PDA

View Full Version : சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் (Halos)



ஆளுங்க
05-08-2012, 05:46 AM
கடந்த ஆகஸ்ட் 03 அன்று, தமிழகத்தில் பலர் சூரியனைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைப் பார்த்திருக்கலாம்.


http://1.bp.blogspot.com/-fD2epN99xek/UB1YKLJFSJI/AAAAAAAAAJU/j9raqUHTO0g/s640/SAM_1758.JPG (http://1.bp.blogspot.com/-fD2epN99xek/UB1YKLJFSJI/AAAAAAAAAJU/j9raqUHTO0g/s1600/SAM_1758.JPG)


அது என்ன அதிசயம்? எப்படி நிகழ்கிறது? இங்கு பார்ப்போம்!!
(அப்பாடா!! நாமளும் ஒரு பதிவு தேற்றியாச்சு)

இந்த நிகழ்வு பரிவேடம் (Halo) என்று அழைக்கப்படுகிறது!!ஒளிவட்டம் என்றும் சொல்லலாம்! இது 22 டிகிரி (22º) ஹாலோ ஆகும்.

இவை சூரியனில் மட்டுமல்ல, நிலவைச் சுற்றியும் வரும்.!!



இது எப்படி ஏற்படுகிறது?

நமக்கு மேலே வானத்தில் சுமார் 5.5 கி.மீ உயரத்தில் உள்ள மேகங்கள் மென்னடுக்கு முகில் (Cirrostratus cloud) என்று அழைக்கப்படுகிறன. இவை பெரும்பான்மையாக பனித்துளிகளால் ஆனவை. இவற்றை வெறும் கண்ணால் பார்ப்பது அரிது.


மேகங்களில் உள்ள பனிக்கட்டிகள் அனைத்தும் அறுகோண (Hexagon) வடிவில் இருக்கும். மேலும், அவை அனைத்தும் அடுக்கி வைத்தது போல ஒரே வரிசையில் இருக்காது!! ஒவ்வொரு துகளும் ஒவ்வொரு திசையில் இருக்கும்.


சூரியனின் ஒளிக்கதிர்கள் பனித்துகள்களின் மீது விழும் போது, அவை சூரிய ஒளியை திசை திருப்புகிறன (refraction). நாம் இந்த காட்சியைப் பார்ப்பதற்குக் காரணம் சூரிய ஒளியின் பாதைக்கு ஓரளவு செங்குத்தாக இருக்கும் துகள்கள் தான்!!

ஒளிக்கதிர்கள் அவற்றின் வழியே போகும் போது, கதிர்கள் 21.7º - 50º திரும்புகிறன. செங்குத்தான எல்லா படிகங்களின் ஒளியின் கீற்றே நமக்கு ஒளிவட்டமாக தெரிகிறது!!


http://3.bp.blogspot.com/-3mVTWnhn3JA/UB1gplcTWHI/AAAAAAAAAJ0/UbxT1GFkibA/s640/fig20.jpg (http://3.bp.blogspot.com/-3mVTWnhn3JA/UB1gplcTWHI/AAAAAAAAAJ0/UbxT1GFkibA/s1600/fig20.jpg)

பெரும்பாலான கதிர்கள் 21.7º திரும்புகிறன. சில வேறு கதிர்கள், துகளின் நிலையைப் 50º வரை திரும்பும்.
எனவே, தான் உள் வளையம் (21.7º) மிகவும் பிரகாசமாகவும், வெளி வளையம் வெளிச்சம் குன்றியும் இருக்கிறது!

இன்னொரு விசயம் கவனித்தீர்களா?
வளையத்திற்கும் சூரியனுக்கும் இடையே இருட்டாக இருக்கிறது!!

அதன் காரணம், 21.7º கோணத்திற்குக் குறைவாக ஒளித்திருப்பல் இருக்காது (Refraction). ஒளி இல்லாத காரணத்தால் அந்த இடைவெளி இருட்டாக இருக்கிறது!!


டிஸ்கி:
1. அது என்னய்யா கணக்கு 21.7 டிகிரி (21.7º)
எல்லாம் இயற்பியல் தான்!!


http://2.bp.blogspot.com/-1M8D_JI6y48/UB1jWgDTN2I/AAAAAAAAAKE/boHAVc-W6iY/s320/22halo.gif (http://2.bp.blogspot.com/-1M8D_JI6y48/UB1jWgDTN2I/AAAAAAAAAKE/boHAVc-W6iY/s1600/22halo.gif)

பனித்துகளின் முறிவுக்குணகம் (Refracrive Index) n_prism = 1.31
காற்றின் முறிவுக்குணகம் n_medium= 1.00027
அறுகோணத்தின் ஒரு பக்கம் σ = 60º

http://latex.codecogs.com/gif.latex?%5Cfrac%7Bn_%7Bprism%7D%7D%7Bn_%7Bmedium%7D%7D=%20%5Cfrac%7B%5Csin%20%5Cfrac%7B1%7D%7B2%7D%20%28%5Csigma%20+%20%5Cdelta%20%29%7D%7B%5Csin%20%5Cfrac%7B1%7D%7B2%7D%5Csigma%20%7D (http://www.codecogs.com/eqnedit.php?latex=%5Cfrac%7Bn_%7Bprism%7D%7D%7Bn_%7Bmedium%7D%7D=%20%5Cfrac%7B%5Csin%20%5Cfrac%7B1%7D%7B2%7D%20%28%5Csigma%20@plus;%20%5Cdelta%20%29%7D%7B%5Csin%20%5Cfrac%7B1%7D%7B2%7D%5Csigma%20%7D)

இதில் உள்ளிட்டால், ஒளி திரும்பும் திசைக் கோணம் δ = 21.7º!!


2. நிலா ஹாலோக்கள் மழை வருகையைக் குறிப்பிடுகிறன. என்றாலும், அவை நம்மூர் வானிலை அறிக்கை போலத் தான்.. வரும்.. ஆனா, வராது!! (உண்மையை 'நிலவ'ன்பனிடம் தான் கேட்கணும்)

3. இதேபோல 46 டிகிரி, 90 டிகிரி ஹாலோக்களும் உண்டு.


நன்றி:


"கோவை நேரம் (http://www.kovaineram.com/)" ஜீவானந்தம் அவர்கள் (பதிவின் கரு மற்றும் படம்)
Atmospheric Optics (http://www.atoptics.co.uk/) , HyperPhysics (http://hyperphysics.phy-astr.gsu.edu/) , Florida Unversity (படம்) (http://www.phys.ufl.edu/), Code Cogs (LaTeX) (http://www.codecogs.com/)

எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!

கீதம்
05-08-2012, 07:59 AM
நிலவைச் சுற்றி ஒளிவட்டம் பலமுறை பார்த்திருக்கிறேன். நிலா கோட்டை கட்டியிருக்கிறது, மழை வரலாம் என்று கிராமத்துப் பெரியவர்கள் சொல்வார்கள். சூரியனைப் பார்க்கும் பழக்கம் எவருக்கும் இருப்பதில்லை என்பதால் இப்படி சூரியனுக்கு உண்டாகும் ஒளிவட்டத்தைப் பற்றித் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. அறிவியல் தகவல்களுடன் காரணத்தை விளக்கிய பதிவுக்கு நன்றி ஆளுங்க.

கலைவேந்தன்
05-08-2012, 08:08 AM
அருமையான அறிவியல் விளக்கம் அருண்.. இயற்பியலை 1980 ஆம் ஆண்டே தலைமுழுகி (:)) விட்டதால் சில கணிதக்குறிப்புகள் புரியவில்லை. ஆயினும் மேலோட்டமாக வட்டத்தின் காரணத்தை அறிந்துகொள்ள முடிந்தது.

நன்ரி அருண்..!

M.Jagadeesan
05-08-2012, 08:25 AM
நிலவுக்கு ஒளிவட்டம் இருப்பதுபோல, சூரியனுக்கும் ஒளிவட்டம் உண்டு என்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன்.ஆனால் அதை வெறும் கண்களால் பார்க்க இயலாது என்று எண்ணுகிறேன். அரிய அறிவியல் செய்தியைப் பகிர்ந்துகொண்ட ஆளுங்க அவர்களுக்கு நன்றி!

A Thainis
05-08-2012, 09:44 AM
சூரியனை சுற்றிய ஒளிவட்டம் அருமையான அறிவியல் தகவல்.
சூரிய கதிர் பனித்துகள்கள் மேல் விழுந்து எழும் அந்த ஒளி வட்டம் மிக பரவசமாக உள்ளது.
மேகங்கள் மேலுள்ள பனித்துகள்களை காண சூரிய கதிர்கள் பயன்படுகின்றன என்ற பயனுள்ள தகவலுக்கு நன்றி.

jayanth
05-08-2012, 03:23 PM
அருமையான அறிவியல் விளக்கம் அருண்.. இயற்பியலை 1980 ஆம் ஆண்டே தலைமுழுகி (:)) விட்டதால் சில கணிதக்குறிப்புகள் புரியவில்லை. ஆயினும் மேலோட்டமாக வட்டத்தின் காரணத்தை அறிந்துகொள்ள முடிந்தது.

நன்ரி அருண்..!

அப்படீன்னா... + 2 முதல் செட்டா...??? நானும்தான்...!!!

சுகந்தப்ரீதன்
05-08-2012, 05:04 PM
அறிவியல் தகவல்கள் மூலம் எமது அறியாமையை இருள்போக்கும் அண்ணன் ஆளுங்காவிற்க்கு எமது நன்றிகள்..!!:icon_b: