PDA

View Full Version : எக்காளம்! - எக்காலம்? - இக்காலம் ஏக்கக்காலம்



ஆதி
03-08-2012, 10:24 AM
மன்றத்து வனத்தினிலே என்றைக்கும் பூத்திருந்த*
முந்தைய பூக்களெலாம் முகிழ்வதினி எக்கலாம்

காட்டாறு போலப்பல் பாட்டாறும் படைப்பாறும்
கூட்டாறாய் நித்தம்நிதம் கொட்டுவதும் எக்காலம்

தந்ததில் செய்துவைத்த சங்கத்து சிற்பம்போல
அங்கத்தோர் அனுதினமும் பங்களித்தல் எக்காலம்

அணுஅணுவாய் படைப்புகளை அணுகியுள் ளாராய்ந்து
நுணுக்கமான பின்னுட்டங்கள் நூற்பதுவும் எக்கலாம்

வளமான படைப்பிற்கு வடிவான பின்னூட்டத்தை
தளம்பூராம் இளசண்ணா தவழவிடல் எக்காலம்

சிலம்பமாடும் சாம்பவியும் சமராடும் யவனிகாவும்
கலகலப்பாய் ஓவியாவும் கலக்குவதினி எக்காலம்

வெடிக்கின்ற விவாதத்தில் நுரையீரலும் இதயமும்
வெடிக்கின்ற தருணங்கள் வந்திடுதல் எக்காலம்

ஓயாமல் அமரனும் ஓவியமாய் ஓவியனும்
காயமல் அக்னியும் கவிவரைதல் எக்காலம்

ஆபத்தாய் எனக்கிருந்த ஆ!பத்து திரியதற்கு
தூபத்தை போட்டு துவக்குவது எக்காலம்

தேக்கநிலை கொண்டுவிட்ட திரியில்லாம் தீமூட்டி
ஊக்கமலை கொடுத்ததை உயிர்ப்பித்தல் எக்காலம்

தொடரும்..

மதி
03-08-2012, 10:28 AM
தொடரட்டும்.. அக்காலம்!

சிவா.ஜி
03-08-2012, 10:47 AM
தட்காலில் விண்ணப்பிப்போம் தட்டாமல் அவர்கள் வரட்டும்...அக்காலம் மீண்டும் மலரட்டும்..எக்காலமும் அது தொடரட்டும்.

கீதம்
03-08-2012, 12:15 PM
படிக்கும்போதே ஏக்கம் பீறிடுகிறது ஆதன். பழைய திரிகளை எல்லாம் படிக்கும்போது மனம் உற்சாகத்தில் துள்ளுகிறது. அருமை ஆதன்.

அது ஒரு பொற்காலம் என்று ஆதங்கத்துடன் அன்று நானும் இப்படிதான் புலம்பினேன். மீண்டும் அக்காலம் வருமென்றே ஆவலுடன் காத்திருப்போம்.

சுகந்தப்ரீதன்
07-08-2012, 07:17 PM
ஆதன்... ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் எகத்தாளம்..?!:lachen001:

jayanth
07-08-2012, 09:29 PM
ஆதனின் அருமையான ஆதங்கம்...

ந.க
29-10-2012, 10:31 PM
சந்தமாய் சதிராடும் சொற்களில்
உறவாடும் பெயர்களை உலாவிட்ட
உத்தம நெஞ்சம்..........

jayanth
30-10-2012, 10:32 AM
ஆதி, தொடரக் காத்திருக்கின்றோம்...!!!

M.Jagadeesan
30-10-2012, 11:26 AM
ஏக்கத்தைக் காட்டும் கவிதை! அக்காலத்தில் நான் இல்லையே என்ற ஏக்கத்தைக் காட்டும் கவிதை! அருமையான கவிதை தந்த ஆதிக்கு நன்றி!