PDA

View Full Version : எப்படிப் பகிர்ந்து கொள்வதென்று...

HEMA BALAJI
04-08-2012, 04:24 PM
http://3.bp.blogspot.com/-8qvfR9GiYYM/T5KUBA5u6yI/AAAAAAAAAl0/BbXRMXBxL6g/s400/imagesCA9DE4AQ.jpg

கண்ணீர் சோகம் வெறுமை
ஏமாற்றம் கோபம் அழுகை அறற்றல்
இதில் எதிலுமே அடங்கிவிடாமல்

தனித்து நிற்கிறது உன்
பிரிவைச் சொல்லிய மௌனம்..

சகலத்தையும் உன்னுடன்
பகிர்ந்து பழகிய பின்

உதிர்ந்து கொண்டிருக்கும்
உன் நினைவுகளைப்
பொறுக்கி எடுத்துக் கொண்டிருக்கும்
எனக்குத் தெரியவில்லை...

நீ அற்ற தனிமைகளை உன்னுடன்
எப்படிப் பகிர்ந்து கொள்வதென்று..

அனுராகவன்
04-08-2012, 10:18 PM
காதலுக்கு கரையாத
உள்ளம் உண்டா...
சாதல் என்பது
மோதலின் பின்பு தானே...

நன்றி நண்பா...

சுகந்தப்ரீதன்
05-08-2012, 05:53 PM
இப்படி கவிதை எழுதிதான்...!!:)

மௌனத்தைபோல் மிக ஆழமாக மனம் ஊடுருவும் கவிதை..!!:mini023:

தொடர்ந்து பகிருங்கள்... உங்கள் எழுத்துக்களை..!!:icon_b:

A Thainis
05-08-2012, 08:51 PM
http://3.bp.blogspot.com/-8qvfR9GiYYM/T5KUBA5u6yI/AAAAAAAAAl0/BbXRMXBxL6g/s400/imagesCA9DE4AQ.jpg

உதிர்ந்து கொண்டிருக்கும்
உன் நினைவுகளைப்
பொறுக்கி எடுத்துக் கொண்டிருக்கும்
எனக்குத் தெரியவில்லை...

நீ அற்ற தனிமைகளை உன்னுடன்
எப்படிப் பகிர்ந்து கொள்வதென்று..

மௌனம் பேசுகிறது, எல்லா உணர்வுகளையும் சொல்லாமலே கொட்டி தீர்க்கிறது, அழகான காதல் கவிதை பாராட்டுக்கள் ஹேமா பாலாஜி .

aasaiajiith
06-08-2012, 12:07 AM
வார்த்தைகள்.வாயிலாக.வாய்.மொழியலாம்.தேன்மொழியே.

HEMA BALAJI
06-08-2012, 07:09 AM
காதலுக்கு கரையாத
உள்ளம் உண்டா...
சாதல் என்பது
மோதலின் பின்பு தானே...

நன்றி நண்பா...
பின்னூட்டத்திற்கு நன்றி அச்சலா..

பி.கு. நான் நண்பியாக்கும்!!!!

HEMA BALAJI
06-08-2012, 07:12 AM
இப்படி கவிதை எழுதிதான்...!!:)

மௌனத்தைபோல் மிக ஆழமாக மனம் ஊடுருவும் கவிதை..!!:mini023:

தொடர்ந்து பகிருங்கள்... உங்கள் எழுத்துக்களை..!!:icon_b:

பின்னூட்டத்திற்கு நன்றி சுகந்தப்ரீதன். கண்டிப்பாக பகிர்கிறேன் உங்களைப் போன்றோரின் ஊக்கத்துடன்.

HEMA BALAJI
06-08-2012, 07:26 AM
மௌனம் பேசுகிறது, எல்லா உணர்வுகளையும் சொல்லாமலே கொட்டி தீர்க்கிறது, அழகான காதல் கவிதை பாராட்டுக்கள் ஹேமா பாலாஜி .

நன்றி தைனிஸ்.

HEMA BALAJI
06-08-2012, 07:31 AM
வார்த்தைகள்.வாயிலாக.வாய்.மொழியலாம்.தேன்மொழியே.

