PDA

View Full Version : நூலகம் என்பது ஒரு பல்கலைகழகம்



kulakkottan
05-08-2012, 01:30 AM
நூலகம் என்பது ஒரு பல்கலைகழகம்,இணையம் என்பது ஒரு தகவல் அமுதசுரப்பி ,ரெண்டும் ஒன்றாய் கிடைத்தால்!
தமிழில் உள்ள நூல்கள் சன்சிகைகளை இலங்கை பல்கலைகழக மாணவர்கள் ,நலன்விரும்பிகள் இணைந்து மின்னூலை மாற்றி இலவசமாய் வழங்கி வருகிறார்கள் .www.noolaham.org என்ற இணையத்தளத்தில் ஏராளமான தமிழ் நூல்களை PDF format இல் தரவிறக்கி பயன் பெற முடியும் .நீண்ட நாட்களாய் இந்த தளத்தை நான் பயன் படுத்தி வருகிறேன் !இன்னொரு யாழ்ப்பான நூலகம் எரிக்க பட்டாலும் நூல்கள் இந்த திட்டத்தால் அழியாது இருக்கும் .இதை பயன்படுத்துவதுடன்உங்கள் வசம் உள்ள நூல்களை இயன்ற அளவு PDF ஆக மாறி அவர்களுக்கு வழங்கினால் அவர்களின் லாப நோக்கற்ற இந்த திட்டம் தொடர்ந்தும் உயிர்ப்பாய் வளர உதவும் .
முகவரி www.noolaham.org
இத்தகவலை இங்கே பிரசுரிகலாமா இல்லையா என எனக்கு தெரியாது !நிர்வாக அங்கத்தினர் தகுந்த வழிகாட்டல் தரவும்!
உரிய இடத்துக்கு நகர்த்தவும் .

கீதம்
05-08-2012, 08:59 AM
கடல் போல் விரிந்த நூலகம். மேலோட்டமாகப் பார்த்தேன். நிறைய பயனுண்டு என்று தெரிகிறது. இதற்காகவே நேரம் ஒதுக்கிப் பார்வையிட வேண்டும். பகிர்வுக்கு நன்றி குளக்கோட்டன்.

jayanth
05-08-2012, 11:31 AM
பகிவிற்க்கு நன்றி ...ம்...ம்...தமிழில் உங்கள் பெயரை எவ்வாறு அழைப்பது kulakkottan...???

A Thainis
05-08-2012, 04:20 PM
இணைய தமிழ் நூலகத்தின் இணைய முகவரிக்கு மிக்க நன்றி குளக்கோட்டன்.
அங்கு சென்று முகப்பிலும் மேலும் சில உள்பகுதிக்கு சென்று பார்த்தேன், பிரமித்தேன்.
நம்மை போன்ற எழுத்தாளர்களுக்கு அது ஒரு மாபொரும் கொடை.
பல நூல்கள், இதழ்கள், நாளேடுகள் என கணிணியில் ஏற்றப்பட்டு இருப்பது, ரொம்ப மகிழ்ச்சி.
மெல்ல தமிழ் இனி என்றுமே வாழும். தமிழ்மன்ற உறுப்பினர்கள் இந்த இணைய நூலகத்தை பயன்படுத்த தவற வேண்டாம்.

சுகந்தப்ரீதன்
05-08-2012, 05:11 PM
மிகவும் பயன் தரக்கூடிய நல்லதொரு தகவல் பகிர்வுக்கு நன்றி குளக்கோட்டன்..!!:icon_b:

kulakkottan
06-08-2012, 01:16 AM
குளக்கோட்டன் என்று அழைக்கலாம் jayanth

அனுராகவன்
06-08-2012, 08:14 PM
நல்ல நூலகம் பல்கலைகழகம்...அருமையாக உள்ளது நண்பா...