PDA

View Full Version : கரிகாலன்.... படிங்க... சிரிங்க (2)மதுரை மைந்தன்
04-08-2012, 03:04 AM
இளம் வழக்கறிஞர் சட்ட நாதன் தனது பால்ய நண்பர் ரங்கனை சந்திக்கிறான்.

ரங்கன்: என்னம்மா எப்படி கீறே?

சட்ட நாதன்: ஒண்ணும் சுகமில்லை. ஏதோ இருக்கேன்.

ரங்கன்: உனக்கு சட்டை நாத்தன்னு பேர் வச்சிருக்கணும்பா. என்னா இது உன் பக்கத்தில இருந்து இப்படி கப் அடிக்குது?

சட்ட நாதன்: எங்க குடும்பம் வழக்கறிஞர்கள் குடும்பம்னு என்னை சட்டப் படிக்க வச்சுட்டு கண்ணை மூடிட்டாங்க அப்பா அம்மா. வக்கீல் தொழில் ஆரம்பிக்கலாம்னு ஒரு போர்ட் தொங்க விட்டேன். ஒருத்தரும் வரலை. அப்புறம் ஒரு சீனியர் கிட்ட ஜூனியரா சேர்ந்து வேலை பண்ணினேன். அந்த ஆளு ஒரு கஞ்சன். எனக்கு காபி செலவுக்கும் பஸ் சார்ஜுக்கும் தான் பணம் தந்தார். வீட்டு வாடகை இதர செலவுகளுக்கு இந்த சோஹன்லால் மதன்லால் அம்பாலால்....

ரங்கன்: ஏய் நிறுத்து. ஒரு சேட்டுகிட்ட கடன் வாங்கினேன்னு சுருக்கமா சொல்லு. அதை விட்டுட்டு அவனோட குலம் கோத்திரம் எல்லாத்தையும் சொல்றே.அது சரி, கடனுக்கும் உன் சட்டை நாத்தத்துக்கும் என்ன சம்பந்தம். கடனோட கடனா ஒரு சோப்பை வாங்கி கருமத்தை துவக்க வேண்டியது தானே.

சட்ட நாதன்: பொறுமையா கேளு ரங்கா. கடன் கொடுத்த சேட் பணத்தை வட்டியோட சேர்த்து திருப்பிதற கிடுக்கிப்பிடி
போட ஆரம்பிச்சார். நானும் சாக்கு போக்கு சொல்லி தப்பிச்சு வந்தேன். ஆனா போன வாரம் யாரோ நாலைஞ்சு தடிப்பசங்க வந்து என்னை கையை முறுக்கி அவங்க தாதா கபாலி கிட்ட கூட்டிக்கிட்டு போனாங்க.

ரங்கன்: தனுஷ் படத்தில விவேக் தெலுங்கு தாதா முன்னாடி மூச்சா பேஞ்ச மாதிரி பண்ணினயா? அதான் உங்கிட்ட இப்படி கப் அடிக்குது.

சட்ட நாதன்: அப்படியெல்லாம் ஒண்ணும் பண்ணலை. சேட்டு கபாலிகிட்ட என்னைப் பத்தி போட்டு கொடுத்துட்டான்னு எனக்கு புரிஞ்சது. கபாலி என்னை முறைச்சு பாத்து " என்ன தம்பி வாங்கின பணத்தை திருப்பிதர மாட்டேங்கறயாமே. என்னோட ஆட்களை பாத்தியா அவங்க கிட்ட நான் சொன்னா போறும் உன்னை பிரிஞ்சு மேஞ்சுடுவாங்க. நான் முதல்ல அப்படித்தான் செய்யலாம்னு நினைச்சேன். ஆனா உன்னோட அதிர்ஷ்டம் உனக்கு தப்பிக்க ஒரு வாய்ப்பு இருக்குனு சொன்னான்.

ரங்கன்: அவனோட எதிரி ஆட்களை யாராயாவது நீ தீர்த்து கட்டணும்னு சொன்னானா?

சட்ட நாதன்: இல்லை. சின்ன வயசில காணாமா போன அவனோட பையனை கண்டுபிடிச்சு தரணும்னு சொன்னான்.

ரங்கன்: இது ஒண்ணும் அப்படி கஷ்டமான வேலையா தெரியலையே. பையனோட போட்டோவையும் அவனோட அங்க அடையாளங்களையும் கேட்டு வாங்கினீனா நாம் கண்டு பிடிச்சுடலாமே.

சட்ட நாதன்: அங்கே தான் என்னோட கஷ்டம் எல்லாம் இருக்கு. அவன்கிட்ட பையனோட போட்டோ இல்லையாம். கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு முன்னாலே மஞ்ச குப்பத்துல ஒரு குடிசைல அவன் வசிச்ச போது ஆறு வயசு பையனா இருந்தானாம் அவனோட பையன். அப்போ கபாலிக்கு ஒரு கேஸ்ல ஏழு வருசம் ஜெயில் வாசம் கிடைச்சதாம். வெளியே வந்து குப்பத்துக்கு போனா அனக்கே அவனோட குடிசை தீப்பிடிச்சு எரிஞ்சுபோனதாகவும் அவனோட மனைவி அதில இறந்து போய்விட்டதையும் கேள்விபட்டானாம். பையனை பத்தி விசாரிச்சப்போ பையன் தீ விபத்திலிருந்து தப்பிச்சு எங்கேயோபோயிட்டான்னு அறிஞ்சானாம்.

ரங்கன்: அட கஷ்ட காலமே பையனைப் பத்தி ஒண்ணும் தெரியாம எப்படி தேடறது?

சட்ட நாதன்: இப்போ புரிஞ்சதா? என் பையனை கண்டுபிடிச்சு கொடு நான் சேட்டு கிட்ட சொல்லி நீ தர வேண்டிய பணத்தை மாப் பண்ண சொல்றேன்னு அவன் சொன்னதுக்கப்புறம் எனக்கு சாப்பாடு தூக்கம் எல்லாம் பிடிக்கலை. இதில சட்டையை மாத்தணும்னு தோணலை. அவன் சொன்ன ஒரே ஒரு விஷயத்தில தான் என்னோட உசிரே இருக்கு.

ரங்கன்: என்ன விஷயம்பா?

சட்ட நாதன்: தீ விபத்து சமயத்தில அங்கே இருந்தவங்க பையனோட கால் தீயில கருகி போச்சுனு அவனை தருமாஸ்பத்திரில சேர்த்திருக்காங்க. அங்கே அவனுக்கு குணமாச்சா இப்போ எங்கேயிருக்கான்னு ஒருத்தருக்கும் தெரியாதுனு கபாலி சொன்னான்.

ரங்கன்: அப்போ நாம தேடப்போற பையன் ஒரு கரிகாலன்னு சொல்லு.

தொடரும்

jayanth
04-08-2012, 04:42 AM
முதலில் நகைச்சுவை என்று நினைத்தேன்...ஆனால் அப்படியில்லை போல் தெரிகிறதே...
தொடருங்கள்...

ஆவலுடன்...

கீதம்
04-08-2012, 07:09 AM
புத்துணர்வுடன் மீளவந்து கதை துவங்கியதற்கு நன்றியும் பாராட்டும் மதுரை மைந்தன் அண்ணா.

இப்போது பதினாறு வயது சிறுவனாய் இருக்கும் கரிகாலனை சட்டநாதன் கண்டுபிடிப்பாரா? கடனிலிருந்து மீள்வாரா?

தொடரும் பகுதிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

seguwera
04-08-2012, 01:32 PM
சட்டனாதன் சட்டை நாற்றத்தை விட ரங்கனின் தமிழ் உச்சரிப்பு நற்றம் தாங்க முடியவில்லை.
சட்டநாதன் கடனுக்கு விடிவு பிறக்கனும்.

அந்த கரிகாலன் கல்லணை கட்டினான், இந்த கரிகாலன் எதை கட்டபோறான் என்று பார்ப்போம்

மதுரை மைந்தன்
04-09-2012, 11:23 AM
சட்ட நாதனும் ரங்கனும் கரிகாலனை தேடுவது பற்றி யோசிக்கிறார்கள்.

