PDA

View Full Version : மகிழ்ச்சி படிகள்



A Thainis
04-08-2012, 06:45 AM
விழுவதும் எழுவதும்தான்
வாழ்க்கை
ஏன் வீழ்ந்தோம்
எப்படி எழுந்தோம்
என உணர்ந்தால்
அதை அறிந்தால்
ஏற்றமோ இறக்கமோ
என்றும் வாழ்வின்
மகிழ்ச்சி படிகளில்
நாம் இருப்போம்.

- ஆ. தைனிஸ்

தீபா
04-08-2012, 06:50 AM
சாரி. நான் படிக்கட்டில் உறங்குவதில்லை..

சும்மா சும்மா.

நல்லாயிருக்கு, எத்தனை பேர் இதை புரிந்து கொல்வார்கள்?

கீதம்
04-08-2012, 06:57 AM
ஏன் வீழ்ந்தோம்
எப்படி எழுந்தோம்
என உணர்ந்தால்...


மிக மிக சரியான வரிகள். ஒரு தவறிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவற்றைக் கற்றுக்கொண்டு மறுமுறை செய்யாமல் தவிர்க்கும் வழியைக் கண்டுகொண்டால் வாழ்க்கை நலமாய் அமையும். அதை அழகாய் எடுத்தியம்பும் கவிதைக்குப் பாராட்டுகள் தைனிஸ்.

ஜானகி
04-08-2012, 09:12 AM
ஆமாம்...அநுபவ அறிவு எனும் ஏணியின் உதவியை நாம் எப்படி உபயோகிக்கின்றோமோ அதன்படித்தான் அமையும் நம் வாழ்வின் வெற்றியும் தோல்வியும் !

அனுராகவன்
04-08-2012, 10:30 PM
படியில் ஒரு படிமேல் ஏறி மகிழ்ச்சி கொள்ளும் நண்பா...என் வாழ்த்துக்கள்..