நன்றி அஜித்..

கீதம்
06-08-2012, 10:25 AM
எல்லா மொழியும் மௌனத்தில் அடங்க, எந்த மொழியிலும் விளக்கவியலா மௌனம் இது.

விகசித்தழும் மனதின் வேதனை சொல்லும் கவி வரிகள் அருமை.

பிரிவின் தகிப்பில் உருகும் உணர்வுக்கலவையை கவிதையாக்கியதற்குப் பாராட்டுகள் ஹேமா.

HEMA BALAJI
09-08-2012, 07:16 AM

நன்றி கீதம்..

அமரன்
11-08-2012, 09:39 PM
சுபி சொன்னது போல மனசுக்குள் ஆழ ஊடுருவும் அணியாகக் கவிதை..

உதிர்ந்து கொண்டிருக்கும்
உன் நினைவுகளைப்
பொறுக்கி எடுத்துக் கொண்டிருக்கும்
எனக்குத் தெரியவில்லை...

நினைவுக் கதிர்கள்
முதிர்ந்து விட்டன போலும்..
உன்னிலிருந்து
உதிர்ந்து விழுகின்றனவே..

Keelai Naadaan
12-08-2012, 06:52 AM
இது போன்ற மனதை நெருடும் கவிதைகளுக்கு பின்னூட்டம் எழுத தெரியவில்லை. ஆனால் ஆழ்ந்து ரசிக்கிறேன்.
வாழ்த்துக்கள் ஹேமா பாலாஜி.

HEMA BALAJI
23-08-2012, 11:46 AM
நன்றி திரு. கீழை நாடான்..

நாஞ்சில் த.க.ஜெய்
23-08-2012, 02:59 PM
எனக்குத் தெரியவில்லை...

நீ அற்ற தனிமைகளை உன்னுடன்
எப்படிப் பகிர்ந்து கொள்வதென்று..

இந்த மௌனமொழி வரிகள் கூறும் பிரிவின் தனிமை என்றும் நீடித்திருக்கும் வலி ...

கலைவேந்தன்
23-08-2012, 04:07 PM
ஆர்ப்ப்பாட்டமில்லாத அழகானதொரு கவிதை. பாராட்டுகள் ஹேமா..!

HEMA BALAJI
01-09-2012, 03:51 PM
இந்த மௌனமொழி வரிகள் கூறும் பிரிவின் தனிமை என்றும் நீடித்திருக்கும் வலி ...

நன்றி திரு. ஜெய்..

HEMA BALAJI
01-09-2012, 03:54 PM
ஆர்ப்ப்பாட்டமில்லாத அழகானதொரு கவிதை. பாராட்டுகள் ஹேமா..!

நன்றி கலை அண்ணா..

குருதவசி
01-09-2012, 04:32 PM
அழகானதொரு கவிதை ..தொடருங்கள் ஹேஹா அவர்களே

கும்பகோணத்துப்பிள்ளை
15-09-2012, 01:35 PM
உங்கள் ஒரு சொட்டு கண்ணீருக்கு
இம்மன்றத்தில் எத்தனை பூக்கள்!
ஆனால் எங்கள் பாலைவனத்திலோ,
எத்தனை சொட்டுகள்!
இங்கே கண்ணீருக்கும் தனிமை!
உப்புபூ பூக்கும் பாலைச்சொட்டுகள்!

ஆதவா
17-09-2012, 08:53 AM
சிறப்பாக இருக்கிறது கவிதை.
மிகச்சிறப்பாக

எந்த உணர்வுக்கும் அடங்காத பிரிவைச் சொல்லிய மெளனம்... சொல்லமுடியாத ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டதைப் போல இருக்கிறது. பிரிவைச் சொல்லிய மெளனம்!! இழந்துவிட்ட நேரத்தில் ஏற்படும் மனநிகழ்வு. வார்த்தைகளை மறந்துபோன ஒரு தருணம். மிக அழகாய் வெளிப்படுகிறது கவிதையில்.

வார்த்தைகளை நன்கு பொறுக்கி எடுத்து கோர்த்து முத்துமாலை செய்திருக்கிறீர்கள்.

நீ அற்ற தனிமைகளை உன்னுடன் எப்படி பகிர்ந்து கொள்வது?? இந்த முரண் எல்லா தனிமை நிர்பந்திகளுக்கும் நிகழ்வது.

தனிமை பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை. என்றாலும் இந்த தனிமை, “தனித்து” இருக்கிறது..

தொடர்ந்து எழுதுங்கள்..

பென்ஸ்
20-09-2012, 07:28 PM
ஹேமா...
ஊடல் என்றால், கூடலில் குதுகலமே...
சொல்ல வேண்டிய தேவை இருக்காது, சொல்லவும் முடியாது ...
நாட்களுக்கு பின் காணும் போது
மனதை கொடுத்துவிட்டு
இதழ்களை எடுத்து கொள்வான்....

இந்த பிரிவு நிரந்தரம் என்றால்.....
உங்கள் மனதிடம் சொல்லுங்கள்
நட்பு காதலை விட பலமானது என்று...

HEMA BALAJI
21-09-2012, 01:54 PM
சுபி சொன்னது போல மனசுக்குள் ஆழ ஊடுருவும் அணியாகக் கவிதை..

நினைவுக் கதிர்கள்
முதிர்ந்து விட்டன போலும்..
உன்னிலிருந்து
உதிர்ந்து விழுகின்றனவே..
நன்றி அமரன்..

HEMA BALAJI
21-09-2012, 01:55 PM
அழகானதொரு கவிதை ..தொடருங்கள் ஹேஹா அவர்களே

நன்றி திரு. குருதவசி, சரி அது என்ன ஹேஹா!!!!

HEMA BALAJI
21-09-2012, 01:56 PM
உங்கள் ஒரு சொட்டு கண்ணீருக்கு
இம்மன்றத்தில் எத்தனை பூக்கள்!
ஆனால் எங்கள் பாலைவனத்திலோ,
எத்தனை சொட்டுகள்!
இங்கே கண்ணீருக்கும் தனிமை!
உப்புபூ பூக்கும் பாலைச்சொட்டுகள்!

பின்னூட்டத்திற்கு நன்றிகள்..

HEMA BALAJI
21-09-2012, 01:57 PM
சிறப்பாக இருக்கிறது கவிதை.
மிகச்சிறப்பாக

எந்த உணர்வுக்கும் அடங்காத பிரிவைச் சொல்லிய மெளனம்... சொல்லமுடியாத ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டதைப் போல இருக்கிறது. பிரிவைச் சொல்லிய மெளனம்!! இழந்துவிட்ட நேரத்தில் ஏற்படும் மனநிகழ்வு. வார்த்தைகளை மறந்துபோன ஒரு தருணம். மிக அழகாய் வெளிப்படுகிறது கவிதையில்.

வார்த்தைகளை நன்கு பொறுக்கி எடுத்து கோர்த்து முத்துமாலை செய்திருக்கிறீர்கள்.

நீ அற்ற தனிமைகளை உன்னுடன் எப்படி பகிர்ந்து கொள்வது?? இந்த முரண் எல்லா தனிமை நிர்பந்திகளுக்கும் நிகழ்வது.

தனிமை பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை. என்றாலும் இந்த தனிமை, “தனித்து” இருக்கிறது..

தொடர்ந்து எழுதுங்கள்..
விவரித்து பின்னூட்டியதற்கு நன்றிகள் ஆதவா...

HEMA BALAJI
21-09-2012, 01:58 PM
ஹேமா...
ஊடல் என்றால், கூடலில் குதுகலமே...
சொல்ல வேண்டிய தேவை இருக்காது, சொல்லவும் முடியாது ...
நாட்களுக்கு பின் காணும் போது
மனதை கொடுத்துவிட்டு
இதழ்களை எடுத்து கொள்வான்....

இந்த பிரிவு நிரந்தரம் என்றால்.....
உங்கள் மனதிடம் சொல்லுங்கள்
நட்பு காதலை விட பலமானது என்று...

அழகான விளக்கம். மிக்க நன்றி பென்ஸ் அவர்களே..