சட்ட நாதன்: கபாலி எங்கிட்ட சொன்ன விவரங்களை வைச்சு பார்த்தா அவனோட பையனுக்கு இப்போ 16-17 வயசிருக்கும்னு நினைக்கிறேன். அதனால நாம ஊரில் உள்ள எல்லா வாலிபர்களையும் கண்காணிக்க வேண்டும். அதுக்கு ஏத்த இடம் கல்லூரி வாசல்கள் தான்.

ரங்கன்: கபாலியோட பையன் அதுவும் குப்பத்தில வளர்ந்த பையன் கல்லூரில படிப்பான்கிற. அவன் ஏதாவது க்ளினராகவோ, ஆட்டோ ட்ரைவராகவோ தான் இருப்பான். . எனக்கு ஒரு ஐடியா வந்திருக்கு. இங்கேயே இரு நான் இப்போ வந்துடறேன்.

சட்ட நாதனை நிறுத்தி வைத்துவிட்டு ரங்கன் சென்று பல நிமிடங்கள் கழித்து கையில் சில சாமான்களுடன் வருகிறான்.

சட்ட நாதன்: ஏய் ரங்கா என்னது கால் வைக்கிற ஸ்டாண்ட் அப்புறம் ஒரு சின்ன விளம்பர பலகை இதெல்லாம் எங்கேயிருந்து கொண்டுவந்தே. உன்னோட ஐடியா என்ன?

ரங்கன்: நீ சொன்னையே கால் வைக்கிற ஸ்டாண்ட். அது கரெக்ட். ஷூ பாலிஷ் போடறவர் அசந்திருந்தப்போ அழுத்திட்டு வந்துட்டேன். விளம்பர பலகையை ஒரு நடைபாதை ஜோஸியர் தூங்கிட்டு இருக்கச்சே லவுட்டிட்டேன்.

சட்ட நாதன்: இத வச்சு என்ன பண்ணப் போறோம்?

ரங்கன்: அங்கே தான் ஐயா நிக்கிறாரு. நாம் கால்ராஸி ஜோசியம் பார்க்க போறோம். இந்த கைராஸி ஜோசியம் மாதிரி வற்ரவங்க அவங்க காலை ஸ்டாண்டில வைக்கணும். நாம அவங்க உள் பாதத்திலிருக்கிற ரேகைகளை வைச்சு ஜோசியம் சொல்லப் போறோம். நடைபாதை ஜோசியரோட விளம்பர பலகைல ரேகைகளை விட்டுட்டு கையை அழிச்சு அந்த இடத்தில காலை வரையப் போறோம். பிஸியான ரோட்டில நடைபாதல கடையை போடப்போறோம். ஜோசியம் பாக்கற சாக்கில வற்ரவங்க போறவங்க கால்களை அதுவும் குறிப்பா பசங்க கால்களை பாத்து கரிகாலனை கண்டுபிடிக்கபோறோம்.

சட்ட நாதன்: இதில எனெக்கென்னவோ நம்பிக்கையில்லை. நீயே சொன்ன பையன் க்ளீனராகவோ ஆட்டோ ட்ரைவராகவோ இருப்பான்னு. அவங்க எப்படி ஜோசியம் பாக்க வருவாங்க?.

ரங்கன்: அதுக்கும் ஒரு ஐடியா வச்சிருக்கேன். கால் ராஸி ஜோசியம் விளம்பர போர்டில பெரிசா " நமீதா கால் ராஸி ஜோசியம்"னு எழுதிட்டா எல்லோரும் கட்டாயம் வருவாங்க.

ரங்கனும் சட்ட நாதனும் நடை பாதாயில் " நமீதா கால் ராஸி ஜோசியம்" கடையை பரப்புகிறார்கள். நடை பாதை வாசிகள் கடையை வேடிக்கையாக பார்த்துக் கொண்டு செல்கிறார்கள். சிறிது நேரம் கழித்து ஒரு கிராமத்து ஆசாமி காதில் கடுக்கனும் கையிடுக்கில் குடையுடனும் அவர்கள் கடை முன்னால் நிற்கிறார்.

கி.ஆசாமி: சாமி, என்ற கல்யாணியை கண்டு பிடிச்சு தருவீங்களா ?

