PDA

View Full Version : தென்றல் தூது..



அனுராகவன்
04-08-2012, 10:36 PM
எனக்கும் தென்றலும்
போட்டியோ
போட்டி யார்
அவரை தொடவது
என்று நான்
வழிவிட்டேன்
முதலில் காரணம்
அவர் சுவாசிக்க
தென்றல் வேண்டுமே
அதற்காக..

உன் மனம்
என்ன வென்று
நான் தென்றலை
கேட்டேன்
அது அலை
பாயும் சூறாவளி
போன்றது நீ
என்னை அடையாத
வரையில்...

சுகந்தப்ரீதன்
05-08-2012, 06:42 PM
யக்கோவ்... உங்க கவிதையை ரசிக்க முடியாம எழுத்துபிழையும் வாக்கியமைப்பும் எம்மை பாடாய் படுத்துதேக்கா..?!:aetsch013:

எனக்கும் தென்றலுக்கும்
போட்டியோ போட்டி
யார் அவரை தொடுவது என்று..
நான்
வழிவிட்டேன் முதலில்
காரணம்...
அவர் சுவாசிக்க
தென்றல் வேண்டுமே
அதற்காக..!!

உன் மனம்
என்ன வென்று
நான் தென்றலை கேட்டேன்
அது
அலை பாயும்
சூறாவளி போன்றது
நீ என்னை அடையாத
வரையில் என்றது..!!

A Thainis
05-08-2012, 08:30 PM
தென்றல் தூது இனிமை, எளிய வார்த்தைகளால் நெய்யப்பட்ட கவிதை அருமை அசத்தல் அச்சலா

aasaiajiith
05-08-2012, 11:45 PM
நான்.செய்ய.விழைந்ததை.நீ.செய்திருக்கின்றாய்.சு.பி.நன்றி

கலைவேந்தன்
06-08-2012, 01:27 AM
முதலில் வாசித்துவிட்டு மலையாளக்கவிதை தான் மொழிபெயர்க்கப்பட்டிருக்கோ என நினைத்து முழிபெயர்ந்து ஓடிவிட்டேன்.. சுகந்த ப்ரீதன் மாற்றி அமைத்ததும் புரிந்தது. ஆயினும் இரண்டாம் பத்திக்கான விளக்கம் அச்சலா தோழியார் வந்துதான் விளக்கவேண்டும்.

சொல்ல நினைத்ததைச் சொல்லிவிடும் துணிவு உங்களுக்கு மிக அதிகம் அச்சலா.. பாராட்டுகள்..!

jayanth
07-08-2012, 10:15 PM
எனக்கும் தென்றலும்
போட்டியோ
போட்டி யார்
அவரை தொடவது
என்று நான்
வழிவிட்டேன்
முதலில் காரணம்
அவர் சுவாசிக்க
தென்றல் வேண்டுமே
அதற்காக..

உன் மனம்
என்ன வென்று
நான் தென்றலை
கேட்டேன்
அது அலை
பாயும் சூறாவளி
போன்றது நீ
என்னை அடையாத
வரையில்...

அச்சலா...வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதைபோலக் கவிதை...http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123')).....http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123')).....http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123'))