PDA

View Full Version : போதுமடி



kulakkottan
05-08-2012, 01:46 AM
https://m.ak.fbcdn.net/a4.sphotos.ak/hphotos-ak-prn1/560236_430126283672955_899453887_n.jpg
உன் நினைவுகளின் மயக்கம் போதுமடி
வேறு போதைகள் எதற்கு

உன் புன்னகையின் மௌனமொழி போதுமடி
செல்பேசி சிணுங்கல்கள் எதற்கு

உன் ஓர விழி பாசப் பார்வை போதுமடி
பாரில் வேறு காட்சி எதுக்கு

ஒற்றை வார்த்தை சொன்னாயடி -எந்தன்
திக்கு எல்லாம் மாறியதே -அதிசயமாய் எனக்குள்

jayanth
05-08-2012, 11:44 AM
"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து"

கீதம்
06-08-2012, 10:33 AM
போதும் போதும் என்று எத்தனை முறை நிறுத்தற்புள்ளியிட முனைந்தாலும் இன்னும் இன்னும் (என்று) முடியாத ஆசைகள்!

இல்லையெனில் நினைவுகளில் துவங்கி புன்னகை, ஓரவிழிப்பார்வை, ஒற்றை வார்த்தை என்று மெல்ல மெல்ல அதிகரிக்குமா ஆழ்மன ஆவல்கள்!

ஊற்ற ஊற்ற நிறையாத காதல் கோப்பையில் ஊற்றிக்கொண்டே இருங்கள் கவித்துளிகளை. பாராட்டுகள் குளக்கோட்டன்.

A Thainis
06-08-2012, 12:49 PM
போதும், போதும் என குலகோட்டன் போதுமடி கவிதையை முடித்தாலும், வேண்டும், வேண்டும் இன்னும் அந்த அழகிய கவிவரிகள் வேண்டுமென்று
வாசிக்கும் அன்பர்கர்களின் உள்ளம் துடிக்கிறது, வாழ்த்துக்கள்.

தீபா
06-08-2012, 01:22 PM
நினைவுகளின் மயக்கம்..

வார்த்தையே மயக்குகிறது.

//உன் ஓர விழி பாசப் பார்வை போதுமடி
பாரில் வேறு காட்சி எதுக்கு//

Barக்கு எதுக்கு போனீங்க?

kulakkottan
07-08-2012, 02:27 AM
நினைவுகளின் மயக்கம்..

வார்த்தையே மயக்குகிறது.

//உன் ஓர விழி பாசப் பார்வை போதுமடி
பாரில் வேறு காட்சி எதுக்கு//

Barக்கு எதுக்கு போனீங்க?

தீபா, bar க்கு சென்று என்னுள் வாழும் அவளை அழித்துக்கொள்ள விரும்பவில்லை. நான் சொன்ன பார் -பூமி