ரங்கன்: ஆஹா! கல்யாணி நல்லா மூக்கும் முழியுமா இருப்பாளா?

கி. ஆசாமி: ஆமாங்க. மூக்கும் முழியும் பெரிசா இருப்பா. வாய் அசை போட்டுக்கிட்டு இருக்கும்.

ரங்கன்: என்னது வாய் அசை போடுமா?

கி. ஆசாமி: ஏனுங்க மாடுன்னா அசை போடத்தான செய்யும்.

ரங்கன் கல்யாணி ஒரு மாடு என்றதும் சுரத்தில்லாமல்: கிராமத்தில் காணாமப் போன மாட்டை பட்டணத்துல ஏன்யா தேடுற?

கி. ஆசாமி: நான் இங்க பட்டணத்தில சர்க்காரு கிட்ட பிராது குடுக்க வந்தேனுங்க. போற வழில உங்க கடையை பார்த்தேனுங்க. அதான் கேட்டேன்.

சட்ட நாதன்: சரி உங்க காலை இந்த ஸ்டாண்ட் மேல வைங்க.

கி.ஆசாமி காலை ஸ்டாண்ட் மேல் வைக்கிறார்.

ரங்கன்: உங்க மாட்டை தேடி ரொம்ப தூரம் நடந்திருக்கீங்க.

கி. ஆசாமி: அதெப்படி இவ்வளவு சரியா சொல்றீங்க.

ரங்கன்: எல்லாம் உங்க தேஞ்சு போன டயர் செருப்பை வச்சுதான். நீங்க உங்க வீட்டு தொழுவத்தில போய் பாருங்க. உங்க கல்யாணி அங்கே அசை போட்டுகிட்டு இருக்கும்.

சட்ட நாதன் ரங்கன் காதருகில் வந்து: எப்படி சொல்றே?

ரங்கன் சட்ட நாதனிடம் மெதுவாக: இந்த ஆளை பார்த்தா தோள்ல ஆட்டை போட்டுகிட்டு ஊரெல்லாம் தேடுறவர் மாதிரி இருக்கார். அதான்.

கி. ஆசாமி: சரியாத்தான் சொல்றீங்க. தொழுவத்தில கல்யாணி இருந்தா அடுத்தாப்பில பட்டணம் வறப்போ உங்களுக்கு ஒரு சீரு வாழைபழம் கொண்டாறேன்.. வரட்டுங்களா.

தொடரும்

கீதம்
05-09-2012, 10:20 AM
கால் ரேகை சோதிடம் நல்ல ஐடியாவா இருக்கே... எப்படியெல்லாம் விளம்பரங்கள் மூலம் மக்கள் முட்டாளாகிறார்கள் என்று நகைச்சுவையான உதாரணத்தோடு அழகா விளக்கியிருக்கீங்க. இப்படியெல்லாம் செய்து கரிகாலனைக் கண்டுபிடிக்க முடியுமா? ஆவலுடன் காத்திருக்கிறேன் அண்ணா.

aren
06-09-2012, 06:51 AM
பிழைக்க ஒரு புது வழியாக இருக்கு இந்த கால்ராசி ஜோசியம். நம் மக்கள் நிறைய பேர் இப்போதே எங்கே கடை போடலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள்.

கதை நன்றாக ஆரம்பித்திருக்கிறது. தொடருங்கள். படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.

jayanth
07-09-2012, 03:33 AM
சிரிப்பை அடக்க முடியவில்லை...

சுகந்தப்ரீதன்
07-09-2012, 07:44 AM
ரங்கனும் சட்ட நாதனும் நடை பாதாயில் " நமீதா கால் ராஸி ஜோசியம்" கடையை பரப்புகிறார்கள். நடை பாதை வாசிகள் கடையை வேடிக்கையாக பார்த்துக் கொண்டு செல்கிறார்கள். ஹி...ஹி.. நமீதா காலுக்கு ஜோசியம் பார்க்குறாங்கன்னு நினைச்சிட்டாங்க போலிருக்கு... பாவம் அந்த கிராமத்து ஆசாமி படிக்காதமேதையா இருப்பாரு போலிருக்கு..:lachen001: