PDA

View Full Version : களவுக்காதல்..

கலைவேந்தன்
05-08-2012, 08:44 AM
களவுக் காதல்...

http://3.bp.blogspot.com/-8p0tG1xXXz4/T00xw_FxDDI/AAAAAAAABLo/tLMfIoobcLs/s1600/love,-+puthiyaulakam.jpg

கலைத்துப்போட்ட கார்மேகமாய்
இடை வரையில் தவழ்ந்து கொஞ்சிய
அவள் கூந்தலில் முகம் புதைத்தேன்...

என் கரங்கள் அத்துமீறும் போது
அந்த வெட்கக்கண்கள் வருடிய இடமெலாம்
சிலிர்த்து உணர்ந்தேன்.

காதலை எதிர்க்கும் துணிவு அவள் கைகளுக்கில்லை...
முத்தம் தரத்துடித்த உதடுகள் வெட்கத்திலும் துடித்தன...

கண்ணீர்த்துளிகள் சற்றே வெளிவர அனுமதிகேட்க
உயர்ந்து தணிந்த மார்புக்கூட்டுக்குள்
முக்கித்தவித்த வார்த்தைகள் வெளிவரத்தயங்கின...

'மாலையிடுவாயா இல்லை காலையில் ஓடிடுவாயா?'

கீதம்
05-08-2012, 09:08 AM
களவுக்காதலுக்கு மனம் துணிந்தபின் காதலில் கள்ளம் புகுந்திடுமோவென்று ஐயங்கொண்டு கலங்குவதும் முறையாகுமோ?

கலங்கிடும் மனதையும் கருத்தால் அறியும் காதலர், அவள் கவலை போக்கி கண்ணீர் துடைப்பாரென்பதை கணித்தலும் வேண்டாமோ?

களவுக்காதலுக்கே உண்டான கலக்கம் உரைத்தக் கவிதை அருமை கலைவேந்தன்.

jayanth
05-08-2012, 10:32 AM
இது கள்ளக் காதல் போல் தெரியவில்லையே...!!!

நல்ல காதல் போலன்றோ தெரிகின்றது...!!!

கலைவேந்தன்
10-08-2012, 09:04 AM
களவுக்காதலுக்கு மனம் துணிந்தபின் காதலில் கள்ளம் புகுந்திடுமோவென்று ஐயங்கொண்டு கலங்குவதும் முறையாகுமோ?

கலங்கிடும் மனதையும் கருத்தால் அறியும் காதலர், அவள் கவலை போக்கி கண்ணீர் துடைப்பாரென்பதை கணித்தலும் வேண்டாமோ?

களவுக்காதலுக்கே உண்டான கலக்கம் உரைத்தக் கவிதை அருமை கலைவேந்தன்.

அருமையான தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதம். இக்கவிதையின் பொருள் சரியில்லையோ அல்லது வேறெதுவும் குறையோ .. நிறையப்பேரை ஈர்க்கவில்லையே என யோசித்தேன். ஆயினும் கவிதை மிகச்சரியே என்பது தங்களின் பின்னூட்டத்தால் தெளிவுகொண்டுவிட்டேன்.

கலைவேந்தன்
10-08-2012, 09:06 AM
இது கள்ளக் காதல் போல் தெரியவில்லையே...!!!

நல்ல காதல் போலன்றோ தெரிகின்றது...!!!

சங்க இலக்கியத்தில் இந்த களவுக்காதல் பற்றிய பல பாடல்கள் உண்டு ஜெயந்த். இது நல்ல காதல் தான். பெற்றோர்க்கு அறியப்படாமல் நடைபெறும் காதல். கனிந்து பெற்றோர் சம்மதித்தபின் இது சிறந்த தாம்பத்யமாக உருவாகக்கூடியது.

பாராட்டுக்கு நன்றி நண்பரே..!