PDA

View Full Version : நலமான வாழ்வு



A Thainis
03-08-2012, 01:55 PM
கருக்கல் கலையும் போதே
துள்ளி குதித்து துயில் கலைந்திடு
உற்சாக காற்றை - காலை
பொழுதினிலே சுவாசித்து மகிழ்ந்திடு
உடல் பயிற்சி செய்தே
உடல் உள்ள சோர்வை அகற்றிடு
இறைவனை தொழுதிடு நம்பிக்கையில்
புதிய நாளை தொடங்கிடு
சுறுசுறுப்பை அணிந்துக் கொண்டு
பம்பரமாய் சுழன்று
நாள் பொழுதும் உழைத்திடு
உண்மைதனை உதடுகள் உதிர்த்திட
நன்மையை எங்கும் விதைத்திடு
உலக செய்திகள் அறிந்திடு
உதவியென்றால் ஓடி செய்திடு
மனம் மகிழ பேசி
உண்டு உறவாடி வாழ்ந்திடு
பொழுதை இனிதே முடித்து
இரவில் அயர்ந்தே உறங்கிடு
நேரத்தை மதித்து - நீ
வாழ கற்றுக் கொண்டால்
உடல் உள்ள ஆன்ம சுகமும்
மதிப்பு மிகுந்த வாழ்வும்
என்றும் உனக்கு உண்டு

ஜானகி
03-08-2012, 03:01 PM
நலமான வாழ்வு பெற எளிதான வழிகாட்டி.....துணிந்து, முயன்று கடைப்பிடித்தால் நலமே....வாழ்த்துக்கள் !

அனுராகவன்
03-08-2012, 04:14 PM
நலமான வாழ்வு நல்ல வாழ்வு..
நன்றி நண்பா.....

jayanth
04-08-2012, 06:02 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/586930.gif (javascript:emoticonp(':கலக்கல்:'))

தீபா
04-08-2012, 06:26 AM
எளிமையான அறிவுரைகள், நன்றாக இருக்கிறது. சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். இதைப்போல் நிறைய அறிவுரை கவிதைகள் படித்தும் என்னால் அப்படியெல்லாம் டைம் டேபில் போட்டமாதிரி நடக்க முடியவில்லையே?*

aasaiajiith
04-08-2012, 06:32 AM
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு தீபா !

முழு மனதோடு முயன்று பாருங்கள் !

வாழ்த்துக்கள் !!!

A Thainis
04-08-2012, 06:38 AM
தீபா தங்களது வாழ்த்துக்கு நன்றி.
வாழ்கையை ஒழுங்குபடுத்த கால அட்டவணை போட்டாலே நீங்கள் சரியான பாதையில் செல்ல துவங்கி விட்டீர்கள்,
வாழ்க்கை என்பது முயற்சிதான், ஒவ்வொருமுறை தவறும்போதும் முயற்சிப்போம், வெற்றி நமதே.

தீபா
04-08-2012, 06:53 AM
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு தீபா !

முழு மனதோடு முயன்று பாருங்கள் !

வாழ்த்துக்கள் !!!

நன்றி aasaiajiith. முயற்சி செய்து பார்க்கிறேன் (என்று இங்கே சொல்லிக் கொள்கிறேன்)



தீபா தங்களது வாழ்த்துக்கு நன்றி.
வாழ்கையை ஒழுங்குபடுத்த கால அட்டவணை போட்டாலே நீங்கள் சரியான பாதையில் செல்ல துவங்கி விட்டீர்கள்,
வாழ்க்கை என்பது முயற்சிதான், ஒவ்வொருமுறை தவறும்போதும் முயற்சிப்போம், வெற்றி நமதே.

ஸ்கூல்டேய்ஸ்ல டைம் டேபிலைப் பார்த்து ரொம்ப அரண்டவள் நான்,
அதுக்கப்பறம் கட்டம் போட்ட எதையும் கண்டுக்கறதே கிடையாது.
வாழ்க்கையில அட்டவணையாவது கட்டவணையாவது.