PDA

View Full Version : சீனக் குட்டிக் கதை

சொ.ஞானசம்பந்தன்
04-08-2012, 11:20 AM
( கன்பூசியஸ் என்ற ஆங்கில நூலிலிருந்து )

மூன்று தையற்காரர்கள் ஒரே தெருவில் கடை திறந்தனர் . தாமே அதிக வாடிக்கையாளர்களைக் கவரவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்பினர் .

ஒருவர் பெரியதொரு விளம்பரப் பலகை நாட்டினார் . " இந்த மானிலத்திலேயே சிறந்த தையற்கலைஞன் நானே " என்று அதில் எழுதியிருந்தது .

இதை வாசித்த இரண்டாமவர் , இதற்கு மேலே போகவேண்டும் என எண்ணி , இன்னம் பெரிய பலகை மூலம் , " இந்த நாட்டிலேயே மிகச் சிறந்த தையற்கலைஞன் நான்தான் " எனத் தெரிவித்தார் .

மூன்றாமவர் பார்த்தார் ; இந்த உலகிலேயே சிறந்தவன் என்று விளம்பரப்படுத்தலாமா எனச் சில நாள் யோசித்தபின் ஒரு சிறு பலகை மாட்டினார் . அது அனைவரையும் கவர்ந்திழுத்தது மற்ற கடைகளைக் காலியாக்கி .

என்னதான் அறிவித்தது அது ?

" நானே சிறந்த தையற்காரன் , இந்தத் தெருவில் "

-------------------------------------------------------------------------------------

கீதம்
04-08-2012, 11:34 AM
மூன்றாம் தையற்காரனின் சமயோசிதம் வியக்கவைத்தது. தன் திறமை அறிந்தவன், கூடவே வியாபாரத் தந்திரமும் அறிந்தவன்.

சுவையானதொரு கதைக்கு நன்றியும் பாராட்டும்.

தீபா
04-08-2012, 11:35 AM
அடடே, அருமை. ரொம்ப வெட்டி வம்பு பேசாமல் சரியா சொல்லுபவர்களுக்குத்தான் இந்த உலகம் கையை நீட்டும்.

seguwera
04-08-2012, 12:47 PM
அருமையான கதை

kulakkottan
04-08-2012, 01:25 PM
" நானே சிறந்த தையற்காரன் , இந்தத் தெருவில் " அதிக பார்வையாளரை தேடி தரலாம் !
"உங்கள் விருப்பத்துக்கு தைக்கும் தையல் காரன் " இந்த வசனம் அதிக வாடிக்கையாளரை தேடி தந்திருக்கும் .

சொ.ஞானசம்பந்தன்
05-08-2012, 11:39 AM
மூன்றாம் தையற்காரனின் சமயோசிதம் வியக்கவைத்தது. தன் திறமை அறிந்தவன், கூடவே வியாபாரத் தந்திரமும் அறிந்தவன்.

சுவையானதொரு கதைக்கு நன்றியும் பாராட்டும்.

வாணிகத்தில் வெற்றி பெரத் தந்திரம் தெரியவேண்டும் ; அது அந்தத் தையற்காரரிடம் இருந்தது . பாராட்டுக்கு மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
05-08-2012, 11:41 AM
அடடே, அருமை. ரொம்ப வெட்டி வம்பு பேசாமல் சரியா சொல்லுபவர்களுக்குத்தான் இந்த உலகம் கையை நீட்டும்.

உங்கள் கருத்து முழுக்க முழுக்கச் சரி . பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
05-08-2012, 11:42 AM
அருமையான கதை

கதையைச் சுவைத்து அதனை எடுத்துக் கூறியமைக்கு மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
05-08-2012, 11:44 AM
" நானே சிறந்த தையற்காரன் , இந்தத் தெருவில் " அதிக பார்வையாளரை தேடி தரலாம் !
"உங்கள் விருப்பத்துக்கு தைக்கும் தையல் காரன் " இந்த வசனம் அதிக வாடிக்கையாளரை தேடி தந்திருக்கும் .

பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . நீங்கள் சொலவது சரிதான் .