PDA

View Full Version : தாகம் தணியட்டும்



A Thainis
05-08-2012, 08:13 AM
பசியின்றி மனிதர் நாளும்
படுக்கைக்கு செல்ல வேண்டும்
அனைவருக்கும் கல்வி
உயர் படிப்புவரை இலவசமாக வேண்டும்
வேற்றுமை கலைந்து
மனிதரென்ற ஒற்றுமை வேண்டும்
நீதி அனைவருக்கும் ஒன்றென
உலகில் நின்றிடல் வேண்டும்
ஊழல் ஒழிந்து எங்கும்
நல்லாட்சி மலர வேண்டும்
தீய எண்ணங்கள் அகன்று
நன்மையால் உலகம் நிறைய வேண்டும்
உண்மை உழைப்பு நம்பிக்கையில்
நாளும் உலகம் வளர்ந்திட வேண்டும்
சுற்றுச்சுழல் மாசுயின்றி
நோயற்ற வாழ்வு நலமாக வேண்டும்
இயற்கை சீற்றங்கள் அகன்று
நிம்மதி வாழ்வு எங்கும் வேண்டும்
இயற்கையும் நமது உறவென்று
இன்பமாய் பேணி காத்திடல் வேண்டும்

ஆ. தைனிஸ்

கீதம்
05-08-2012, 08:51 AM
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும் என்றான் அன்றொரு கவிஞன். அக்கனவின் தொடர்ச்சியை இன்று காண்கிறேன் மற்றொரு கவிஞனின் வரிகளில். கனவுகள் மெய்ப்படும் நாளெந்த நாளோ?

கரங்களும் கனவுகளும் ஒன்றுசேர்ந்து வலுப்படட்டும் மானுடமும், மனங்களும். பாராட்டுகள் தைனிஸ்.

jayanth
05-08-2012, 10:47 AM
நல்ல எண்ணஙக்ள்...நம்பிக்கைகள்...நிறைவேற வேண்டுவோம் அவனை...(???)

சுகந்தப்ரீதன்
05-08-2012, 06:35 PM
இக்கவிஞனின் தாகம் விரைவில் தணியட்டும்... இத்தரணி செழிக்கட்டும்..!!:)

வாழ்த்துக்கள்... தொடருங்கள்.. தைனிஸ்...!!:icon_b: