும் சுத்தமாகத்தான் இருப்பார்கள்.. அதனால் தான் அவர்களின் கவிதைகளுக்கு காலத்தை வென்றுவிடும் சக்தி கிடைக்கின்றது. என்னை கவிஞன் என்றே இன்னும் நினைத்திருக்கிறேன். எனவே நானும் முவ்விதத்திலும் தூய்மையாய் இருப்பதாகத்தான் எண்ணுகிறேன்.

ஆயினும் பாரதியும் பாரதிசாசனும் கண்ணதாசனும் எல்லாருக்கும் நல்லவராய் வாழ்ந்தனரா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும்.

ஏனெனில் கவிஞனும் ஒரு மனிதனே.. மனிதனாக இருப்பதால் தான் கவிஞனாகவும் மிளிர முடியும்.

அன்பான பாராட்டுதல்களுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பனே..!

கலைவேந்தன்
06-08-2012, 03:23 PM
வேண்டும் யாவும் வேண்டும் யாவர்க்கும் கிடைத்திடும் நாள்வரவேண்டும். பாமரனின் மன ஆசைகள் ஒரு பாவலன் கவி வரிகளாய். பாராட்டுகள் கலைவேந்தன்.

என்றும் போல் எனக்கு ஊக்கமளிக்கும் தங்களின் பரிந்துரை அகமகிழ்வித்தது கீதம். நன்றி..!

கலைவேந்தன்
06-08-2012, 03:26 PM
வேண்டியவை யாவும் கிடைத்திடவே வேண்டிடுவோம்....!

எனக்கென ஒரு தீவிர ரசிகை உண்டு என்பதனைப் பலநேரம் உணர்ந்திருக்கிறேன் ஜானகி ( அவர்களே.. ) உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றிங்க..!

அனுராகவன்
06-08-2012, 09:06 PM
அரிய வரிகள் நண்பா...
எல்லாம் நிறைவேறுமா..என் வேண்டுகோள்...

கலைவேந்தன்
09-08-2012, 03:52 PM
அரிய வரிகள் நண்பா...
எல்லாம் நிறைவேறுமா..என் வேண்டுகோள்...

ரொம்ப நன்றிங்க அச்சலா.. :icon_rollout: