PDA

View Full Version : நீளாதோ



kulakkottan
05-08-2012, 01:58 AM
https://m.ak.fbcdn.net/a5.sphotos.ak/hphotos-ak-ash4/459681_439588802726703_728503999_o.jpgஅடுத்த கணம் என்ன நடக்கும் என்ற ஏக்கம் -
நாளை எந்த பாதை என்ற தயக்கம் -

இரவு நிரந்தமாய் நீளாதாய் ஓலமின்றி மரணத்தோடு கை கோர்க்க
விடியல் தான் வராதோ வாழ்கையில் நடை போட வயிற்றுக்காகவேணும்

இந்த ரெயில் போல என்று தான் விரயுமோ துயரம் -பசிக்கும்
தருணம் பசி தெரியாமல் எண்ணி கொள்ளும் துயரம்


தடம் மாறிய நம் வாழ்கை-தடம் போட ஓர் உதவிகரம் நீளாதோ
ஒரு வேளை சோற்று பொட்டலம் வாங்க கூலி தரும் வேலையாயேனும்
....

கீதம்
05-08-2012, 08:16 AM
நிமிடத்தில் கடந்துவிரையும் ரயில்போல் துயரமும் கடந்து போகாதா என்னும் ஏக்கத்தில் உருவான கவிதையில் தென்படும் உழைப்பின் மீதான நம்பிக்கை, நாளைய இருளைப் போக்குமென்றும் நம்பிக்கை ஊட்டுகிறது. பாராட்டுகள் குளக்கோட்டன்.

kulakkottan
05-08-2012, 08:22 AM
பாராட்டுக்கு நன்றி கீதம் !

A Thainis
05-08-2012, 09:34 AM
வயிற்று பசி, அன்பு பசி, வாழ்கை பசி என அந்த பிஞ்சுகளின் அணைத்து போரட்டங்களையும் சில வரிகள் சிறப்பாக பேசி, இரக்கமாய் இருக்கவும் தூண்டல் தந்தது, வாழ்த்துகள்.

jayanth
05-08-2012, 10:23 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))